13 October 2009

பெண்ணும் சாஃப்ட்வேர் இஞ்சினியரும்


வழக்கமா பெங்களூர் போகனும்னா, 2வது கிளாஸ், சேர் கார்ல தான் போவேன். அந்த தடவை ஏசில போய் பார்க்கணும்னு ஆசை, போனேன். முதல்ல கொஞ்ச நேரம் புதுசா இருந்துச்சு. புதுவிதமான மனுஷங்க. கொஞ்சம் அந்நியமா உணர்ந்தேன். வழக்கம் போல கேண்டீன்க்கு போய் சாப்ட்டுட்டு வந்தா, என் சீட்டுல ஒரு பொண்ணும் பையனும், ஒரே கம்பளி போர்த்தி சுருண்டு போய் உட்கார்ந்திருந்தாங்க. அந்த பொண்ண பார்த்தேன், என் சீட் நம்பர் பார்த்தேன். நம்பர் கரெக்ட்தான். ஆனா அந்த பொண்ணுக்கிட்ட எந்த முக மாற்றமும் இல்ல. ஓ !, ஒரு வேளை, கேண்டீன்ல இருந்து வரும்போது தப்பா கணக்கு போட்டு, வேற கோச்சுக்கு வந்துட்டேனோ ? தப்பா வந்ததும் இல்லாம அந்த பொண்ண வேற பார்த்து, அவங்கள வேற கடுப்பாக்கிட்டோமேன்னு நினைச்சுகிட்டு, அடுத்த கோச் போய் கேட்டா, c3 ன்னாங்க. என்னோடது c2. ஓ ! அப்ப பசி மயக்கத்துல ரொம்ப தூரம் வந்துட்டோம் போல, அடுத்த கோச் போகலாம்னா, அது தான் கடைசி ஏசி கோச். இந்த தடவை என் டிக்கெட்ட ஒரு தடவை பார்த்துட்டு, திருப்பி அந்த பொண்ணு உட்கார்ந்துருக்குற சீட் என்னோடதுன்ற முடிவுல வந்தா, அந்த பொண்ணு, போர்வையில இருந்து தலைய நீட்டி “சாரி !!, நீங்க ஒரு தடவை வந்து பார்த்துட்டு போனீங்க, இது உங்க சீட்டுன்னு தெரியலை, எங்களுக்கு தனித்தனியா சீட் கிடைச்சுருக்கு, நீங்க எங்க சீட்ல உட்கார முடியுமா ? நாங்க இங்க உட்கார்ந்துக்குறோம்”. நல்லா இரும்மான்னு மனசுக்குள்ள சொல்லிட்டு, அந்த பொண்ணு சீட்டுல வந்து உட்கார்ந்தேன்.

*****

கொஞ்ச நாள் முன்னாடி குருவாயூர் போனப்ப, அப்பர் பெர்த். ஏறி படுத்துட்டேன். கீழ் சீட்டுல 4 வயசானவங்க (60 வயசு இருக்கும்). குரூப்பா வந்துருப்பாங்க போல. அவங்க பேசறத கேட்டுக்கிட்டே படுத்திருந்தேன்..
.....
.....
.....
“சார் !! இந்த சின்ன பசங்க தொல்லை தாங்கலை”
“ஏன் அப்படி சொல்றீங்க ?”
“பின்ன என்ன சார்..நாம 25 வருச சர்வீஸ் பண்ணி வாங்குற சம்பளத்த, இவனுங்க முதல் மாசத்துல வாங்குறாங்க”
“விடுங்க சார்... இப்ப பார்த்தீங்கள்ள ?...சத்யம் கம்பியூட்டர்ல வேலை பார்த்தவன் எல்லாம் நடுத் தெருவுக்கு வந்துட்டானுங்க”
“கார் என்ன, செல் போன் என்ன..அவனுங்க போட்ட ஆட்டம் ஆண்ட்வனுக்கே பொறுக்கலை”
“கம்பியூட்டர்..கம்பியூட்டர்ன்னு படிச்சவங்க யாருக்கும் இனிமே வேலை கிடைக்க போறதில்லை”
“ஆமாம்..அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு பிளைட்லயே பறந்துகிட்டு இருந்தானுங்க..இப்பதான் தரையில இறங்கிருக்காங்க”

அப்ப 4 ரொம்ப ரொம்ப சின்ன மனசுக்காரங்க பேசிக்கிட்டு இருக்காங்கன்னுட்டு...கண்ண மூடி தூங்க ஆரம்பிச்சேன்.

11 பின்னூட்டங்கள்:

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

கொடுமை தான்,
இப்படியா வயிறெரிவது?
அவர்கள் பிள்ளைகள் இப்படி வாங்கினால் இனிக்குமா?
அவர்களுக்கு வேலை போனால் ருசிக்குமோ?

