28 December 2009

யார் அந்த ரமேஷ் ?


”ஹலோ ! ரமேஷா ?”
“இல்லைங்க நான் பின்னோக்கி”
“அப்ப ரமேஷ் இல்லையா ?”
“ஹலோ ! இது என் நம்பர். ரமேஷ்னு யாரும் இல்லைங்க”

(-----)

“ஹலோ ! ரமேஷ் இருக்காரா ? ”
“ஏங்க இப்பத்தானே கால் பண்ணுனீங்க”
“சாரிங்க”

(------)

“ஹலோ ! ரமேஷ் இருக்காரா”
“.........” (கடுப்பாகி பதில் எதுவும் பேசாமல் இருந்தேன்)
(யாரோ குழந்தை சவுண்ட் கேக்குது. ஆனா பேச மாட்டேங்கிறாங்க)


(-------)

“ரமேஷ் வீடு தானே”
“ஏங்க உங்களுக்கு எந்த நம்பர் வேணும் ?”
“98..........”
“நீங்க சொல்ற நம்பர் கரெக்ட்தான். ஆனா, நான் 7 வருஷமா இந்த நம்பர் யூஸ் பண்றேன். 7 வருஷத்துக்கு முன்னாடி இந்த நம்பர் ரமேஷ்கிட்ட இருந்திருக்கலாம். இல்லைன்னா, அவரு தப்பா இந்த நம்பர குடுத்திருக்கலாம்.”


(-------)

“ஹலோ ! ரமேஷ் ?”
“7 வருஷமா இந்த நம்பர் .....................”
“சாரிங்க”

ரமேஷ் - நீ யார் பெத்த புள்ளையோ. மவராசா ! எதுக்குப்பா என் நம்பர குடுத்த ? தப்பா குடுத்தியா ? இல்லை வேணும்னே குடுத்தியான்னு தெரியலை. நீ யாருக்காவது கடன் பாக்கி வெச்சுருந்தா தயவு செய்து செட்டில் பண்ணிடு. ஆனா ஒண்ணுப்பா, எனக்கு கால் பண்றவங்க ரொம்ப நல்லவங்க. நைட்டு நேரத்துல கால் பண்றது இல்லை. ஆனா ஒவ்வொரு தடவயும் அவங்க ஒவ்வொரு நம்பர்லயிருந்து கால் பண்றாங்க. அதுனால அந்த நம்பர ப்ளாக்டு லிஸ்ட்ல போட முடியலை. காப்பாத்துப்பா !!

30 பின்னூட்டங்கள்:

ரமேஷ் said...

நான் தான் ரமேஷ் he he he

Unknown said...

ஹா ஹா...,

நட்புடன் ஜமால் said...

நீங்க ரமேஷ் இல்லியா

;)

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. அப்போ நிஜமாவே நீங்க ரமேஷ் இல்லையா?

vasu balaji said...

நல்லாருக்கு போங்க:))

Anonymous said...

“98..........”

நம்பர முழுசாப் போட்டிருந்தா நாங்களும் ரமேஷுக்கு போன் பண்ணுவோம்ல?

சிவாஜி சங்கர் said...

அவ்வவ்வ்வ்வ்...

Ramesh said...

சத்தியமா நான் றமேஸ் ஆனா "நான் அவன் இல்லை"

Anonymous said...

//“98..........”

நம்பர முழுசாப் போட்டிருந்தா நாங்களும் ரமேஷுக்கு போன் பண்ணுவோம்ல?//

I 2nd in. Summa Podunga Sir..

அன்புடன் அருணா said...

ஹா ஹா ஹா. அப்போ நிஜமாவே நீங்க ரமேஷ் இல்லையா?

பின்னோக்கி said...

அட..அட.. எல்லாரும் ரொம்ப பாசக்காரங்களா இருக்கீங்க. எவ்வளவு பேரு என் போன் நம்பர கேட்குறீங்க. என் வாயால நானே கெட விரும்பலை :) அதுனால என் போன் நம்பர் 10 டிஜிட்த்தான் என்பதையும். அதில் 42 என்ற நம்பர்கள் ஆங்காங்கே தென்படும் என்பதையும். கடைசி நம்பர் 7 என்பதையும்..ஐய்யய்யோ.. என் வாய கிளறி கிளறி நம்பர சொல்ல வெச்சுடுவீங்க போல. இன்னமும் இந்த ரமேஷ் தொல்லையே ஓயல. இனிமே போன் பண்ணுனாங்கன்னா இந்த பதிவுல போடுறேன்.

எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்க :)

தேவன் மாயம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

கிருபாநந்தினி said...

ஹலோ! ரமேஷ்தானே பேசறீங்க? சும்மா டபாய்க்காதீங்க! :))

cheena (சீனா) said...

