08 October 2010

எந்திரன் - திரைக்கதையில் தந்திரன் ?

ஒரு வழியாக முக்கியமான ஜனநாயக கடமையான எந்திரன் படம் பார்த்தல் நிறைவுக்கு வந்தது. இந்தப் படத்தில் நடிக்க ஏன் ரஜினி சம்மதித்தார் என்று புரியவில்லை. படம் பார்க்கும்போது ஸ்கிரீனில் தெரிவது ரஜினி என்ற உணர்வே ஏற்படவில்லை. சங்கர், பழைய பாக்கியராஜ் பட சிடிக்களை உடனடியாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். திரைக்கதை படு சொதப்பல். ஒவ்வொரு காட்சியும் மனதில் பதிவதற்கு பதிலாக எப்பொழுது முடியும் என்று இருந்தது.

தீ விபத்தில் காப்பாற்றப்படும் பெண்ணின் தற்கொலை; அதுவும் லைவ்வாக டிவியில் காட்டப்படுவது  - என்ன ஆச்சு சங்கருக்கு என்ற கேள்வி எழுப்பியது.

சயன்டிஸ்ட் ரஜினியை அடக்கிவாசிக்க வைத்தாகிவிட்டது. ரோபோ ரஜினியும், தன் மேனரிசங்களை காட்ட முடியாத நிலையில் இருப்பதற்கு காரணம் அது ஒரு இயந்திரம். ஒரிஜினல் ரஜினியை ரசிகர்கள் பார்க்க இருந்த ஒரே வாய்ப்பு வில்லன் ரஜினி. கார், ஹெலிகாப்டர் மற்றும் போலீசைத் தாக்குவதே முழுவேலையாக இருந்ததால், வில்லன் ரஜினிக்கும் ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றவைகள் சண்டை போடுவதிலேயே போய்விட்டது. அவர் சிரிக்கும் சிரிப்பு கொஞ்சம் அதிகமாகவே பட்டது.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் சம்மந்தப்பட்ட காட்சிகள் தனியாக எடுத்து பிறகு கிராபிக்ஸ் செய்து ஒட்டிவிட்டார்களோ என்று தோன்றியது. பல இடங்களில் அவரின் ரியாக்‌ஷன் காட்சியமைப்பிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது. வில்லன் ரஜினி தன் மாளிகைக்கு அவரைக் கடத்திப் போகும்போது, பொருட்காட்சியில் வேடிக்கை பார்ப்பது போன்ற அவரது ரியாக்‌ஷன்..ம்ம்...

உலக அழகி, ராம்ப் வாக் செய்யவேண்டும். அப்படி செய்யும் போது கையில் எதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு போகவேண்டும். அதற்காக ஒரு சூட்கேஸ். அந்த சூட்கேஸில் “காதல்ரத்து பத்திரம்”. சங்கர்ஜி என்னங்க இதுதானா உங்க 10 வருஷ திரைக்கதை உழைப்பு ??. பாலகுமாரன் மற்றும் சுஜாதா போன்றவர்களின் உதவி கிடைக்கவில்லையா ?



கிளைமேக்ஸ் கோர்ட் சீன் - ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

முத்தாய்ப்பாக, வில்லனுக்கு பில்டப் பாடல்வைத்து சங்கர் தான் ஒரு வித்தியாசமான இயக்குனர் என்று நிரூபித்திருக்கிறார்.

மற்ற விஷயங்களை இந்தப் பதிவுகளில் சொல்லிவிட்டார்கள்.

ஜய்ன்ஜ் பிக்ஜன்(எந்திரன்) - விசா பக்கங்கள்
எந்திரன் (2010) - கருந்தேள் கண்ணாயிரம்
எந்திரன் - கருப்புபெட்டி

ரஜினி தன் அடுத்தப் படத்தை மிகவும் கவனமாக தேர்வு செய்யவேண்டும் என்பதே என் போன்ற ரசிகனின் வேண்டுகோள்.

17 பின்னூட்டங்கள்:

ஜோதிஜி said...

முதலில் வணக்கத்தை வச்சுக்குறேன்.

Prathap Kumar S. said...

hahaha...
ரஜினி ஐஸ்= காதல் ரத்து காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் படு செயற்கை. காமடி காட்சிகளில் பின்னி எடுக்கும் ரஜினிக்கு இன்னும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கத்தெரியாது என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்.