அவங்க கிட்டேருந்து லோயர்பர்த்தை பிடுங்கி இருக்கனும்.

ஒட்டுக்கள் போட்டாச்சு

பின்னோக்கி said...

கார்த்தி. உங்களுக்கு வந்த கோபம் தான் எனக்கும் வந்தது. ஆனால், அந்த ராத்திரி வேளையில் விவாதம் நடத்தி அவர்களுக்கு புரியவைக்க முடியாது என விட்டுவிட்டேன். இவர்கள் என்று இல்லை, ஊடகங்களும் கம்பியூட்டர் துறையிலிருப்பவர்களை பற்றி அவதூறாக தான் எழுதி வருகிறது. சில நாட்களுக்கு முன் கூட ஒரு வலைப்பதிவர், கேவலமாக எழுதியிருந்தார் :(

Anonymous said...

முதல் சம்பவம் :(

ரெண்டாவது சம்பவம் வயத்தெரிச்சல். அவங்களுக்கு
நானும் ஓட்டுப்போட்டாச்சு

jackiesekar said...

“சாரி !!, நீங்க ஒரு தடவை வந்து பார்த்துட்டு போனீங்க, இது உங்க சீட்டுன்னு தெரியலை, எங்களுக்கு தனித்தனியா சீட் கிடைச்சுருக்கு, நீங்க எங்க சீட்ல உட்கார முடியுமா ? நாங்க இங்க உட்கார்ந்துக்குறோம்”. நல்லா இரும்மான்னு மனசுக்குள்ள சொல்லிட்டு, அந்த பொண்ணு சீட்டுல வந்து உட்கார்ந்தேன்.--

உங்களுக்கு ரொம்ப எளகின மனசு

கதிர் - ஈரோடு said...

இஃகிஃகி


பாவம்ங்க நீங்க

கலையரசன் said...

ஆமா... இவனுங்க இன்னம் உயிரோடையா இருக்கானுங்க?

குடுகுடுப்பை said...

இத மாதிரி நிறைய வயித்தெரிச்சல் கோஷ்டிங்க இருக்கு இந்த தலைமுறையில் கூட.

பின்னோக்கி said...

நன்றி சின்ன அம்மிணி , ஜாக்கி, கதிர், கலையரசன், குடுகுடுப்பை. உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும். கம்பியூட்டர் துறையினரால் எவ்வளவு பேருக்கு (படிக்காதவர்களுக்கு) வேலை வாய்ப்பு கிடைக்கிறது என நமக்கு தெரியும். உணரும் காலம் வரும் விரைவில்.

..:: Mãstän ::.. said...

<<<
அப்ப 4 ரொம்ப ரொம்ப சின்ன மனசுக்காரங்க பேசிக்கிட்டு இருக்காங்கன்னுட்டு...கண்ண மூடி தூங்க ஆரம்பிச்சேன்.
>>>

நிறையா பேர் இப்படி சின்ன புத்தியுடன்தான் இருக்கின்றனர். அவர்க்ள் கூறுவது ஓரளவுக்கு நியாயம்தான், நமது நாட்டில் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு மட்டும் மிக அதிக சம்பளம். மக்கள் சமத்துவத்துடன் வாழ ஆரம்பிக்க வேண்டும் என்றால் அனைவருக்கும் நல்ல சம்பளம் வேண்டும். எல்லரும் IT வந்துட்டா விவசாயம் செய்றது யாரு? விவசாயம் செய்கிறவன் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கான்? இதே நீங்க வெளிநாடுகளில் பார்த்தத விவசாயம் செய்பவன் கூட கார் பங்களான்னு அனைவர் கூடவும் சமமா வாழ்துகிட்டு இருப்பான்.

எனது எண்ணம்லாம், எல்லாரும் சமமா இருக்கனும், ஒரு சிலர் மட்டுமே மிக மிக வசதியா வாழ்றாங்க. இங்கு பிட்சா கார்னர்ல பிட்சா சாப்பிடுறவன் வாயை தெருவில் நிற்கும் குழந்தை வேடிக்கை பார்த்து கொண்டுருக்கும்.

பா.ராஜாராம் said...

அருமையான நடை நண்பா.

பிரசன்ன குமார் said...

//வழக்கமா பெங்களூர் போகனும்னா, 2வது கிளாஸ், சேர் கார்ல தான் போவேன். அந்த தடவை ஏசில போய் பார்க்கணும்னு ஆசை, போனேன்//

சாஃப்ட்வேரில் இருப்பவர்களில் எனக்கு தெரிந்த பலர் தங்கள் குடும்ப கடன் களையே இன்னும் அடைத்து கொண்டு இருக்கிறார்கள். அனைவரும் டாடா பிர்லா அல்ல.

நல்ல பதிவு.