21 October 2009

திக்.திக்.பக்.பக் - 1


மண்டபம் கேம்ப். இது ராமேஸ்வரத்துக்கும் ராமநாதபுரத்துக்கும் நடுவுல இருக்குற ஒரு சின்ன ஊர். இங்க இலங்கையில இருந்து வர்றவங்களை தங்க வெச்சுரு(ப்பாங்க)க்காங்க. பாம்பன் கடல் பிரிட்ஜ் கட்டுன இஞ்சினியர்கள் தங்குவதற்காக குவார்ட்டர்ஸ் இருந்துச்சு. எங்கப்பாவுக்கு அந்த ஊருக்கு டிரான்ஸ்வர் ஆச்சு. எங்கப்பா அதுல ஒரு இஞ்சினியர்.

இரவு 8 மணியிருக்கும், அந்த ஊருக்கு பஸ்ல வந்து இறங்குனோம். பஸ்ஸ்டாண்டுலயிருந்து புது வீடு பக்கம் . நடந்து போய்க்கிட்டு இருக்கும் போது, எங்க அப்பா ஒரு வயசானவர்கிட்ட பேசுனாரு. எங்கப்பா கைய பிடிச்சுக்கிட்டு நான்.

அப்பா: “வணக்கம் சார்”
அவர்: “வணக்கம். இப்பதான் வர்றீங்களா”
அப்பா: ”நேத்து வந்து பார்த்தேன். நீங்க வெளியில போயிருக்குறதா சொன்னாங்க”
அவர்: ”நேத்து இன்ஸ்பெக்சன். அதுனால வெளிய போயிருந்தேன்”
நான்: அப்பா !! அம்மா, அண்ணன் அவ்வளவு தூரம் போயிட்டாங்க. சீக்கிரம் போகலாம்.

அப்பா: “நாளைக்கு உங்களை வந்து பார்க்கிறேன்”
அவர்: “வாங்க. நீங்க சொன்ன மாதிரி பண்ணிடலாம்”

அவர் போனதும்..
”யாருப்பா இவரு ?”
”உங்க புது ஸ்கூல் ஹெட்மாஸ்டர்டா ! நாளைக்கு உங்களை (நான் 5 வது என் அண்ணன் 7 வது) ஸ்கூல்ல சேர்க்குறத்துக்காக சொல்லியிருந்தேன். இப்ப நியாகப்படுத்தினேன்.”

இதக் கேட்டவுடனயே பேயறைஞ்ச மாதிரி ஆனவன்தான். வீடு வர்ற வரை ஒண்ணும் பேசலை. கப்சிப். இது தெரிஞ்சு இருந்தா ஒரு வணக்கம் போட்டுருக்கலாம், இல்லைன்னா, நடுவுல பேசாமயாவது இருந்திருக்கலாம்

5ஆம் வகுப்பு. ஸ்கூல் ஹெட்மாஸ்டர் தான் என் கணக்கு வாத்தியார். தினமும் வீட்டுப்பாடம் குடுப்பாரு. அடுத்த நாள், ஒவ்வொருத்தரயும் கூப்பிட்டு செக் பண்ணுவாரு. கணக்கு போடலைன்னா, இல்ல தப்பா போட்டுருந்தா பூஜை தான்.

அப்படி ஒரு நாள் கணக்கு நோட்ட செக் பண்ணிக்கிட்டிருந்தார். நான் 4 வது வரிசைல உட்காருவேன். முதல் வரிசையில செக் பண்ணிட்டு, ரெண்டு பேருக்கு பொளேர்ன்னு கன்னத்துல குடுத்தாரு. அதப்பாத்து என்னக்கு வயிறு கலங்கிடுச்சு. நான் போட்ட கணக்கு சரியா தப்பான்னு தெரியலை. பக்கத்துல இருந்தவன்கிட்ட பார்த்தா, அவன் வேற ஆன்ஸர் போட்டுருக்கான். நான் போட்டத, அப்படியே குறுக்கால கோடு போட்டு அடிச்சுட்டு, அவன் போட்டுருந்தத அப்படியே பாத்து போட்டுட்டேன்.

எங்க வரிசை வந்துச்சு. என் பக்கத்துல இருந்தவன் நோட்ட பார்த்துட்டு அவனுக்கு ஒன்னு பொளேர்ன்னு குடுத்தாரு. ஐய்யய்யோ !! அப்ப நான் போட்டது சரி. அவன் போட்டது தான் தப்பு போல. மாத்தி எழுதவும் நேரம் இல்லை. என்ன பண்ணுறது ?. என் நோட்ட பார்த்தாரு.

”என்னடா கணக்கு தப்பா போட்டுருக்க”
“இல்ல சார். இது தப்பு, இதுக்கு முதல் பக்கத்துல கரெக்ட்டா போட்டுருக்கேன்”
முதல் பக்கத்த திருப்பி பார்த்துட்டு
“என்னடா ? இது அடிச்சுருக்கு”
“கை தவறி அடிச்சுட்டேன் சார்”
பொளேர் !!!!

12 பின்னூட்டங்கள்:

geethappriyan said...

VERY GOOD ONE..

ஈரோடு கதிர் said...

//“கை தவறி அடிச்சுட்டேன் சார்”
பொளேர் !!!! //

அவர் கை தவறி அடிச்சாரா? இல்லை சரியாத் தான் பொளேர்னு அடிச்சாரா

வால்பையன் said...

அவரும் கை தவறி அடிச்சிருப்பாரு விடுங்க தல!

பின்னோக்கி said...

கதிர் - பொய் சொன்னா உதைதானே விழும் :)
நன்றி கார்த்திக்

vasu balaji said...

பாருங்க அந்த வயசிலயே பின்னோக்கின்னு தெரிஞ்சிருக்கு. வாத்திக்குதான் தெரியல=))

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா

நல்ல சமாளிப்புத்திறன்....

ers said...

விவாதத்திற்கிடையே குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்


புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

இந்த மாதிரி அனுபவம் எனக்கும் இருக்கிறது நண்பா

Anonymous said...

//ஐய்யய்யோ !! அப்ப நான் போட்டது சரி//

இதுதான் ஈயடிச்சான் காப்பின்னு சொல்லறதா!!!

ஜோதிஜி said...

திடிர் என்று உள்ளே வந்தாலும் திகைப்பட வைத்து விடுகிறீர்கள். அம்மா கடிதமும் ளேர் என்று வார்த்தைகளும் எண்ணத்தை சிதற வைத்தது, இறுதியில் ர் என்று சிரிக்க வைத்தது. அதனால் தான் முதல் தொடரை உங்களுக்கு சமர்பிப்த்தேன். உங்கள் விபரம் குறித்து தெரிவிக்கவும்
texlords@gmail.com

ஆ.ஞானசேகரன் said...

//“கை தவறி அடிச்சுட்டேன் சார்”
பொளேர் !!!!//

எப்படியும் அதே பொளேர்தான்...

Anisha Yunus said...

ஹி...ஹி...ஹி...விதி வலியதுங்ணா... :)