அட கருந்தேளுக்கும், கருப்புபெட்டிக்கும் நீங்களும் சுட்டி கொடுத்திட்டீங்களா....சூப்பரு...:))

Prathap Kumar S. said...

என்னாது இது.... பின்னோக்கி பதிவுல முதல் தடவையா கமண்ட் மாடரேஷன் பார்க்கறேன்....

ஏய் யாருப்பா பின்னோக்கிய டேமேஜ் பண்றது...:)))

பின்னோக்கி said...

வாங்க ஜோதிஜி.
நாஞ்சில் - எந்திரன் நல்லாயில்லைன்னு விமர்சனம் போட்டுட்டு, கமெண்ட் மாடரேஷன் இல்லாம இருக்க முடியுமா சொல்லுங்க.. பயந்து வருது :)

எஸ்.கே said...

எல்லாம் எந்திரன் மயம்! :-)
பிரதாப் சார் கிட்ட கேட்ட கேள்வியையே கேட்கிறேன்.
நீங்க எந்திரனை ஆதரிக்கும் குரூப்பா? எதிர்க்கும் குரூப்பா? இல்ல எந்த குரூப்புனு தெரியாம குழம்பி நிக்கிற குரூப்பா? :-)))

Mohan said...

படம் பார்த்து விட்டு,உங்கள் மனசுக்கு தோணுனதை அப்படியே எழுதியது நன்றாக இருக்கிறது.ஆனால்,எனக்குப் படம் பிடித்திருந்தது:-)

பின்னோக்கி said...

நன்றி எஸ்.கே - குரூப்ல சேரச்சொல்றீங்க :)

நன்றி மோகன் - எனக்குத் தான் பிடிக்கலை.

VISA said...

எனக்கும் அது தான் வருத்தம். கடைசி வரை ரஜினியை, இத்தனை நாள் நாங்கள் துதித்து கொண்டாடிய பிம்பத்தை திரையில் பார்க்க முடியாமல் போய்விட்டது.
ஷங்கர் கனவு காண்பதற்கும் மாறன் சம்பாதிப்பதற்குமாக ரஜின்யை இயந்திரமாக்கிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

மாறன் ரஜினியின் சிவாஜி பட சேல்ஸை வைத்து செலவழித்திருக்கிறாராம்.

ரஜினியும் காசுக்காக அல்லது யாருக்காகவோ இப்படி நடித்துவிட்டார். ரசிகனுக்காக எப்போது நடிப்பாரோ?

Prathap Kumar S. said...

எஸ்.கே.= இந்த கேள்வியை 2வது தடவையா கேட்கறீங்.
இத்தனை பதிவு போட்டப்புறமும் நான் எந்த குருப்புன்னு தெரியாம இன்னும் குழம்பிட்டு இருக்கற நீங்க எந்த க்ருப்புன்னு தெரிஞ்சுக்கலாமா-‘?:))

ஸ்ரீராம். said...

முதல் நாள் ரசிகர்கள் அடுத்தடுத்தடுத்த காட்சிகளுக்கு ஓ....டிக் கொண்டிருந்தார்கள். செய்திச் சேனல்கள் யார் சூப்பர் மோஸ்ட் ஸ்டார் என்று கணக்கெடுத்துக் கொண்டிருந்தன. இப்போது சத்தத்தைக் காணோம் என்றாலும் ரசிகர்கள் புகழ்ந்தவண்ணம்தான் இருக்கிறார்கள். நீங்கள் சுட்டியில் கொடுத்துள்ள விமர்சனங்கள் முன்பே படித்தேன். உங்களுக்குத் தோன்றியுள்ளதை சொல்லியுள்ளீர்கள். ஏற்றுக் கொள்ளக் கூடியவைகள்தான். இதையும் படியுங்கள்.

வாசகர் விமர்சனம்.

அமுதா said...

