15 October 2009

1000 தடவை சொல்லியாச்சு

”அருண் !! எத்தனை தடவை சொல்லியிருக்கேன் நீங்க எழுந்து வரும் போது, கதவை சாத்திட்டு வாங்கன்னு ?. சத்தம் கேட்டு இப்ப கார்த்தி எந்திரிச்சுடப் போறான். இன்னமும் கொஞ்ச நேரம் தூங்கட்டும். ஏசி கொஞ்சம் கம்மி பண்ணி வெச்சுட்டு வாங்க..நைட் ரெண்டு தட்வை இருமினான்”

”கார்த்தி ! அம்மா என்ன சொல்லியிருக்கேன் ? early in the morning..brush your teeth . போடா குட்டி, குட் பாய்தானே..பிரஷ் பண்ணிட்டு வந்து காம்பிளான் குடி”

கார்த்தி, மார்னிங் .டிவி போடாத. ஸ்கூலுக்கு போகணும். ஈவினிங் வந்தோன்ன டோரா போடுறேன்.happy ? good boy.

"அருண், ஹீட்டர் போட்டுருக்கேன். பச்சைத் தண்ணியில ஹாட் வாட்டர் மிக்ஸ் பண்ணி வெச்சுடுங்க.கார்த்தி குளிக்கிறத்துக்கு”

“கார்த்தி, அம்மாவுக்கு வேலை இருக்கு. இன்னைக்கு அப்பாகிட்ட குளிச்சுட்டு வா”

“அருண், நேத்து மாதிரி, நம்ம சோப் போடாதீங்க அவனுக்கு. தனியா டவ் சோப் வெச்சுருக்கேன் பாருங்க. அதப் போட்டு குளிப்பாட்டி விடுங்க”

“வாவ்..குட் பாய் ஆகிட்டான் கார்த்தி. Very neat boy. இனிமே அப்பா கிட்ட்யே டெய்லி குளிக்கிறியா ?”

"எத்தனை தடவ சொல்றது, அவனுக்கு பிடிச்சு வெச்சுருக்குற வாட்டர் பாட்டில்ல இருந்து தண்ணி எடுத்து குடிக்காதீங்கன்னு. அவனுக்கு தண்ணி சூடு பண்ணி வெச்சுருக்கேன். நீங்க வாட்டர் கேன்ல இருந்து எடுத்துக்கோங்க”

“கார்த்தி, இங்க பாரு அம்மா ஸ்நாக்ஸ் வெச்சுருக்கேன். கீதா ஸ்நாக்ஸ் எடுத்து சாப்பிடக்கூடாது. அடுத்தவங்க வாட்டர் பாட்டில்ல தண்ணி குடிக்கக் கூடாது”

“அருண், நெக்ஸ்ட் டைம், கார்த்திக்கு சாக்ஸ் வாங்கும் போது நல்ல பிராண்டு வாங்கனும். இது காலை ரொம்ப புடிக்குது. பிளட் சர்க்குலேஷன் கம்மி ஆகிடப் போகுது”

“கடவுளே !!, கார்த்தி சீப்ப எடுத்து நீங்க ஏன் யூஸ் பண்றீங்க ?. இப்ப புது சீப்பு தான் அவனுக்கு வாங்கனும். 1000 தடவ சொன்னாலும் அதயே தான் பண்ணுவேண்ணா நான் என்ன பண்றது ?”

“கார்த்தி டாட்டா சொல்லு. அருண் ! கார்ல ஏறுன உடனே அவனுக்கு சீட் பெல்ட் போட்டுவிடுங்க”

“ஏசி போடுங்க..பொல்யூஷன் தாங்க முடியலை. டாக்டர் சொன்னாரு, இவனுக்கு வண்டி புகை ஒத்துக்க மாட்டேங்குது..அதுனால தான் அடிக்கடி சளி புடிக்குதுன்னு. இவன் மாஸ்க் போட்டுக்கோன்னாலும் கேட்க மாட்டேங்குறான்”

“டாடி...அந்த பிரிட்ஜ் மேல போகும் போது பாஸ்ட்டா போ டாடி”

“அந்த ரிவர் பேரு நேத்து சொன்னேனில்ல..என்னன்னு சொல்லு பார்ப்போம்”

“ம்ம்ம்..அடையாறு ரிவர்.கரெக்ட்டா ?”

“வெரி குட்..கரெக்ட்”

“ஐய்ய !  வாட்டர் ரொம்ப டர்ட்டியா இருக்கு. டாடி அங்க பாரேன் !!..ஒரு அண்ணா அதுல நீச்சல் அடிச்சுகிட்டு இருக்கான்”

15 பின்னூட்டங்கள்:

ரவி said...

சூப்பர் !!!!!!!

குடுகுடுப்பை said...

அருமை. இரண்டு முக்கியமான செய்திகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல விஷயம் சார்...

கலையரசன் said...

ஓஓஓஓஓஓகோ!!

பின்னோக்கி said...

நன்றி உங்கள் வருகைக்கு
செந்தழல் ரவி
குடுகுடுப்பை
பிரியமுடன்...வசந்த்
கலையரசன்

சென்ஷி said...

அசத்தறீங்க பின்னூக்கி!

Rekha raghavan said...

நான் என்னமோ அமெரிக்காவில் நடப்பதை தான் எழுதியிருக்கிறீர்கள் என்று படித்துக்கொண்டே வந்தால் கடைசியில் ஏமாத்திட்டீங்க. அருமையான பதிவு.

ரேகா ராகவன்.

RAGUNATHAN said...

vote pottachu....comment copy paste panna mudiyalaye... why?

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

பின்னோக்கி said...

நன்றி - சென்ஷி - நீங்கள் எழுதிய கதையை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் :)
நன்றி - ரேகா ராகவன்
ரகுநாதன் - நான் எதுவும் செய்யவில்லை, செய்ய தெரியாது :). நானும் டிரை பண்ணி பார்க்கிறேன்.
நன்றி - அன்புடன் அருணா.

Anonymous said...

paathi pathivum ennoda veetula nadakkiRathu maathiriyae irukkuthu. rompavae Ethaarththmaana pathivu.

உங்கள் தோழி கிருத்திகா said...

pinnokki.... kalakkaringa :)

Deepan Mahendran said...

நல்ல பதிவு பின்னோக்கி....,
ஆயிரம் என்ன லட்சம் ஆனாலும் நடவாது??

கனவுகளின் காதலன் said...

ஒருவரிற்கு கிடைத்திருக்கிறது, மற்றவரிற்கும் கிடைத்திருக்கிறது. ஒருவர் அழுக்கென்று பார்ப்பதை மற்றவர் தன்னை சுத்தமாக்க அல்லது நீச்சல் அடித்து மகிழ அருவருப்பு எதுவுமின்றி ஏற்றுக் கொள்கிறார். இந்த நிலை மாறாவிடிலும் கூட இருவரும் இருக்கும் நிலை என்றுமே நிரந்தரமானது அல்லவே.

Rettaival's Blog said...

சொந்த அனுபவமா பின்னோக்கி சார்..! அருமையாக உள்ளது.