02 April 2011

கிரிக்கெட்டை விட்டுவிடுங்கள்...

121 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில், இன்னும் சற்று நேரத்தில் அனைவரும் டி.வியின் முன் அமர்ந்திருப்பார்கள் (நானும் விரைவில் இந்தப் பதிவை முடித்துவிட்டு கிரிக்கெட் பார்க்கவேண்டும்).

கடந்த 40 நாட்களாக கிரிக்கெட் தூற்றப்பட்டது. கிரிக்கெட் பார்ப்பவர்கள் பலராலும் தூற்றப்பட்டார்கள். தேசபக்தியைப் பற்றி பலரும் எழுதித்தள்ளினார்கள். கிரிக்கெட் பார்ப்பது மற்றும் நமது அணி வெற்றிபெற வேண்டும் என நினைப்பது எப்படி தேசபக்தியாகாது என்ற விளக்கங்களும் நமது தேசியகீதம் ஜார்ஜ் மன்னரைப் புகழ உருவாக்கப்பட்டது என்ற மாபெரும் உண்மையும் இந்திய மக்களுக்கு உணர்த்தப்பட்டது.

ஒரு மாத காலமாக

 * 2ஜி, ஆதர்ஷ், காமென் வெல்த் போன்ற ஊழல் மலிந்து நாடே குட்டிச்சுவராக போய்கொண்டிருக்கையில் கிரிக்கெட்டைப் பற்றி எல்லாரும் பேசிக்கொண்டிருப்பது இந்த நாட்டுக்கு எவ்வளவு பெரிய கேட்டை விளைவிக்கக்கூடும் ?

* காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை அரசின் அடக்கு முறையினால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலையில்லாமல் எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் பற்றி கவலை கொள்வது நியாயமா ?

* போபால் மற்றும் இலங்கையில் உயிரிழந்த மக்களைப் பற்றி துளிகூட கவலையில்லாமல் என்ன கிரிக்கெட் வேண்டியிருக்கிறது ?

இது போன்ற பல கட்டுரைகளை படித்து மனம் நொந்துபோயிருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

இந்தியத் திருநாட்டில் ஊழல் இல்லாத நாள், அடக்குமுறையினால் மக்கள் மரிக்காத நாள், கொலை, கொள்ளை இல்லாத நாள் என்று ஒன்று இருக்கிறதா ?.

தினம் தினம் செத்துப்பிழைக்கும் மக்கள் இன்று ஒரு நாள் கிரிக்கெட்டை பார்த்து சந்தோஷப்படட்டுமே ! தினம் தினம் கவலையில் உழலும் மக்கள் இன்று ஒரு நாள் சந்தோஷப்படட்டுமே.

கிரிக்கெட் ரசிகர்களையும் கிரிக்கெட்டையும் இன்று ஒரு நாள் விமர்சிக்காமல் விட்டுவிடுங்களேன்.

7 பின்னூட்டங்கள்:

geethappriyan said...

சூப்பர் நண்பரே

Rajesh Ganesh said...

அருமை பின்னோக்கி அவர்களே !!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கிரிக்கெட் ரசிகர்களையும் கிரிக்கெட்டையும் இன்று ஒரு நாள் விமர்சிக்காமல் விட்டுவிடுங்களேன்.//
அடுத்த பதிவுக்கு டாபிக் கிடைச்சாச்சு.

ப.கந்தசாமி said...

வளர்க கிரிக்கெட். வாழ்க சோம்பேறிகள்.

Prathap Kumar S. said...

hahaha... ஒரே அடியா பிரச்சினைகளை மறக்காம இருந்தா சரி.... கடைசில ராசா, கல்மாடி யாருன்னு கேட்டிடக்கூடாது...:))

Rettaival's Blog said...

குறை கூறுவது நம்முடைய தேசிய வியாதி! கண்டுகொள்ளாதீர்கள்!

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிட்வுக்குப் பாராட்டுக்கள்.