தேக்கடியில் அநியாயமாக பல உயிர்கள் போயிருக்கிறது. உயிர்காக்கும் டியூப்கள் அனைவரும் அணிந்திருந்தார்களா எனத் தெரியவில்லை. சில வெளிநாட்டுப் பயணிகள் நீந்தி உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
பெங்களூரில் உள்ள தனியாரால் நிர்வாகிக்கப்படும் “லும்பினி பார்க்” -ல், படகிலேறும் அனைவருக்கும் நெஞ்சில் மாட்டக்கூடிய டியூப் கொடுக்கிறார்கள். இதனை, அரசால் நிர்வாகிக்கப்படும் ஒரு படகுகுழுமத்தில் செய்ய முடியாதா ?. இத்தனைக்கும், அது ஒரு 150 ரூபாய் மதிப்புடையது.
இனியாவது
- படகில் பயணிப்பவர்கள் அனைவரும் லைஃப் ஜாக்கெட் போடவேண்டியது கட்டாயமாக்கப்படவேண்டும்
- சிறுவயதிலேயே பள்ளிகளில், அனைவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இந்த மாதிரி இனி உயிரிழப்புகள் நேரக் கூடாது என இறைவனை வேண்டிக்கொள்வோம்.
2 நாட்களுக்கு முன் என் அத்தையும், மாமாவும் அங்கு சென்று வந்தார்கள்.
6 பின்னூட்டங்கள்:
இந்த அவசியத்தை கருதி தான் நானும் ஒரு முறை அம்மா அப்பாக்கிடே அடம் பண்ணி நீச்சல் கத்துக்க ரொம்ப ஆர்வதோடு ஆத்துக்கு போனேன். அங்குஆம்பளைங்க, பொம்பளைங்க எல்லாரும் சர்வ சாதரணமா குளிச்சிட்டு இருந்தாங்க. நா முதல் முறையா (கடைசி முறையும் கூட அதுதான்) நீச்சல் கத்துகிற ஆர்வத்தோடு குளிகிறதை எல்லாரும் ஒரு மாதிரியா பார்த்தாலும் ஒருத்தன் மட்டும் மொறைச்சு மொறச்சு பார்த்தானா எனக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, மொச்சகொட்டை, பருத்திகொட்டை எல்லாம் வந்து......... ஆத்துக்கு போறதுக்கும் நீச்சல் கத்துகிறதுக்கும் அன்னிக்கே முழுக்கு போட்டுட்டு வந்துட்டேன்.
அது சரி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?
எனக்கு நீச்சல் தெரியாதுங்க. அதுனால தான் படகு சவாரி போகும் போது லைஃப் ஜாக்கெட் இல்லைன்னா போக மாட்டேன். என் பையன் கத்துகிட்டிருக்கான். நீங்க நீச்சல் குளத்துல போய் கத்துக்கோங்க. லேடீஸ்க்குன்னு தனியா டைம்ல சொல்லிக்குடுக்குறாங்க. திருச்சியில இருக்கும்னு நினைக்கிறேன்
have seen many place in kerala have life jacket
How they miss here?
looks weird
May all soul rest in piece
யாசவி, இந்த விபத்தில் படகுக்கு அடியில் நிறைய பேர் மாட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது. நீச்சல்/life jacket சில உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். பொதுவாக, சிறிய படகுகளில், கூட்டத்தை கட்டுப்படுத்த, சிலர் இருப்பார்கள். அவர்கள், கூட்டம் ஒரு side -ல் நிறைய பேர் போனால், அதை ஒழுங்குபடுத்துவார்கள். இந்த விபத்தில் யானையிருப்பதை பார்ப்பதற்காக, நிறைய பேர் ஒரே side-ல் ஒதுங்கியிருக்கிறார்கள். அதுதான் விபத்துக்கு காரணம் என்கிறார்கள்.
கண்டுபிடித்தவரை 40 உயிர்களை தேக்கடி குடித்துவிட்டது...
இன்னும் எத்தன அடி பட்டாலும் திருந்த மாட்டான்யா
நிரம்ப வேதனைப்பட்டேன்,
அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
இனியாவது எல்லோரும் நீச்சல் கற்போம்
Post a Comment