13 November 2009

உடனே தப்பிக்கணும் !!!

எங்கே இருக்கிறேன் என்றேத் தெரியவில்லை. ஒரே இருட்டு. சத்தம் துளி கூட இல்லை. சத்தமே இல்லையென்றால் ங்கொய்ங்ங்... என்ற சத்தம் கேட்குமே அனுபவித்திருக்கிறீர்களா ?. நான் அனுபவிப்பது இது தான் முதல் முறை.

கொஞ்சம் முயன்று எழுந்து உட்கார முடிந்தது. நிற்கலாம் என்றால் தலை இடித்தது. அடித்துப் போட்டது போல உடலில் வலி. கொஞ்சம் நகர்ந்து, இந்த அறையின் கதவு எங்கே என்று தேட வேண்டும். கதவு இல்லாத அறை என்று ஒன்று இருக்காது என்ற நம்பிக்கைதான்.

அட..மெதுவாக நகர முடிகிறது இப்போது. இருட்டில் இலக்கில்லாமல் மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கிறேன். என் பின் புறத்தில் சிறிய வெளிச்சம் தெரிகிறது. திரும்ப கடினமாக இருந்தது, திரும்பினேன். வெளிச்சத்தைப் பார்த்து மெல்ல நகர்ந்தேன்.

எதோ சத்தம் கேட்கிறது. யார் என்னை அடைத்து வைத்திருப்பது ?. அவர்களின் நோக்கம் என்ன ? என்னை என்ன செய்யப் போகிறார்கள். பயம் அதிகமானது.


“ஒரு நாள் பொறுத்துக்கலாம். இவன் அப்பனுக்கு போன் பண்ணுனியா ?”

“போன் பண்ணுனேன் !. பணத்த நாளைக்கு கொண்டு வர வேண்டிய இடத்த சொல்லிட்டேன். போலீசுக்கு போனா, உன் மகன பொணமாத்தான்
பார்ப்பன்னு மிரட்டினதுல பயந்த மாதிரி தான் இருந்தது”

“எனக்கும் நம்பிக்கை இருக்கு. அவன் போலீசுக்குப் போக மாட்டான். ஒரே பையன். அவனுக்கு இல்லாத பணமா ? நாம கேட்டது அவனுக்கு ஒரு தூசு”

“சரி ! நாளைக்கு பணம் கைக்கு வந்த உடனே சொல்லு. இவனக் கொன்னு, நாம ஏற்கனவே பார்த்த இடத்துல புதைச்சுட வேண்டியது தான்”

”எதுக்கு நாளைக்கு வரை காத்திருக்கணும். இப்பவே இவன முடிச்சுட்டா என்ன ?”

“அட முட்டாள் !. இவன் அப்பன் திடீர்ன்னு பையன்கிட்ட பேசுனாத்தான் பணம் குடுப்பேன்னு முரண்டு புடிச்சான்னா என்ன பண்றது ?”

“ஆமாம் ! நீ சொல்றது சரிதான்”

அடப்பாவிங்களா கொல்லவே திட்டமா ? எனக்குத் தலை சுற்றுகிறது மயக்கம் வருகிறது. இறுதி முயற்சி, கதவை முட்டி திறக்க முடியுமா ? முயன்று பார்க்கி....

“நார்மல் டெலிவரி. பையன். ஹெல்தியா இருக்கான். நர்ஸ் கொண்டு வருவாங்க” - என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்றார்.

“ரொம்ப தேங்ஸ் டாக்டர்” - என்றாள் திலகம்.
.
.
.

”கீதா ! ஏண்டி என் பேரன் அழுதுகிட்டே இருக்கான் ?”

”என்னன்னு தெரியலைம்மா. திடீர்ன்னு கத்த ஆரம்பிச்சுட்டான்.”

