01 October 2009

கல் தோன்றி மண் தோன்றா


இடம்: மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அருங்காட்சியகம்.
கடந்த வருடம் சென்ற போது எடுத்த படங்கள் இவை.

அத்திரம்பாக்கம் என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது கிடைத்த ஆதி கால மனிதன் உப்யோகித்த கருவிகள். இது சுமார் 1 லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என வல்லுனர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள.

இது முதுமக்கள் தாழி எனப்படுகிற, பழந்தமிழர்கள் இறந்தவர்களை, இறக்கும் தருவாயிலுள்ளவர்களை புதைக்க உருவாக்கிய மண் குடம். அறிவியல் சோதனையில் சுமார் 2500 வருடங்களுக்கு முற்பட்டது என கண்டுபிடித்துள்ளனர். எகிப்து மம்மிகள் போல இவைகள் பிரபலபடுத்தப் படவில்லை.


கடந்த காலங்களில் தமிழ் எழுத்துக்கள் எந்த மாதிரி உருமாறி இருக்கிறது என்பதனை, மேலே உள்ள படம் நமக்கு காட்டுகிறது.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி என்பதனை நிரூபிக்க உதவும் சான்றுகள் இவை.

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

பதிவு அருமை. நாம் காலத்தால் தவற விட்டது பல இன்னும் தவற விட்டுக் கொண்டு உள்ளது பல. இவை பல உயிர்களை ஈடுவைக்க காரணமாகி விட்டது எனவே இவ்வாறான பதிவுகள் தொட வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

பொருள் பொதிந்த அர்த்தமான வார்த்தைகள்.

உங்கள் பெயரை கல்வித்தகுதியை பணிபுரிந்து கொண்டுருக்கும் பணியை தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். கிட்டத்தட்ட சின்ன சுஜாதா போலத்தான் எனக்குத் தெரிகிறது. உங்கள் படைப்புகள் அத்தனையுமே? நாலைந்து துறைகள் குறித்து 0 கூட தெரியாது. ஆனால் உங்களின் ஆளுமை வியக்க வைக்கிறது. அதைவிட உங்களின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.

Prathap Kumar S. said...

சூப்பர் பதிவு... இன்னும் இதுபோல எதிர்பார்க்கிறேன்.