11 November 2009

வெள்ளை உருவத்தில் வில்லன் [சர்வேசன்500 - நச் கதை 2009 - போட்டிக்கு]

கமலாவுக்கு புது இடத்திற்கு வந்த பின் உற்சாகமாக இருந்தது. முன்பு இருந்த இடம் 10 க்கு 10 என்ற கணக்கில் சிறிய இடம். நிறைய குடும்பங்கள் இருந்தன. எப்பொழுதும் ஒரே கூச்சல், குழப்பம், எங்கு பார்த்தாலும் அழுக்கு என்று நரகமாக இருந்தது. புதிய இடத்தில், இவளும், இரண்டு குழந்தைகள் மட்டுமே. அவர்களுக்கு விளையாட நிறைய இடம் கிடைத்தது.

“அம்மா ! இந்த இடம் நல்லாயிருக்கு. ஆனா விளையாடுறதுக்கு பழைய பிரண்ட்ஸ் மீனா, சந்தோஷ் இல்லை” என்றாள் பெரியவள் ரம்யா.

சின்னவள் கீதாவுக்கு, கமலா பின்னாடி சுற்றுவதிலேயே பொழுது போய்விடும்.

அன்று ரம்யா, கீதா சாப்பிடுவதை உறுதி செய்துவிட்டு, கமலா சற்று இளைப்பாறினாள். என்னவோ ரொம்ப சோம்பலாக உணர்ந்தாள். உணவு கூட சரியாக சாப்பிடமுடியவில்லை. தன் கணவன் ரவியை இழந்த அந்த நொடிகள் திரும்ப மனதில் ஓடியது. அவன் இருந்த போது என்னவொரு சந்தோஷம் குடும்பத்தில் ?. விதிதான் அவளை, அவனிடமிருந்து பிரித்தது. ரம்யாவும், கீதாவும் வளர்ந்த பின் அப்பா எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது என்று நினைக்கும் போதே கண்ணீர் எட்டிப்பார்த்தது. ம்ம்..அழுதால் தெரியவா போகிறது !.

ஒரு நாள் சாயங்கால நேரம், ஜன்னலருகே கமலா பார்த்த போது யாரோ நின்று கொண்டிருப்பதைப் போல இருந்தது.

“யார் அங்க நிக்கிறது ?” என்று கேட்டுக்கொண்டே ஜன்னலருகே வந்தாள். யாரும் இல்லை. ஆனால் ஒரு உருவம் அங்கிருந்து போனதை மட்டும் பார்க்க முடிந்தது. அது கண்டிப்பாக ஒரு ஆண் தான். வெள்ளை மீசை மற்றும் நீலக் கண்கள்.

பயத்தில் “ரம்யா, கீதா” என்று கத்தினாள்

“இங்கதாம்மா விளையாடிக்கிட்டு இருக்கோம்” என்ற பதில் கேட்டு கமலாவுக்கு சற்று பதற்றம் குறைந்தது.

கமலாவுக்கு வயதானாலும் பள பளப்பான மேனி. யாரும் பார்த்தவுடன் வயதை குறைத்து தான் சொல்லுவார்கள். ரவிக்கு அவளிடம் பிடித்தது அவளது கண்களும், உடல் நிறமும் தான். பல முறை புகழ்ந்திருக்கிறான். இப்பொழுது அதுவே அவளது பயத்திற்கு காரணமாக இருந்தது. தனியாக வாழும் பெண், பாதுகாப்புடன் வாழ முடியுமா என்ற கவலை.

காலை வேளை கீதா இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தாள். ரம்யாவும் கமலாவும் ஜன்னலருகே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் அது நிகழ்ந்தது !. ரவியை, அவளிடம் பிரித்த அதே வெள்ளை உருவம், பின்னாலே வந்து ரம்யாவை தூக்கியது. கமலா, ”ரம்யா ! ரம்யா” எனக் கத்த ஆரம்பித்தாள்.

“அம்மா ! அந்த குட்டி மீன வலையில எடுத்துட்டேன்”

“சீக்கிரம் அந்த பக்கெட் தண்ணியில போடு கிஷோர், இல்லைன்னா செத்துடும். மத்த ரெண்டு மீனையும் நான் எடுக்கிறேன். டேங்க் கிளீன் பண்ணிட்டு உன்னை கூப்பிடுறேன். அப்புறம் வந்து பாரு.”

”அம்மா ! அன்னைக்கு டாமி டேங்க் வெச்சுருக்குற டேபிள் மேல நின்னு, மீன பார்த்துகிட்டே இருந்துச்சும்மா ! நான் வந்தவுடனே என்ன பார்த்துட்டு ஓடிடுச்சு”

“பூனைங்க, மீன தின்னுடும். நான் டேங்க் கிளீன் பண்ற வரை, டாமிய பக்கத்துல கொண்டு வராத”

25 பின்னூட்டங்கள்:

vasu balaji said...