இதுக்கு தான் படம் பார்க்கப் போகும்பொழுது எதிர்பார்ப்பே இல்லாமல் போகணும், லாஜிக்கே பார்க்காம இரசிச்சுட்டு வரணும் :-)

access said...

thaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaank uuuuuuuuuuuuuuuuuuuu
கருட புராணம் மற்றும் ரோபோ ராமாயணம் இதிகாச மோசடி இப்போ சுஜாதா இல்லை அடுத்த படம் சங்கர் எப்படி செய்வார்,பார்க்கலாம் ,இறக்கம் இல்ல மனிதன் அரக்கன் ,அந்த அரக்கனை உருvவாகிய வசிகீரனும் அரக்கன் தான் மனிதன் இல்லை ,வசீகரன் தன காதலியை எந்திரனுக்கு விட்டு கொடுத்து இருக்கலாம் அல்லது இரும்பில் இதையம் முளைத்த எந்திரன் தன்னை படைத்த கடவுளுக்காக விட்டு கொடுத்து இருக்கலாம்

வசீகரன் இரக்கம் இல்லாதவன் என்பதற்கு சாட்சி

கிளைமேக்ஸ் கோர்ட் சீன் - ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

எல்லா கலைகளும் தெரிந்தவன் எல்லா பாஷைகளும் தெரிந்தவன்
இந்த எந்திரன் என்ற வெறும் ஆணவம் மட்டும் மிஞ்சியது
ஒரு தியாகம் இல்லை விட்டு கொடுத்தல் இல்லை இரக்கம் இல்லை
இதயம் முளைத்ததாக கட்டு கதை சிந்திக்க தெரிந்ததாக கட்டு கதை

மனிதனாக அடிபடையில் தேவை இரக்கம் அது கூட வசீகரன் சொல்லி தரவில்லை தெரிந்தால் தானே சொல்லி தருவார் , இயந்திர அரக்கனை பார்க்க எல்லா மனித அரக்கர்களும் படை எடுப்பு வெள்ளி திரை நோக்கி வேறு என்னத்தை சொல்ல
வசீகரன் ஆராய்ச்சியே மூழ்கி இருபதால் எந்திரன் கள்ள காதல் வைத்து
இருக்கலாம் சனா கூட ,இந்த மெகா சீரியல் உலகத்தில் மேலும் பல லட்சம் கோடிகள்
சம்பாரித்து கொடுத்து இருப்பான் இந்த எந்திரன்
அன்பே சிவம் rocks

எந்திரன் sucks

sorry compassion is dead
passion rocks
all passionate arrakargal endorse enthiran in big way

யாருமே கமலை நெருங்க முடியாது அன்பே சிவம் என்று சொன்னதை சுஜாதா ஆகட்டும் சங்கர் ஆகட்டும் ரஜினி ஆகட்டும்
வெறும் மசாலா மாமனார்கள்
அரக்கனை காட்டி கல்லா கட்டுபவர்கள்

ஒரு நல்ல மனிதன் மற்றும் எந்திர உறவை சித்தரிக்காமல் வெறும் அரக்க குணத்தை
மட்டும் காட்டி மக்களை முட்டாளாக்கி பல கோடிகள் சம்பாரித்து தான் மிச்சம்

Unknown said...

:( Taste elapa..better luck

Anonymous said...

அவங்க பண்ணிய பில்டப்புக்கும் படத்துக்கும் கொஞ்சம் கூட ஒத்துப்போகலை.
நல்ல பதிவு.

Unknown said...

@பின்னோக்கி

நீங்க பாட்டுக்கு வந்து suspense போட்டுட்டு போய்ட்டிங்க யாருங்க அந்த இரண்டாவது ஆளு....

ஆதி மனிதன் said...

கமென்ட் போடுவதற்கு ரொம்ப லேட் ஆனாலும், (எந்திரன் பார்த்த பிறகு) என் மனதில் தோன்றிய அத்தனை எண்ணங்களையும் அப்படியே கொட்டிவிட்டீர்கள். எந்திரன் சங்கர் படமும் இல்லை ரஜினி படமும் இல்லை. வழக்கமான சண் டி. வி. படமாகிவிட்டது.

uctredjacinth said...

The Star Grand at The Star Gold Coast - Mapyro
View and compare the The Star Grand at The Star Gold Coast location, 파주 출장안마 hours, map, room 용인 출장샵 rates, 보령 출장마사지 opening hours and 안동 출장안마 a parking map of The Star Grand at 상주 출장샵 The