10 September 2010

அப்’பாவி’ப் பெண் - துப்பறியலாம் வாங்க

டெக்சாஸ் - தீயணைப்புப் பிரிவில் வேலை பார்த்த தாம்சனுக்கு,  2000ஆம் வருடம் மிக மோசமாக இருந்தது. முதலில் தீயணைப்பு வண்டியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார். பிறகு நடந்த அறுவை சிகிச்சையில் தொற்று ஏற்பட்டு மீண்டு வந்தார்.

ரு நாள் காலை, தாம்சனுக்கு வயிற்றில் நெருப்பு எரிவது போல் இருந்தது. திடகாத்திரமான 32 வயது இளைஞன், இவ்வளவு நோய்வாய்ப்பட்டு யாரும் பார்த்ததில்லை. வயிற்றைத் தாக்கும் ஒரு வைரஸ் நோய்க்கு மருந்து சாப்பிட்டதில் உடல் நிலை தேறினார். இரண்டு நாள் கழித்து, மனைவி, லின் செய்து தந்த ஸ்வீட் டீ மற்றும் சாண்ட்விச்சை சாப்பிட்டு விட்டு, ஓய்வு எடுக்கப்போனவர், கொஞ்ச நேரத்தில் போய் சேர்ந்துவிட்டார்.

தாம்சனின் அகால மரணம் அனைவரையும் உலுக்கிவிட்டது. என்ன ஆயிற்று அவருக்கு?. மருத்துவ ரிப்போர்ட்டில், இருதயக்கோளாறு தான் மரணத்திற்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அளவுக்கு அதிகமாக இருதயம் வீங்கியிருந்தது. தாம்சனின் அம்மாவுக்கு இதை நம்பவே முடியவில்லை. தாம்சனுக்கு இருதயக்கோளாறு எதுவும் இல்லை.

மாண்டவர் மீண்டுவருவதில்லையே !. அழுது அரற்றிய லின்னுக்கு கிடைத்த, தாம்சனின் இன்சூரன்ஸ் தொகையான 35,000 டாலர், இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்கு போதுமா ?. அதிலும் ஒரு பெரிய சோகம். 2 லட்சம் டாலருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்த தாம்சன், 15 நாட்களுக்கு முன், தவணையைக் கட்ட மறந்ததால், பாலிசி காலாவதியாகிவிட்டது. இறந்தும் தாம்சனுக்கு அதிர்ஷ்டமில்லை; முக்கியமாக லின்னுக்கும்.

2 வாரம் கழித்து, தாம்சனின் அம்மாவிற்கு, அடுத்த ஊரிலிருந்து ஒரு கடிதம் வந்தது.

6 வருடங்களுக்கு முன் ஜான் முதலில் வயிற்று வலியால் அவதிப்பட்டு, பின் சரியாகி, அடுத்த 2ஆம் நாள் மரணமடைந்தார். போஸ்ட்மார்டத்தில், தாறுமாறான இருதயத்துடிப்புதான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஜானின் அம்மாவுக்கு சந்தேகம் இருந்தாலும், போலீசார், மேற்கொண்டு விசாரணை செய்யவில்லை.

சரி ! ஜானுக்கும், 2 வாரத்திற்கு முன் இறந்துபோன தாம்சனுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா ?. இருவரும் அரசாங்கப் பணியில் இருந்தவர்கள். இந்த ஒற்றுமையைத் தவிர இன்னொன்றும் இருக்கிறது. அது ! லின். 6 வருடங்களுக்கு முன் ஜானின் மனைவியாக இருந்தவள், லின்.

லின்னின் இரண்டு கணவர்களின் திடீர் மரணம் தற்செயலான ஒன்று என நம்பமுடியவில்லை. சிறு பொறியாக இருந்த சந்தேகம் லின்னைப் பற்றித் தெரிந்ததும், பற்றி எரியத்தொடங்கியது. தாம்சன் மற்றும் ஜானின் போஸ்ட்மார்டத்தில் கண்டறியப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்ட ஒரு விஷயம்;  இருவரது கிட்னியிலும் இருந்த “கால்சியம் ஆக்ஸலேட்” என்று வஸ்து. ஆனால், இருவரது உடலிலும் எந்த ஒரு விஷமும் கண்டறியப்படவில்லை.