ஹலோ ரமேஷ் - நல்லாருக்கியா - என்னது ரமேஷ் இல்லையா- நேத்து பேசினேனே

நல்லாருக்கு ரமேஷ் நல்வாழ்த்துகள் ரமேஷ்

Unknown said...

சூப்பர் காமெடி ரமேஷ்.

ஆமா யாரு இந்த பின்னோக்கி?

geethappriyan said...

(யாரோ குழந்தை சவுண்ட் கேக்குது. ஆனா பேச மாட்டேங்கிறாங்க)
என்ன கொடுமை நண்பரே உங்களுக்கு போய் இப்படி?
அதுவும் குழந்தைன்னு(? )வேற நினைத்துள்ளனர்.:)))

பா.ராஜாராம் said...

ஹலோ.பின்னோக்கி இருக்காரா?

குழந்தை சத்தம்!

கரக்ட்!

நல்லா இருக்கீங்களா பின்னோக்கி?

நான்,ரமேஷ் பேசறேன்னு சொல்ல ஆசையாய் இருக்கிற ராஜாராம் பேசறேன்..

Prathap Kumar S. said...

பின்னோக்கி சத்தியமா நான் இல்ல என்னை நம்புங்க அப்படிப்பாக்காதீங்க ....

ஹஹஹ...ரொம்ப டாப்பு... யார்பெத்த பிள்ளையோ உருப்பாடியான ஒரு காரியம் பண்ணிருக்கு.. :-)

Unknown said...

இது பரவாயில்லை. என் வீட்டு போனுக்கு "ம்காராணி தேட்டரா?"ணு அடிக்கடி போன் வரும். நானும் ஒரு தடவை வெங்கடேசன்னு ஒருத்தருக்கு ரெண்டு டிக்கெட்டு ரிசர்வு செஞ்சி வைத்தேன் !!

ப்ரியமுடன் வசந்த் said...

ஹா ஹா ஹா

பேர் தெரிஞ்சுகிட்டேன் ரமேஷ் நல்ல டெக்னிக்...!

:)))))

வால்பையன் said...

எனக்கு ரமேசை தெரியும், ஆனா அவர் நம்பரும், உங்க நம்பரும் ஒண்ணு தான்!

Prathap Kumar S. said...

பின்னோக்கி, உங்கபின்னூட்டத்தை பார்த்தேன் பப்ளிஷ் பண்ணாததற்கு மன்னிக்கவும்.
நீங்ககேட்டதுக்கு காரணம் என்னன்னு உங்களுக்கு தெரியாமலா இருக்கு...எல்லாம் அதுதான். நீங்கவேற ஏதோ பெருசா ஏதோ பின்னூட்டம் வச்சிருக்கீங்கன்னு சொன்னீங்க...ஏதும் டேமேஜ் பண்றமாதிரி இல்லயே??? முடில...

ஆனா இதெல்லாம் பழகிக்ப்போச்சுங்க...கிழிஞச சட்டையை மாத்திட்டு போயிட்டே இருக்கே வேண்டியதுதான்...:-)

பின்னோக்கி said...

வால் நீங்களுமா. நல்லவங்கள (உங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன்) நாடு நம்ப மாட்டேங்குது.

நாஞ்சில் - புரியுதுங்க :). கூகிள் ரீடர்ல வந்துடுச்சு. அத படிச்சுட்டு கலாய்க்கலாம்னு இருந்தேன். நோ பிராப்ளம்

Vidhya Chandrasekaran said...

:)

சுகுணாதிவாகர் said...

இது எல்லாம் ஒரு விஷயம்னு ஒரு பதிவா?
உருப்படியா எதாவது பதிவு போடுங்க இல்லை ஆணியே புடுங்க வேணாம்

Karthick said...

நண்பரே நல்ல பதிவு. உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன் மிக்க நன்றி!

http://eluthuvathukarthick.wordpress.com

பின்னோக்கி said...

நன்றி சுகுணாதிவாகர் - நல்ல விஷயம் எதுவும் சிக்க மாட்டேங்குதுங்க. வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணுவேன் ? :)

நன்றி - Kartchick.

ஷாகுல் said...

சார் ரமேஷ் இருக்காரா?.......

அன்புடன் மலிக்கா said...

ஹலோ ரமேஷ் சார் . புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

http://niroodai.blogspot.com

பின்னோக்கி said...

எல்லாரும் என்னைய ரமேஷ்னே முடிவு பண்ணிட்டாங்களே. இது தான் சொந்த காசுல சூன்யம் வெச்சுக்குறதுன்னு சொல்லுவாங்க போல. நான் ரமேஷ் இல்லைங்க. நான் அவன் இல்லை ரேஞ்சுக்கு புலம்ப வெச்சுட்டீங்களே !! :)