23 December 2009

மௌனம்


புறாவும்,
தூதுவனும்,
தோழியும்,
அஞ்சலட்டையும்,
தொலைபேசியும்,
மின்னஞ்சலும்,
பயனில்லை
மௌனம் பேச
முடிவு செய்தால்.

வெற்றிடத்தில் பரவுவதில்லை
ஒலி
உன் மௌனம்
என்னை வந்தடைவது
எப்படி ?

15 பின்னூட்டங்கள்:

ஸ்ரீராம். said...

கண்ணோடு கண் நோக்கும்போது.....?

பின்னோக்கி said...

ஸ்ரீராம் - அனுபவத்திலிருந்து வந்த விடைக்கு நன்றி. இரண்டும், பேசாததை வலியுடன் சொல்வது போல எண்ணி எழுதினேன்.

Prathap Kumar S. said...

ஹையா.. கவிதை...கவிதை...
காலுல்ல அடிப்பட்டதும் கவதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க... நடத்துங்க நடத்துங்க.:-)

சிவாஜி சங்கர் said...

//
வெற்றிடத்தில் பரவுவதில்லை
ஒலி
உன் மௌனம்
என்னை வந்தடைவது
எப்படி ? //
ஆஹா.. சூப்பர் கவிதை..!

Vidhoosh said...

arumainga. :)

-vidhya

பின்னோக்கி said...

நன்றி - நாஞ்சில் - அது என்னவோ தெரியலை, கால்ல அடிபட்டதுல இருந்து கவிதையா வருது :)

நன்றி - சிவாஜி ச்ங்கர் - நீங்க எழுதுவதுடன் ஒப்பிட்டு பார்த்தால், இதை நீங்கள் கவிதை என்று சொன்னதே பெரிய விஷயம். பெரிய மனது உங்களுக்கு :)

சத்ரியன் said...

//வெற்றிடத்தில் பரவுவதில்லை
ஒலி
உன் மௌனம்
என்னை வந்தடைவது
எப்படி ? //

பின்னோக்கி,

ஆஹா.....அழகு கவிஞரே.

Unknown said...

நல்லா இருக்குங்கோ..

அப்புறம் தொடர் கதைப் பதிவு ஒன்னு - அதாவது கதை எழுத ஆர்வம் இருக்கும் பதிவர்கள் சேர்ந்து ஆளுக்கொரு அத்தியாயமாய் எழுதி இறுதியில் ஒருவர் முடிக்கலாம் என்று ஒரு ஐடியா - விசா, நான், கலகலப்ரியா இதுவரைக்கும் சேந்து இருக்கோம். நீங்க வாரீகளா?

சூர்யா ௧ண்ணன் said...

//வெற்றிடத்தில் பரவுவதில்லை
ஒலி
உன் மௌனம்
என்னை வந்தடைவது
எப்படி ? //

ஆஹா!
அழகு கவிதை!

பின்னோக்கி said...

நன்றி - முகிலன் அழைப்பிற்கு. உங்கள், விசா, கலகலப்ரியா அளவுக்கு நான் எழுத்தாளர் கிடையாதுங்க :)

Ramesh said...

மெளனம்... அருமை

//வெற்றிடத்தில் பரவுவதில்லை
ஒலி
உன் மௌனம்
என்னை வந்தடைவது
எப்படி ? //

ம்ம்ம்ம்ம்ம்...

பின்னோக்கி said...

முகிலன் ஒரு சின்ன திருத்தம் - நல்ல எழுத்தாளர் இல்லை, எழுத்தாளர் கிடையாது என்று சொல்ல வந்தேன்.

geethappriyan said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ,,,பலே பலே

அமுதா said...

வாவ்... அருமை... இனி மூணு வாரத்தில் நீங்க கலக்கு கலக்குனு கலக்கிடுவீங்க போல?

கா.பழனியப்பன் said...

உங்களின் மற்ற படைப்புகளை படித்துருக்கிறேன்.
இது கொச்ச புதுசா இருக்குப்பு.
மௌனமா ஒரு காதால் யுத்தத்தையே நடத்திப்புடீகளேப்பு.