கால்சியம் ஆக்ஸலேட் உடலில் வருவதற்கு, எத்திலின் க்ளைக்கால் (Ethylene Glycol) என்ற ரசாயனப் பொருள் காரணம். தாம்சனின் பரிசோதனையில், எத்திலின் க்ளைக்காலின் அளவைப் பரிசோதிக்கையில் கணக்கில் சிறிய தவறு நேர்ந்திருந்தது. அதனை சரிசெய்தபின், தாம்சனின் உடலில் இருந்த 10 மடங்கு அதிக எத்திலின் க்ளைக்கால்தான், மரணத்திற்கு காரணம் என்று உறுதிசெய்ய்யப்பட்டது.

த்திலின் கிளைக்கால் என்பது, குளிரினால் வாகன எரிபொருள் உறையாமல் தடுக்க கலக்கப்படும் ஆண்டி ஃப்ரீஸ் என்ற ஒரு பொருள். புதைக்கப்பட்ட ஜானின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு செய்யப்பட்ட பரிசோதனையில், உடலில், எத்திலின் க்ளைக்கால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லின்னைப் பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிந்த உண்மைகள்:


  • தாம்சன் புதைக்கப்படும் நேரத்தில், இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, தன் செல்போன் மூலம் மூன்று முறை தொடர்புகொண்டு, பாலிசி பணம் விரைவில் கிடைக்குமாறு லின் கேட்டிருக்கிறாள்.

  • தாம்சன் இறப்பதற்கு சில நாள் முன், பிராணிகள் காப்பகத்திற்குச் சென்று, பூனைகளைச் சாகடிக்க எந்த விஷத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்று லின் கேட்டிருக்கிறாள். சந்தேகம் கொண்டு, அந்தக் காப்பகத்தின் உரிமையாளர், விஷத்தின் பெயரைக் கூற மறுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, லின்னுக்கு வேறு வழியில்லாமல் போனது. ஜானை சாகடிக்க பயன்படுத்திய அதே “ஆண்டி ஃப்ரீஸ்”சையே உபயோக்கிக்க முடிவு செய்தாள்.

  • லின்னின் பேங்க் மேனேஜர், லின் கிட்டத்தட்ட 35,000 டாலர் கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தத்திலிருந்ததைத் தெரிவித்தார். தாம்சன் இறப்பதற்கு 2 வாரங்களுக்கு முன், லின் பேங்க்கிற்கு வந்து, கடனை 2 வாரங்களின் அடைப்பதாக உறுதியளித்திருந்தாள்.

  • லின்னின் கடன் வாங்கும் மற்றும் பணம் செலவழிக்கும் வேகம், இந்தியா, உலகவங்கியின் கடன் வாங்கும் வேகத்தைக் காட்டிலும் அதிகமானது. ஜான் இறப்பதற்கு முன், தன் நண்பர்களிடம், லின் செலவழிக்கும் வேகத்தைப் பற்றி புலம்பியிருக்கிறார்.

  • ஜான் இறந்ததும், இன்சூரன்ஸ் பணம் 1,50,000 டாலர் + மாதாந்திர பென்ஷன் தொகை 750 டாலர், லின்னுக்குக் கிடைத்திருக்கிறது. தாம்சன் இறப்பதற்கு முன் லின் மேல் சந்தேகமடைந்ததாலேயே, தன் 2 லட்சம் டாலர் பாலிசிக்கு தவணைக்கட்டாமல் இருந்திருக்கிறார். இது லின்னுக்குத் தெரியாமல் போனது, லின்னின் துரதிருஷ்டமே.

  • விசாரணையில் தெரியவந்த இன்னொன்று, தாம்சனை, லின் திருமணம் செய்யாமலே சேர்ந்துவாழ்ந்தது. அதற்குக் காரணம், தாம்சனை திருமணம் செய்துகொண்டால், ஜானின் பென்ஷன் தொகைக் கிடைக்காது என்பது.
எத்திலின் க்ளைகால் போன்ற ஒரு ரசாயனம் உணவில் கலந்திருந்தால், உண்பவருக்கு சுவை தெரியாமல் இருந்திருக்குமா ?. எத்திலின் க்ளைகாலை, எதாவது இனிப்பு உணவுடன் சேர்க்கும்போது, அதன் ரசாயன நாற்றம் தெரியாமல் போய்விடும். இந்த வழக்கு முடிந்த உடன், அரசாங்கம், எத்திலின் க்ளைகாலில் கசப்புச் சுவையை சேர்க்கச் சொல்லி உத்தரவிட்டது. (நம் ரேஷன் கடையில் வினியோகிக்கப்படும்  மண்ணென்ணையில், நீல நிறம் கலப்பது போல).

