06 November 2009

அக்கா-அலாரம்-மகன்-நெல்


இளவரசன் என்ன ஆனான் ?
பூதத்தின் உயிர் எங்கே ?
அக்காவுக்கு கல்யாணம்


பேப்பர் போடும் பையன்
பக்கத்து வீட்டு சுப்ரபாதம்
தப்பாய் வைத்த அலாரம்





டோரா புஜ்ஜியை நிறுத்தலாம்
மின்னஞ்சல் படிக்கலாம
தூங்கிவிட்டான் மகன்




நாளை நெல் அறுவடை
உணவுக்கு கடும் பஞ்சம்
எலி வளையில்



படங்களுக்கு நன்றி:wildlifetrust.org.uk,chandamama.com,hiren.info,worldofstock.com

19 பின்னூட்டங்கள்:

நர்சிம் said...

//டோரா புஜ்ஜி நிறுத்தலாம்
மின்னஞ்சல் படிக்கலாம
தூங்கிவிட்டான் மகன்//

உண்மை உணர்வு பாஸ்

ஆ.ஞானசேகரன் said...

கடைசி இரண்டு அருமை...

அமுதா said...

/*இளவரசன் என்ன ஆனான் ?
பூதத்தின் உயிர் எங்கே ?
அக்காவுக்கு கல்யாணம்*/
இரசித்தேன்

ஜோதிஜி said...

தூங்க வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகின்றது?

பா.ராஜாராம் said...

நர்சிம் தளத்திலேயே பார்த்தேன்
தூங்கும் மகனை!
மற்றதும் ரொம்ப பிடிச்சுருக்கு!

யாரோ ஒருவர் said...

நாளை நெல் அறுவடை
உணவுக்கு கடும் பஞ்சம்
எலி வளையில்
ரசித்தேன்,எலிய பாத்தா பாவமா இருக்கு.

புலவன் புலிகேசி said...

அனைத்தும் அருமை. எத்தனை முரண்பாடுகள்.....

கனவுகளின் காதலன் said...

நண்பரே, முதல் கவிதை அருமையோ அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//பேப்பர் போடும் பையன்
பக்கத்து வீட்டு சுப்ரபாதம்
தப்பாய் வைத்த அலாரம்//

விளங்கியது..

அருமை...

creativemani said...

//நாளை நெல் அறுவடை
உணவுக்கு கடும் பஞ்சம்
எலி வளையில்//

அடடே!!! ஆச்சர்யக்குறி!!! :)

ஆ.ஞானசேகரன் said...

என் பக்கத்திற்கு வந்துவிட்டு செல்லுங்கள் அன்புடன் ஆ.ஞானசேகரன்

சிவாஜி சங்கர் said...

//டோரா புஜ்ஜியை நிறுத்தலாம்
மின்னஞ்சல் படிக்கலாம
தூங்கிவிட்டான் மகன்//
Cool..

geethappriyan said...

நண்பர் பின்னோக்கி,
நல்ல ஃபார்ம்,கலக்குங்க
ஓட்டுக்கள் போட்டாச்சு

Prathap Kumar S. said...

அடடே நல்லாருக்கே....

டோரா புஜ்ஜீ அருமை... பர்ஸ்டு கவிதை இந்த ட்யுப் லைட்டுக்கு பிரிலையங்க...

thiyaa said...

ஆகா... ஆகா ...

மாதேவி said...

அனைத்தும் நன்று.

ram said...

அலாரம், மகன் மற்றும் நெல் ரசித்தேன்... இளவரசன் என் தருமி மூளைக்கு எட்டவில்லை!!

butterfly Surya said...

அருமை..

சி. சரவணகார்த்திகேயன் said...

Those are good..
I have added it to the படித்தது / பிடித்தது - 81 series in my site:
http://www.writercsk.com/2010/02/81.html