03 October 2009

ஆண்களுக்கு அநீதி

அன்றாடம் பேப்பரைப் பார்த்தால் பெண்கொடுமை, பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றிய செய்திகள் தவறாமல் இருக்கும். அதை இங்கிலீஷ் பேப்பரில் படித்தவுடன், இல்லத்தரசிகள் 2 சொட்டு கண்ணீர் விடுவார்கள். அதற்கு பிறகு தன் வாழ்க்கையிலும் நடக்கும் கொடுமைகளை, பேப்பரில் வந்த செய்தியுடன் ஒப்பிட்டு, தான் இடம் பெற்றிருக்கும் மாதர் சங்கம் மற்றும் பக்கத்துவீட்டாரிடம் விவாதிப்பார்கள்.

பதிவர்கள், இந்த செய்திக்காகவே காத்திருந்து, உடனே ஒரு பதிவு இடுவார்கள். பாருங்கள் !!! பெண்கள் அடிமை/கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதே போல தான் பார்த்த கொடுமைகளை பதிவில் கொட்டுவார்கள். இப்பதிவிற்கு, பதிவர்களின், நண்பர்கள் உடனே வந்து, மிகவும் அற்புதமான பதிவு, இந்த மாதிரி பெண்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய சில பதிவர்கள் இருப்பதால் தான் இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்துவருகிறது என்பார்கள். இது ஒரு சம்பிரதாயம்.


ஆனால் இவர்களின், பார்வையில், ஆண்களுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் நடைபெறும் கொடுமைகளை, மருந்துக்குக் கூட எழுத மாட்டார்கள். அப்படி எழுதினால் யார் படிப்பார்கள் ?. அழுவார்கள் ?

இப்பொழுது பிரபு தேவா சிக்கியிருக்கிறார். நயன்தாரவை எதிர்த்து எழுதும் பத்திரிக்கைகள், பிரபு தேவாவை பாராட்டுகின்றன என்பது இவர்கள் குற்றச்சாட்டு. பிரபுதேவாவை குறைசொல்லி எழுதும் பத்திரிக்கைகளை இவர்கள் படிக்க மாட்டார்கள். படித்தாலும் வசதியாக மறந்துவிடுவார்கள்.

சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்.

  • சில மாதங்களுக்கு முன், மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்த தகவல் படி, 50 சதவிகித, ஆண்களுக்கு எதிரான புகாரில், உண்மையில்லை என்றும், ஆண்களை பழிவாங்கும் எண்ணத்தில் பெண்கள் குடுத்த புகார்கள் எனச் சொல்லி, இதனைக் குறைக்க, ஆண்களின் மேல் புகார் வந்தால், உடனே கைது என அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இறங்குவதை தடைசெய்திருக்கிறார்கள். இந்த செய்திவந்த உடன் எவரும், எந்த பதிவையும் இடவில்லை. எப்படி எழுதமுடியும் ?. அதற்கு பதிலாக, உண்மையான குற்றத்தை செய்த ஆண்களைப் பற்றி எழுதினால், சில கண்ணீர் துளிகள் கிடைக்கும்.
  • பிரசாந்த், கிரஹலஷ்மியின் விவாகரத்து வழக்கில், பிரசாந்தை எவ்வளவு கேவலமாக எழுதமுடியுமோ, அவ்வளவு எழுதினார்கள். பத்திரிக்கையை பெண்கள் ஆர்வம் + கவனமுடன் படித்தார்கள். கிரஹலஷ்மியின் முந்தைய திருமண செய்திகள் வந்த உடன்,  பெண்ணுரிமைவாதிகளுக்கு ஷாக் அடித்த மாதிரி ஆகிவிட்டது. அந்த மேட்டரில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்கள். பாவம் பிரசாந்த், அதற்கு பிறகு கொடுக்கும் பேட்டிகளை வெளியிட கூட பத்திரிகைகள் இல்லை.
  • ஒரு மணமான பெண் இறந்துவிட்டால், உடனே கணவர் கைது செய்யப்படுவான். ஏன் ?. ஏனென்றால், அவனைத்தவிர வேறு யார் அக்குற்றத்தை செய்திருக்க முடியும் ? . இந்த செய்தியை அரைகுறையாக பத்திரிக்கை செய்திகளில் படித்தவுடன், அடுத்த நாள் பதிவு வந்துவிடும். ஆ !!! இன்னொரு பெண் கொடுமைக்கு பலியாகிவிட்டாள் என. விசாரணை முடிவில் வேறு பல தகவல் வரும் போது பத்திரிக்கைகளுக்கும், பதிவர்களுக்கும் இன்னொரு ஷாக் அடித்த மாதிரி ஆகிவிடும். என்ன செய்வது?. சிம்பிள். அடுத்தடுத்து வரும் செய்திகளை கண்டும் காணாதது போல விட்டுவிடலாம்.
கொஞ்சம் யோசித்து பார்த்தால், பெண்ணுரிமை பற்றி கவலை படுபவர்கள் யார் எனத் தெரியும். மாதர் சங்கங்கள், வலைப்பதிவர்கள், பெண் எழுத்தாளர்கள். இதில் என்ன கொடுமையென்றால், சமூகத்தில் நடைபெறும் பெண்கொடுமைகளால் 99 சதவிகிதம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே. அவர்களைப் பற்றி எழுதி, போராடி, இவர்கள் பெறும் பல சலுகைகள், சம உரிமைகள், அடித்தட்டு மக்களை சென்றடைவது இல்லை. அதற்கு பதிலாக பயன்பெறுவது வேறொருவர்.