லின் - இவ்வளவு சின்ன பெயரை வைத்துக்கொண்டு செய்த குற்றமோ மிகப்பெரியது. அதற்குப் பரிசு, இரண்டு ஆயுள் தண்டனை. லின்னின் பெயர் உலகத்தின் மிகப்பெரிய வில்லிகளின் பட்டியலில் நீங்கா இடத்தைப் பிடித்தது.

15 பின்னூட்டங்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

அடடே!! ரொம்ப அப்"பாவி"யா இருந்திருக்காரே இந்தப்பெண்!!

vasu balaji said...

அடிப்பாவி

வால்பையன் said...

அழகா தான் இருக்கா! ஆனா எனக்கு உயிர் வேணுமே! :)

Chitra said...

இதை கண்டுபிடித்த துப்பறியும் துறையினரை பாராட்டியே ஆக வேண்டும். வாவ்!

geethappriyan said...

நண்பரே
மீண்டும் திக் பக் பக் ஆரம்பித்தமைக்கு நன்றி,இது போல பெண்களை பார்க்ககூடாது என்று பயந்து வருது,இன்னும் உள்ளயா?வெளியவா?

பின்னோக்கி said...

நன்றி

## சைவகொத்துப்பரோட்டா
## வானம்பாடிகள்
## வால்பையன் - :)
## சித்ரா
## கார்த்திக் - 2 ஆயுள். வெளியே வரவே முடியாது. அங்கயெல்லாம் அண்ணா பிறந்தநாள் கிடையாதே :)

Unknown said...

//- 2 ஆயுள். வெளியே வரவே முடியாது. அங்கயெல்லாம் அண்ணா பிறந்தநாள் கிடையாதே :)//

அது மட்டுமில்லை. தனிமைச் சிறையில போட்டுருவாங்க. ரூம் வசதியாத்தான் இருக்கும்னாலும் மனுசங்க மூஞ்சியவே பாக்காம வருஷக்கணக்கா இருக்கிறதை யோசிச்சுப் பாருங்க?

Prathap Kumar S. said...

சுவாரஸ்யம் பின்னோக்கி...
இந்த மாதிரி துப்புறியும் பதிவுகள் இப்போ அதிகமா எழுதறதில்லையே...நிறைய எழுதுங்க...

எஸ்.கே said...

என்னோட ஃபேவரைட் மீண்டும் ஆரம்பித்ததற்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சார்!

செளமியன் நற்குணன் said...

இதுபோன்ற ”படுபாவிகள்” அப்பாவிகளாய்!!!!!! எத்தனை பேர் வாழ்விலோ!!!!??

thiyaa said...

பகிர்விற்கு நன்றி!

பின்னோக்கி said...

நன்றி

$$ நாஞ்சில்
$$ எஸ்.கே - கண்டிப்பாக எழுதுகிறேன்.
$$ செளமியன் நற்குணன்
$$ தியாவின் பேனா

thiyaa said...

அடிப்பாவி

மாதேவி said...

வால்பையன் said... ஹா..ஹா.

Anisha Yunus said...

நல்ல பதிவுகள் அண்ணா,

இதற்கெல்லாம் காரணம் தேவையில்லாத சாமஙளால் வீட்டை நிறைக்கும் ஆசையும் மார்க்கெட்டில் வந்துள்ள எல்லா புது டிரெண்டையும் தன் வீட்டிலும் வைத்து தம்பட்டமடிக்க விரும்பும் எண்ணமும்தான். பெரும்பாலான அமெரிக்கர்களின் வாழ்வும் சாவும் அதிலேயே உழல்வதுதான் வேதனை. நல்ல பதிவுகள், சுவாரசியமான தமிழாக்கம். வாழ்த்துக்கள்..!!