6 மாதம் கழித்து vlc மீடியா ப்ளேயர் மற்றும் சப்-டைட்டில்கள் அறிமுகம் கிடைத்த உடன், இன்னும் அதிகமான வசனமுள்ள படங்களைப் பார்ப்பதற்கு தைரியம் (??!!!) வந்தது.
Sixth Sense பார்த்த பிரம்மிப்பில், அந்த படம் மாதிரி, முடிவில் டிவிஸ்ட் உள்ள படங்களைப் பார்ப்பது என்று தீர்மானித்து, அது போன்ற படங்களான The Prestige, The Game, The Mist, Usual Suspects, The Departed, The Others, Momento, The Illusionist, Fight Club, The Village, Skeleton Key, Stay, Saw 1, Unforgettable, The Spannish Prisoner, Identity, Matchstick Men, Next பார்த்தேன். நேற்று அந்த மாதிரி பார்த்த டிவிஸ்ட் படம் Orphan.
திருடுவதற்கு உகந்த வைரம், தங்கம், பணம். நுணுக்கமான திட்டம். அதை செயல்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினை. இது போல வந்த படங்களில் நான் பார்த்தது Italian Job, Inside Man, The Bank Job, The Score, Flawless, The First Great Train Robbery, Dog Day Afternoon, A Perfect Murder, Femme Fatale, Ocean's Eleven.
தமிழ் படங்களைப் போல பாசம், சோகம் போன்ற உணர்வுகளை மையமாக வைத்து, 2 மணி நேரங்கள் ஓடும், நிறைய வசனங்களுடன் கூடிய சில நான் பார்த்த ஆங்கிலப் படங்கள் The Shawshank Redemption, Casino, Heat, A Beautiful Mind, Flash Of Genius, Zodiac, The Curious Case of Benjamin Button , Forest Gump, Cast Away, Blood Diamond, Arlington Road , Troy, Before SunRise, Before Sunset, Mystic River, Hotel Rwanda, The Lost King of Scotland
மேலே குறிப்பிட்டுள்ள பல படங்கள் வெவ்வேறு காலங்களில் நடக்கும் கதை. பீரியட் படங்களை அவர்கள் எடுக்கும் நேர்த்தி பிரம்மிப்பூட்டுகிறது. ஆங்கிலப்படங்கள் நன்றாக இருந்தாலும், அதை தமிழ் படங்களுடன் ஒப்பிட்டு, தமிழ் படங்களை மட்டம் தட்டுவது எனக்கு தேவையில்லாத செயலாகப் படுகிறது. அவர்களின் கதைக்களன், வாழ்வியல், செலவழிக்கும் பணம் மற்றும் உலகலாவிய ரசிகர்கள் என்று வேறுபாடுகள் மிக அதிகம்.
ரசிப்பதற்கு The Shawshank Redemption னும் வேண்டும் குத்துப்பாட்டுக்களுடன் கூடிய தமிழ் படங்களும் வேண்டும்.
நன்றி:
கீதப்ப்ரியன்
ஹாலிவுட் பாலா
மச்சான்ஸ்
imdb.com
19 பின்னூட்டங்கள்:
நல்ல லிஸ்ட். :)
///ரசிப்பதற்கு The Shawshank Redemption னும் வேண்டும் குத்துப்பாட்டுக்களுடன் கூடிய தமிழ் படங்களும் வேண்டும்.///
உண்மைதான் பின்னோக்கி.
Perfume: The Story of a Murderer.பாருங்க
நல்ல படம்.
http://www.imdb.com/title/tt0396171/
இதுல பெரும்பாலான படம் பார்த்திருக்கேன். மற்றவை டிவிடியா பத்திரமா இருக்குது. நேரம்தான் கிடைக்கலை :(
ரொம்ப நல்ல அனுபவம்.கலக்கல் லிஸ்ட்ங்க..
-Toto
www.pixmonk.com
List படிக்கவே ரெண்டு நாள் ஆகும் போல...படம் எங்கங்க பார்க்கறது.....
The Village, The Sixth Sense, are night shyamalan films , he is tamilian . more info go to : http://www.imdb.com/name/nm0796117/
Good one.
அருமை நண்பர் பின்னோக்கி.
அருமையான பதிவு, நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட படங்களில் சிலவற்றை தவிர அனைத்தையும் பார்த்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
நல்ல பட தொகுப்பு நன்றி.
நன்றி வானம்பாடி - இந்த படம் எல்லாம் பார்த்திருக்கீங்களான்னு சொல்லாமலே எஸ்கேப் ஆகிட்டீங்க :)
நன்றி இளவட்டம் - படத்திற்கு நன்றி. பார்க்கிறேன்.
நன்றி சென்ஷி - நீங்க பார்க்காத படம் இன்னும் வெளியாகாத படம் மட்டுமே :)
ராம் - இதுல சில படங்கள கண்டிப்பா பாருங்க.
நன்றி - அஹோரி - பேர்லயே பயமுறுத்துறீங்களே :)
நன்றி - சரவணக்குமார்
நன்றி ToTo, Tamilbeat - தகவலுக்கு நன்றி
நல்ல லிஸ்ட். நானும் இந்த படங்களை எல்லாம் பார்க்க ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன்.
அருமை நண்பர் பின்னோக்கி,
நலம் தானே? ஆளையே காணவில்லையே?
இங்கு சென்னையில் தான் இருக்கிறேன், விரைவில் சந்திப்போம்.இரண்டு தினங்களாக உறவினர்களை முழுவதும் பேசி சந்தித்தேன். விரைவில் பார்ப்போம்.
============================
நல்ல கட்டுரை.
ஓட்டுக்கள் போட்டாச்சு
நல்ல பகிர்விற்கு நன்றி
english padamaa?
/*ரசிப்பதற்கு The Shawshank Redemption னும் வேண்டும் குத்துப்பாட்டுக்களுடன் கூடிய தமிழ் படங்களும் வேண்டும்.
*/
கரெக்ட் தான்.
நல்ல ரசனை உங்களுக்கு!
வேற்று மொழி படங்கள் பார்ப்பவர்களுக்கு ஏற்ற பதிவு.
நான் பொதுவாகவே சினிமாபக்கம் போவதில்லை.ஆனால் நிறைய கலெக்ஷன்ஸ் வைத்திருக்கிறேன்.
நீங்க கொடுத்திருக்குற லிஸ்ட்ல இன்னும் ஏகப்பட்ட படம் பார்க்க வேண்டி இருக்கு...
அப்பப்ப இந்த மாதிரி போட்டு விடுங்க...
Post a Comment