எடுத்துக்காட்டாக, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது போடப்பட்ட பட்ஜெட்டில், ஊதியம் பெறுபவர்களில், பெண்களுக்கு மட்டும் கூடுதலான சிறப்பு வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது. இதை அறிந்து, பாராட்டி எழுதினார்கள் பலர். காரணம் இது பெண்ணுரிமை வேண்டுபவர்களை திருப்தி படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மேலும், பெண்ணுரிமைக்காக போராடுபவர்கள் இதன் மூலம் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற தங்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் அடிபணிந்துவிட்டது என மகிழ்ந்தார்கள். இதனால் பயன் பெறுபவர்களில் பலர் வருடத்திற்கு 5 லட்சம், 10 லட்சம் வருமானமாக பெறுபவர்கள். ஒரே வேலையை செய்யும் போது பெண்ணுக்கு மட்டும் ஏன் வரிச்சலுகை. இவ்வரிச்சலுகை, இன்று வரை தொடர்கிறது. காங்கிரஸ் அரசு மேலும், வரிச்சலுகையை அதிகரித்திருக்கிறது. எதற்காக ? இதனால் ஏழைப் பெண்களுக்கு லாபம் ? இதை சரி செய்ய என்ன செய்யலாம் ?
  • அரசாங்கம் உடனடியாக இந்த வரிச்சலுகைக்கான வரம்பை குறைக்க வேண்டும் (இது நடக்கப் போவது இல்லை). குறைத்தால், அதன் மூலம், உண்மையான ஏழைப் பெண்களுக்கு இதன் பலன் போய் சேரும்.
  • பெண் கொடுமைகளை எதிர்த்து போராடும், எழுதும் பலர், இந்த சலுகையை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் கூடுதலாக பெறும் அப்பணத்தை ஏழைப் பெண்களுக்காக செலவு செய்யலாம்.

ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஊதிய ஏற்றத்தாழ்வுகள் எந்த நிறுவனங்களில் இருக்கிறது ?. கண்டிப்பாக அரசாங்கத்துறையில் இல்லை. தனியார் துறையில் (கட்டிட வேலை, டீ, காப்பி எஸ்டேட், ஆடை ஏற்றுமதி) வேலை செய்பவர்களிடம் இருக்கிறது. அதை அரசாங்கம் தன் ஆணையின் மூலம் நீக்கலாம். அதை விடுத்து இந்த மாதிரி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத துறைகளான மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற ஊழியர்களுக்கு வரிச்சலுகைகள் கொடுப்பது மடத்தனமானது.

