26 January 2011

வட்டம்

(90 சதவிகித உண்மை 10 சதவிகித கதை இது)



பைக்கை சைட் ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு, அழைத்த செல்போனை எடுத்தான், மோகன்.

சொல்லு, பரணி ! என்ன விஷயம் ?”.
மாப்ளே, நம்ம ஜெய் இருக்கானில்ல, அவன் 1 மணி நேரத்துக்கு முன்னாடி, பைக்ல போய்கிட்டிருந்தப்போ, திருப்பத்துல வந்த பஸ்ல மோதி, ஆக்ஸிடண்ட். ராஜா ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்கடா”.

மோகன் ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்த போது, எல்லாம் முடிந்திருந்தது. ஜெய் ! போயே போய்விட்டான். காலையில் பார்த்து கலாய்த்த ஜெய் இப்பொழுது இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.

கொடுமை பரணி. கல்யாணமாகி ஒண்ணரை வருஷம், மூணு மாசத்துல ஒரு குழந்தை. இப்ப போய் சேர்ந்துட்டான். எல்லாத்துலயும் அவசரம்” தலையில் கையை வைத்துக்கொண்டு சொன்னான் மோகன்.

நம்ம சுந்தர் கல்யாண விருந்துக்காக, தண்ணி வாங்கிட்டு, ஃபுல்லா ஏத்திக்கிட்டு வண்டி ஓட்டியிருக்கான். குடிச்சுட்டு வண்டி ஓட்டுனதால இப்ப இன்ஸூரன்ஸ் பணமும் வராதுடா” என்றான் ரமணி.

ஹாஸ்பிடல்ல எல்லாம் முடிந்து, வீட்டுக்கு எடுத்துப் போகப்பட்டான் ஜெய். என்ன நடந்தது என்று இன்னும் புரியாத நிலையில் ஜெய்யின் மனைவி. அழுதபடி அவன் குழந்தை.

”டேய் ! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கணும்டா. சிங்கம் மாதிரி இருக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். ரெண்டு சிங்கம்; நடுவுல அவன் சேர்ல உட்கார்ந்திருக்குற மாதிரி போட்டோ போட்டுடலாம்”.

காலையில் பைக்கில் போனவன், அன்று சாயங்காலத்தில், நாலு பேர் தூக்க, போய் சேர்ந்தான்.

டேய் ! இப்பத்தான்டா கொஞ்சம் கொஞ்சமா, அவன் இல்லைங்கிறதே உறைக்குதுடா. எனக்கு ஒரு கிளாஸ் ஊத்துடா” என்றான் மோகன்.

போதும்டா ! ரொம்ப ஓவராய்டுச்சு உனக்கு. நீ வீட்டுக்கு கிளம்பு. வண்டி ஓட்டிடுவ இல்ல !” என்றான் பரணி.

”என்னைய என்ன கண்ட்ரோல் இல்லாதவன்னு நினைச்சியா ! போடா”, என்று தள்ளாடியபடி, மோகன் பைக்கை கிளப்பினான்.

பைக்கை சைட் ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அழைத்த செல்போனை எடுத்தான், முரளி.


மாப்ளே, நம்ம மோகன் இருக்கானில்ல, அவன் 1 மணி நேரத்துக்கு முன்னாடி, பைக்ல போய்கிட்டிருந்தப்போ, திருப்பத்துல வந்த பஸ்ல மோதி, ஆக்ஸிடண்ட். ஸ்பாட்லயே போய்ட்டான்டா” என்றான் பரணி.

7 பின்னூட்டங்கள்:

Chitra said...

பரணிக்கும் இந்த கதை தொடர்ந்து என்று மட்டும் சொல்லாதீங்க.... :-(

King Viswa said...

இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் என்ன காரணத்துக்காக ஓட்டுறாங்க (குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் மரணம் என்று) தெளிவாக சொன்னால் உண்மையிலேயே இது போல விபத்துகள் நடக்காது.

அமுதா said...

இது தற்கொலை.... சில வேளைகளில் இது கொலையில் முடியும்... சில நாட்கள் முன் மின்னஞ்சல் வந்திருந்தது குடித்துவிட்டு வண்டி ஓட்டி யாரையோ இடித்துச் செல்ல, சிறுவன் ஒருவன் இறந்த தங்கைக்கு தாயிடம் கொடுக்க பொம்மை வாங்கி செல்ல வந்தது போல்...ஒரு நொடியில் குடியால் ஒரு குடியைக் கெடுப்பது...அது தன் குடும்பமோ பிற குடும்பமோ .. குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்கள் சிந்தித்தால் பரவாயில்லை...

ஸ்ரீராம். said...

சங்கிலித் தொடர்...
பழைய பாடல் - நடிகர் அசோகன் சொந்தக் குரலில் பாடியது - நினைவுக்கு வருகிறது. "இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான்...அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்.."

Unknown said...

உணமைலே கடந்த வாரம் என் நண்பன் குடித்துவிட்டு கார் ஓட்டியதில் மரணம் அடைந்தான்.......இது போல சம்பவங்களை கேட்டதுக்கு அப்புறமாவது மக்கள் திருந்தினால் பரவாயில்லை

Anisha Yunus said...

ஹ்ம்ம்... 99% நடக்கவும் சான்ஸஸ் இருக்கே இப்பத்திய stress filled lifeல?

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு