துணுக்ஸ் எழுத வேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசை. பேர் வைக்குறத்துக்காக ரொம்ப யோசிச்சேன். எல்லா பேரையும் ஏற்கனவே வெச்சுட்டாங்க. நானும் எவ்வளவு நாளா யோசிக்கிட்டேயிருக்குறது ? சொல்லுங்க. இந்த தலைப்பில யாராவது எழுதிட்டு இருந்தா வேற தலைப்பு யோசிக்கிறேன்.
[-^-^]
என் அண்ணனின் பொண்ணுக்கு பிறந்த நாள். ஹோட்டலுக்கு போன போது மெனு கார்டைப் பார்த்துவிட்டு,
“டாடி, லாம்ப் கறின்னா என்ன ?” என்றாள்
“ஆட்டுக்கறி” என்றார் என் அண்ணன்.
அடுத்தது “தாய் லாம்ப் கறி” ன்னு போட்டிருந்ததை பார்த்துவிட்டு, “ஓ! முன்னாடி இருக்குற ஆட்டோட அம்மா கறியா ?” என்று கேட்டாள்.
[-^-^]
”கால்சியம் மாத்திரை சாப்பிடு.”
”புடலங்காய் தினமும் சாப்பாட்டுல சேர்த்துக்கோ.”
”ஆப்ரேஷன் வரை போகலைல்ல சந்தோஷப்படு.”
”வெயிட்ட குறைக்கணும். கால் சரியான உடனே தினமும் உடற்பயிற்சி செய்.”
“காலை அசைக்காம வெச்சுருந்தா, கட்ட பிரிச்ச உடனே, நடக்குறத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். மூளை அந்த கால் இல்லைன்னு நினைச்சுக்கும்”
“Aspiration done" அப்படி ரிப்போர்ட்ல போட்டிருக்காங்க. கூகிள்ள என்னனு பாருங்க.
“ஆபிஸ்ல இந்த தசை நார் பிரச்சினைக்கு இவ்வளவு பெரிய கட்டு போடணுமான்னு கேட்கிறாங்க. நீ பார்த்த டாக்டர் நல்ல டாக்டர் தானே ?”
“என்னடா !!! 7 வருஷத்துக்கு அப்புறம் இன்னொரு கால் கட்டா ?”
“கட்டுக்குள்ள எறும்பு எதுவும் போகாம பார்த்துக்கோ. போச்சுன்னா, அதுங்க ப்ரெண்ட்ஸ் எல்லாத்தயும் கூட்டிக்கிட்டு வந்து கும்மாளம் போட ஆரம்பிச்சிடும்”
இதெல்லாம் என்னை, என் காலை பார்க்க வந்தவர்களின் கமெண்ட். இன்றுடன் 5 நாள் ஆச்சு கட்டு போட்டு. கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் இருப்பதால், சில நேரம் கட்டு போட்டிருப்பதை மறந்து (அய்யயோ !! மூளை மறந்துடுச்சா ? கடவுளே இது என்ன சோதனை ?) காலை எடுத்து மேலே போட முயற்சி செய்கிறேன்.
விடுமுறை நாட்களில் வெளியே போகும், மிகவும் சுறுசுறுப்பான, ஓரிடத்தில் கொஞ்ச நேரத்துக்கு மேலே இருக்க முடியாத ஆளாக இல்லாததால் எளிதாக இருக்கிறது.
[-^-^]
“அப்பா ! பாவம். கால் வலிக்குதா ?” என்று என் மகன் கேட்டு, காலை தடவிக் கொடுத்த போது, நெகிழ்ச்சியாக இருந்தது.
“ஆமாம் செல்லம்”
இரண்டு நிமிடம் கழித்து, காலில் “டம்..டம்” என்று அடித்துவிட்டு “அப்பா ! கால் வலிக்குதா ?” என்று கேட்டான்.
இவன் நல்லவனா ? கெட்டவனா ? தெரியலையே !!
[-^-^]
ஹே ! இவன் தான் ஜெயில்ல இருக்கானே ? எப்ப வெளிய வந்தான் ?
அது “அத்திப்பூக்கள்” சீரியல்ல. இது “செந்தூரப்பூவே”
24 பின்னூட்டங்கள்:
unable to paste the comment i have typed in tamil.
anaithum arumai
:-)))
நன்றி - எறும்பு - என்ன ப்ராப்ளம்னு தெரியலை. நான் ஒன்னும் பண்ணலைங்க :-)
நன்றி - kanchana Radhakrishnan
ஹா..ஹா..