”இதுக்குத் தான் சொன்னேன். இவன் வயித்துல இருக்கும் போது கொலை, கொள்ளைன்னு மெகா சீரியலா பார்த்துக்கிட்டு இருக்காத, கந்த சஷ்டி கவசம் கேளுன்னு. நீ கேட்டாத்தானே” - என்று தன் மகளைத் திட்டினாள் திலகம்.

21 பின்னூட்டங்கள்:

vasu balaji said...

என் இடுகைல அவ்ளோ சீன் போட்டது இதுக்குதானா=)) நல்லா இருக்கு.

கலகலப்ரியா said...

athu seri..! ean inthak kolai veri...!

geethappriyan said...

”இதுக்குத் தான் சொன்னேன். இவன் வயித்துல இருக்கும் போது கொலை, கொள்ளைன்னு மெகா சீரியலா பார்த்துக்கிட்டு இருக்காத, கந்த சஷ்டி கவசம் கேளுன்னு. நீ கேட்டாத்தானே” - என்று தன் மகளைத் திட்டினாள் திலகம்.//

மீண்டும் ஒரு நல்ல சிறுகதை,பன்சும் அருமை
ஓட்டுக்கள் போட்டாச்சு

ஜெட்லி... said...

சீரியல் பாத்து கெட்டு போனவங்க நம்மூர்ல பல பேர் இருக்காங்க ..

ஸ்ரீராம். said...

Voted.

ஆமாங்க...நீங்க சொல்றது சரிதான்...அந்த நேரத்தில் நல்ல விஷயங்கள்தான் காதுல விழணும்...

நர்சிம் said...

பிடித்திருந்தது.

சிவாஜி சங்கர் said...

:) supperappu..

Prathap Kumar S. said...

அய்யா இப்படி எத்தனை பேரு கிளம்பிருக்கீக...எல்லா தடவையும் ஏமாந்து போறேனே...

நல்லாருக்கு...

அன்புடன் அருணா said...

அட!!பயந்துட்டேன்!

பின்னோக்கி said...

வானம்பாடி அவர்களே, நான் கதை எழுத மாட்டேன் என்று உங்களின் இடுகையில் சொன்ன பிறகு 1000த்துக்கும் மேற்பட்ட போன் கால்கள் - உங்களை மாதிரி எழுத்தாளர்கள் நாட்டுக்குத் தேவைன்னு. சரி இலக்கியச் சேவை ஆஆஆற்றலாம்னு :-)

பின்னோக்கி said...

நன்றி கலகலப்பிரியா, கார்த்திக்,ஜெட்லி, ராம்,நர்சிம்,நாஞ்சில்,அன்புடன் அருணா

ப்ரியமுடன் வசந்த் said...

சூப்பர்ப்..தொடர்ச்சியா கலக்கல்ஸ்...

ஜெயந்தி said...

நல்லாயிருக்குங்க கதை. உண்மைதான். குழந்தை வயிற்றில் இருக்கும்போது மனதுக்கு அமைதி தரக்கூடிய நிகழச்சிகள் மற்றும் இதமான இசை போன்றவற்றை கேட்கச் சொல்வார்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகா எழுதியிருக்கீங்க.. :)

Admin said...

அருமையாக எழுதி இருக்கிங்க..

பா.ராஜாராம் said...

பிடிச்சிருக்கு பாஸ்!

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்... நல்லா வந்திருக்கு நண்பா,...

CS. Mohan Kumar said...

நல்ல நடை. நல்லா வந்திருக்கு. என்னோட கட்டுரை முதல் முறையா யூத் விகடனில் வந்திருக்கு. இந்த link -ல் படிக்கவும்.

http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar13112009.asp

To read it in my blog: http://veeduthirumbal.blogspot.com

Anonymous said...

A small appreciation... http://the-nutty-s.blogspot.com/2009/11/blog-post_16.html

அமுதா said...

:-)

Anonymous said...

நான் ரொம்ப லேட்டா வந்திருக்கேன்.
பின்னோக்கி நீங்க
தொடர்ந்து முன்னோக்கி
போய்ட்டிருக்கீங்க.
சூப்பர் பதிவு!