நவம்பர் 05, ஜார்கண்ட்:
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. மது கோடா, ரூபாய் 4000 கோடி ஊழல் வழக்கில் சிக்கி, ரத்த அழுத்தம் அதிகமான காரணத்தால் தற்பொழுது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது நாம் அறிந்ததே.
நேற்று பலத்த பாதுகாப்பையும் மீறி, காவலுக்கு இருந்த ஒரு கான்ஸ்டபிளுக்கு ரூபாய் 10 லஞ்சம் கொடுத்து, நமது நிருபர், கோடாவை பேட்டி கண்டார். அப்பொழுது கோடா மனம் வருந்தி, கண் கலங்கி தெரிவித்ததை கீழே கொடுத்திருக்கிறோம்.
இனி மது கோடா
“நான் 4000 கோடி ஊழல் செய்துவிட்டதாக அனைவரும் கூறுகிறார்கள். அது உண்மைதான். ஆனால் இந்த சமூகம் ஊழல் செய்பவர்களின் மேல் எப்படி ஓர வஞ்சனையுடன் நடந்து கொள்கிறது என்பதனை அனைவரும் உணர வேண்டும். உதாரணமாக சாதாரண வேலையில் இருக்கும் ஒரு அரசாங்க அதிகாரிக்கு வரும் வருமானத்தில் ரூபாய் 1,50,000 க்கு வருமான வரி விலக்கு இருக்கிறது. ஆனால் எங்களை மாதிரி ஊழல் செய்பவர்களுக்கு இந்த மாதிரி வருமான வரி விலக்கு இல்லை. இதை யாரும் கண்டித்ததாக தெரியவில்லை. நான் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ஊழல் செய்பவர்களுக்கு வருடம் ரூபாய் 4000 கோடி வரை வருமான வரி விலக்கு அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் போகிறேன். அத்துடன் 100 எம்.பிக்கள் கையெழுத்துப் போட்ட மனு ஒன்றையும் அளிக்க இருக்கிறேன். அந்த மனுவில் திரு.ராசா, திரு.லல்லு பிரசாத் யாதவ் போன்ற பிரபல ஊழல்வாதிகள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்”
இந்த செய்தியை தெரிந்து கொண்ட உளவுத்துறையினர், பிரணாப் முகர்ஜியிடம் இத்தகவலை தெரிவித்ததாகவும், திரு. மது கோடாவின் கதறலில் உள்ள உண்மையை புரிந்து கொண்டு, கூடிய விரைவில் வருமான வரி முறைகளில் மாற்றம் செய்யப்படும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இனிவரும் பட்ஜெட்களில் இந்த ஊழல் வருமான உச்ச வரம்பு சிறிது சிறிதாக உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.
சற்று முன் கிடைத்த செய்தி:
இத்தகவலை கேள்விப்பட்ட பலர், ரூபாய் 4000 கோடி என்பது திரு. மது கோடாவின் தனிப்பட்ட வேண்டுகோள் எனவும். எம்.பிக்கள் கலந்து பேசி ரூபாய் 8000 முதல் 9000 கோடி வரை வரி விலக்கு கேட்போம் எனத் தெரிவித்தனர்.
12 பின்னூட்டங்கள்:
கேடிங்கப்பா:))
:):):)
சபாஷ் நண்பர் பின்னோக்கி,
இப்படிதான் இவனுங்க கோவனத்தை உருவி ஓடவிடனும்.
உங்க கோபத்தை இவ்வளவு நகைச்சுவையாக வெளிப்படுத்துவது
ஒரு வித வரம் தான். தொடருங்கள், ஓட்டு போட்டாச்சு.
இந்த பதிவ மதுகோடா படிச்சுருந்தார்னா அவருக்கு ரத்த அழுத்தம் இன்னும் ஏறி இருக்கும்...நமக்கு சந்தோஷம் ஏறுது...சூப்பர் பின்னோக்கி :)
10 நிமிடத்தில் அவருக்கு 100 கையெழுத்துகள் அவருக்கு கண்டிப்பாக கிடைக்கும்.....
:-))
நகைச்சுவையுடன் நெத்தியடி
பத்து முறை முயற்சித்து உள்ளே வந்துள்ளேன். மழை பெய்தால் அகண்ட சேவை அகண்டு விடுகிறது.
உலகம் வட்டம் என்பதை இவர் மூலம் உணர்ந்தேன். நீங்கள் எளிதாக துப்பி விட்டு சென்று விட்டீர்கள்.
தெருப்பொறுக்கி,,,சுயேச்சை,,,,எம்மெல்ல,,,மனைவிஓடல்,,,,வாய்ப்பு,,,,மனைவி திரும்புதல்,,,,கோபுரம்,,,,குப்பை,,,,நெஞ்சுவலி.....சீல்..... கோர்ட்.....கேஸ்.... தெரு....
கடைசியில்-?
இது பதிவு....
ஊடகம் பரபரப்பு
கடைசி காலம் பக்கவாதம்....
சேர்த்த சொத்து கோடாவில் மேல் பிணத்தின் மேல் அடுக்கும் தென்னங்கீற்று.
வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது தான் ஒவ்வொரு முறையும் நினைவில் வந்து போகிறது.
இவர்கள் நாடு ஆளுவதற்கு தேவையான அறிவு 100 ஆண்டுகளுக்குப் பிறகு தான் கிடைக்கும்.
தூக்கத்தை கெடுத்து விட்டீர்கள் குமார்.
10 ரூ தானா......
இதில் தாழ்த்தபட்டவர்களுக்கு மேலும் சலுகை அளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் ( 1 லட்சம் கோடி வரை சலுகை வழங்க வேண்டுகிறேன் )
- ராசா "மாமனார்"
நகசுவையுடன்.. உண்மைகளை சொல்லிய விதம் அருமை
Pinneeteenga pinnokki :-)
Post a Comment