எல்லாமே நல்லா வந்திருக்கு பின்னோக்கி!கடைசி ரெண்டும் டாப்!தொடருங்கள்..
ஹஹஹ உங்கப்பையன் பண்ண வேலை சூப்பர்... சின்னப்பசங்களை சாதாரணமா நினைச்சிராதீங்க...
//விடுமுறை நாட்களில் வெளியே போகும், மிகவும் சுறுசுறுப்பான, ஓரிடத்தில் கொஞ்ச நேரத்துக்கு மேலே இருக்க முடியாத ஆளாக இல்லாததால் எளிதாக இருக்கிறது.//
இதைத்தான் உங்க மாமியாரே அன்னைக்கு சொல்லிட்டாங்களே...:-)
அத்திப்பூக்கள், செந்தூரப்பூவே... நல்லவேளை கோலங்கள் முடிஞசுப்போச்சு...
ஆனா எதிரிக்குகூட இந்த நிலைமை வரக்கூடாதுங்க...:-)
ஹா ஹா ஹா இவன் ந்லலவனா கெட்டவனா - அப்பா போல மகன்
எல்லாமே சூப்பர்
நல்வாழ்த்துகள்
நன்றி - சீனா - சார் ! உங்கள் பின்னூட்டங்கள் பல வரவில்லை என எழுதியிருக்கிறீர்கள். நான் கமெண்ட் செக்ஷனை மட்டுறுத்தியதே இல்லை. தயவு செய்து பின்னூட்டமிடும் போது எதாவது பிரச்சினையா என பாருங்கள்.
நன்றி - நாஞ்சில், பா.ரா.
அஞ்சு நாள்ல எத்தனை புத்தகம் படிச்சீங்க
\\ஹே ! இவன் தான் ஜெயில்ல இருக்கானே ? எப்ப வெளிய வந்தான் ?
அது “அத்திப்பூக்கள்” சீரியல்ல. இது “செந்தூரப்பூவே//
ரைட் நீங்களும் மெகா சீரியல் பார்க்க ஆரமிச்சாச்சா??
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எல்லாமே நல்ல காமெடி
ஹாஹஹா சூப்பருங்க....
nice ones
all jokes super
படிச்ச ஜோக்ஸ் சொல்லாம அனுபவிச்சதை சொல்லி இருக்கீங்க...ரசனையாக இருந்தது...குறிப்பாக நல்லவனா கெட்டவனா என்று புரிந்துகொள்ளமுடியாத பையன், சீரியல் ஜோக்...
சினா ஐயா சொன்னது இன்னும் இன்னும்
ஹா ஹா ஹா
நல்லா இருக்குங்கோ
:)). அருமை. ஜூனியர் 16 அடி:))
நல்லா இருக்கு :)
கலகலப்பு.
பையன் ரொம்ப சுட்டி போல.
தல காலுக்கு என்ன ஆச்சு..!!
//எலக்ட்ரான்.ப்ரோட்டான்.நியூட்ரான் //
இதெல்லாம் பிடிக்காம தான் நான் ஸ்கூல்லை விட்டு ஓடி வந்தேன்....
இதெல்லாம் பிடிக்காம தான் நான் ஸ்கூல்லை விட்டு ஓடி வந்தேன்
:)
நன்றி - சங்கர் - ஆ.வி. குமுதம் மட்டுமே. இனிமே தான் எதாவது படிக்கணும்.
நன்றி
ரோமியோ பாய்
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
என் நடை பாதையில்(ராம்)
அத்திரி
ஸ்ரீராம்
நட்புடன் ஜமால்
முகிலன்
வானம்பாடிகள்
வெற்றி
S.A. நவாஸுதீன்
வினோத்கெளதம் - கௌதம் இதைப்படியுங்க http://pinnokki.blogspot.com/2009/12/10.html
ஜெட்லி - ஸ்கூல்லதான் படிக்கலையே. அதுனால இப்பவாவது அறிவ வளர்த்துக்கலாம்னு தான் இந்த தலைப்பு :)
சைன்ஸ் நல்லாருக்கு:)
haa haa!! good ones!
Post a Comment