/அவளது கூந்தலும்/

இங்க கோட்டை விட்டாச்சா? எனக்கு புரியலையா. நல்லா இருக்கு=))

பின்னோக்கி said...

கோல்ட் ஃபிஷ் வாலு தான் கூந்தல் :) எவ்வளவோ நம்பிட்டீங்க. இத மட்டும் நம்பலைன்னா எப்படி ?

அமுதா said...

/* ம்ம்..அழுதால் தெரியவா போகிறது */
கலக்கிட்டீங்க ராம்

creativemani said...

மீனுங்களுக்கு பேரு வச்ச ஒரே ஆளு நீங்கதான் தலைவா... :)

geethappriyan said...

நண்பர் பின்னோக்கி,
நல்ல சாதுர்யமான கதையமைப்பு, நான் கூட ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியாபோலன்னு நினைத்தேன், நல்ல சிந்தனை.ஓட்டுக்கள் போட்டாச்சு

ப்ரியமுடன் வசந்த் said...

குட்..யோசிக்க வச்சதுக்கு ரெண்டுவாட்டி திரும்ப படிக்க வச்சதுலயே நீங்க ஜெயிச்சுட்டீங்க..சூப்ப்பர்

Anonymous said...

ரொம்ப அருமையா இருக்கு. சர்வேசனோட நச்னு சிறுகதைப்போட்டிக்கு இதை அனுப்புங்க.

Anonymous said...

//ரவிக்கு அவளிடம் பிடித்தது அவளது கூந்தலும்,//

மீனுக்கு கூந்தல் எல்லாம் இருக்கா :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரொம்ப அருமையா இருக்கு

பின்னோக்கி said...

இது எனது முதல் முயற்சி. பாராட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி. சர்வேசன் கதைப் போட்டிக்கு எப்படி அனுப்புவது என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லுங்கள்.

Mohan said...

ரொம்ப நல்லா இருக்குங்க!

ஸ்ரீராம். said...

Suspense Thriller. I mean மீனுக்கு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கமலாவுக்கு வயதானாலும் பள பளப்பான மேனி. யாரும் பார்த்தவுடன் வயதை குறைத்து தான் சொல்லுவார்கள்//

இந்த வரிகளுக்காகவே கூகிள் தேடு மூலமாக நிறைய வருகை இருக்கும் தல..,

ஜெட்லி... said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

சிவாஜி சங்கர் said...

மச்சான் சாச்சுபுட்டாங்க மச்சான்....

பின்னோக்கி said...

நன்றி - ஸ்ரீராம்
நன்றி - SUREஷ் - என்னோட நோக்கம் அதில்லைங்கோங் :)
நன்றி - ஜெட்லி
நன்றி - சிவாஜி சங்கர் :)
நன்றி - மோகன்

CS. Mohan Kumar said...

மீன்கள் பற்றி ஒரு கதை. வித்யாசமாகவே உள்ளது. வாழ்த்துக்கள். எனது பதிவிற்கு தங்கள் -comment-க்கும் நன்றி பின்னோக்கி

Anonymous said...

இரண்டு தடவை படித்தேன் புரியல,உடனே பின்ன்னூட்டத்த படித்தேன்,ஓ ஹோ மீன் கதை,திரும்ப ஒரு தடவை படித்தேன் ரொம்பவே ஸூப்பர் கற்பனை.

பின்னோக்கி said...

நன்றி - மோகன் குமார், திருமதி ஜெயசீலன்

சந்தனமுல்லை said...

ட்விஸ்ட் நல்லாருக்கு..கடைசியில் ஏதோ ட்விஸ்ட் இருக்கிறதென்று முன்பே ஊகிக்க முடிந்தாலும் - தங்கள் மொழி நடை சுவாரசியமாக்குகிறது!! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!!

/அமுதா said...

/* ம்ம்..அழுதால் தெரியவா போகிறது */
கலக்கிட்டீங்க ராம்
/

அவ்வ்வ்வ்...கொண்டை?!! :)))))

Anonymous said...

Top 20 ல வந்துட்டீங்க, வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

சர்வேசன் டாப் 20 லிஸ்ட்டில் செலெக்ட் ஆனதற்கு வாழ்த்துக்கள். (டாப் 20 ல் நானும் கூட ஓரமா இருக்கேன் )

பின்னோக்கி said...

தகவலுக்கு நன்றி சின்ன அம்மிணி, மோகன் குமார். மோகன் வாழ்த்துக்கள்.

thamizhparavai said...

ஹி..ஹி.. வாழ்த்துக்கள்...

Anonymous said...

Idhule enna 'Nach' irukkunnu yosichitte, comments padichein..appuram dhan therinchadhu idhu 'manidhargalai uvamai paduthi, meengalai hero vaakkiyirukkum kadhai' nnnu..! vithiyasamana sindhanai.. "BlueCross" ku kandippa pidikkum..:) 5 arivu uyirgalin paasa unarvai alagaha 'represent' panniadharku..oru Umma..:) - Chitthan