04 June 2010

புதிய வாகனம்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அலசி ஆராய்ந்து முடிவில் மாருதி ரிட்ஸ் (Ritz) கார் வாங்கினேன். பழைய மாருதி 800க்கு பிரியா விடை கொடுத்துவிட்டு, இந்த புதிய வண்டி. மிகவும் ஆராய்ந்து கடைசியில் கடைக்குப் போய், முடிவு செய்திருந்ததை விட்டு, வேறு பொருள் வாங்குவது என் பழக்கம். அதைப் போலவே, மாருதி வேகன்-R என்று முடிவு செய்துவிட்டு, கடைசியில் வேறு கார். ஜூன் முதல் தேதியிலிருந்து, சாலை வரி அதிகப்படுத்துவதால், கார் வாங்கும் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. நான் வாங்கிய இடத்தில் ஒரே நாளில் 80 வண்டிகளை டெலிவரி தந்திருக்கிறார்கள்.

கீழே, நான் கடந்து வந்த வாகனங்கள்.... (சூரிய வம்சம் சரத்குமார் நியாபகம் வந்தால், நான் பொறுப்பில்லை)


பவர் ஸ்டியரிங் இருப்பதால், பெரிய காராக இருந்தாலும், மிக எளிதாக ஓட்ட முடிகிறது. பெட்ரோல் ரொம்ப குடிக்காது என்கிறார்கள்; பார்ப்போம் !.
Ford Figo, Chevi Beat போன்ற கார்களை ஓட்டிப் பார்த்துவிட்டு, இந்தக் கார் வசதியாக இருப்பதாய் தோன்றியது. மேலும், கொஞ்சம் பணம் குறைத்துக் கொடுத்தார்கள்.

கார்களைப் பற்றிய பல தகவல்களுக்கு TEAM-BHP என்ற வலைத்தளம் பெரிதும் உதவியது. கார் வாங்கும் முன், இந்த வலைத்தளத்தைப் படிப்பது நல்லது.

5 பின்னூட்டங்கள்:

Prathap Kumar S. said...

வாழ்த்துக்கள் பின்னோக்கி.

படங்களைப் பார்த்ததும சூரியவம்சம் சரத் ஞபாகத்து வரலை... அண்ணமலை ரஜினிதான் வந்தாரு...
அடுத்து பெர்ராரி வாங்க வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

Vazhthukal! Vangiyapin analyse seyya vendam.
Indica vista quadrajet test drive seytheerkala? Nanraga ullathu ,nangal vangi 1 varudam agirathu kurai sollumpadi ethuvum illai.worth for money.

vasu balaji said...

வாழ்த்துகள்:)

geethappriyan said...

நண்பரே நலமா?
கார் ஓட்டும் மோகத்தில் பதிவே போடலையே?டெஸ்டு ட்ரைவ்ல பிஸியா?
வாழ்த்துக்கள் நண்பரே,கவனமாக ஓட்டவும்

பின்னோக்கி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி
நாஞ்சில்
வவ்வால்
வானம்பாடி சார்
ஸ்ரீராம்
கார்த்திக் - ஆமாங்க நிறைய கார் டெஸ்ட் டிரைவ். ஸ்லோவாத்தான் ஓட்டுவேன். நன்றி