ஆண் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஆண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள், பெண்ணுரிமை என்ற பெயரில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதனால், ஆண்களுக்கு ஏற்படும் அநீதிகளைப் பற்றி எழுதுங்கள். இலங்கையில் ஒரு இனம் அழிக்கப்படுகிறது. ஆனால், உலக அளவில் இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் இனம் பெரும் கொடுமைகளுக்கு ஆளாகும் என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகிறது. அதனால் தயவு செய்து ஆண்களுக்கு எதிரான பெண்களின் கொடுமைகள் பற்றியும் எழுதுங்கள்.

11 பின்னூட்டங்கள்:

தமிழ். சரவணன் said...

ஐயா... தெய்வமே இத படிக்கும் பொழுது ரொம்ப சந்தோசமா இருக்கு சாமீ...

ஒய்விருந்தால் இந்த வலைபூ தலத்திற்ககு சென்று பார்வையிடவும்..


http://tamil498a.blogspot.com

தமிழ். சரவணன் said...

ஆம் தங்கள் கருந்து அப்பட்டமான உண்மை...

நான் வரதட்சணை கொடுமை சட்டதினால் பாதிக்கப்பட்டவன்..
நான் முற்போக்குத்தனமாக வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யதவன் ஆனால் என்(ங்கள்) மீது இச்சட்டம் பாயப்பட்டு அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றோம்...

இதில் மகாக்கொடுமை என்னவென்றால் என் திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக என் தம்பி நண்பருடைய தாயரை கைது செய்து ஐந்து நாட்கள் புழல் சிறையில் அடைத்தனார் காரணம் என்னவென்றால் இவரும் வரதட்சணை கொடுமைக்கு உடந்தையாக இருந்தார் என்று "கற்புக்கரசி" மனைவி கொடுத்த பொய்புகார்... இதில் அதிகம் பாதிக்கபடுவது என் 15மாதக்குழந்தை.. இவரை நான் பிறந்த பொழுது பாத்தது...

மற்றும் நான் பெற்ற குழந்தையை பார்க சென்றார் நீதிமன்றத்தில் அனுமதிவாங்க வேண்டும் அதுவும் வாரத்திற்கு அல்லது மாத்திற்கு ஒரு மணிநேரம் (டிவி சிரியல் மாதிரி) தான் அனுமதிகிடைக்கும்... அதுமட்டுமல்லாம்ல மேலும் குழந்தையை கடத்தவந்தான் என்றும் பொய்வழக்கு போடாலாம்... ( நம் நாட்டில் என்னவேண்டுமானல் செய்யலாம் பணமும் அரசியல் பலமும் இருந்தால்)

மற்றும் இதுமட்டுமல்லாமல் இச்சட்டத்தினால் எனது தாயர் தம்பி கைது செய்யபட்டு புழல் சிறையில் ஒரு மாத காலத்திற்கு மேல் அடைக்கப்பட்டனர்

இது போல் கொடுமைகள் பல நம் நாட்டில்..

ஆனால் உண்மையிலேயே வரதட்சணை கொடுமை சட்டதினால் பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கு குரல் கொடுக்க யாருமில்லை அவர்களும் கோர்ட்டு கேசுன்னு நாய்அலைச்சல்களுக்கும் பணபிடுங்களுக்கும் பயந்து புகார் கொடுக்க முன்வருதில்லை என்பது தான் உண்மை...

எங்கள் மீது சுமந்த பட்ட ஆபாச வங்கிர குற்றச்சாட்டுகளை படிக்க விருப்பபட்டால் tamizhsaran at gmail dot com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பவும்...

பின்னோக்கி said...

தங்களின் நிலையைக் கண்டு வருந்துகிறேன் தமிழ்.சரவணன். சட்டம் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். உண்மையாகவே வரதட்சணை கொடுமைக்குள்ளான பெண்களும், உங்களைப் போலவும் இருக்கிறார்கள்.

Anonymous said...

எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
பிடித்திருந்தால் பின்தொடருங்கள்

Rettaival's Blog said...

பின்னிட்டீங்க பின்னோக்கி !!! எல்லா எடத்துலையும் இந்தப் பொம்பளபுள்ளைக பண்ற அட்டூழியம் இருக்கே...யப்பா...!

geethappriyan said...

ஆனால் உண்மையிலேயே வரதட்சணை கொடுமை சட்டதினால் பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கு குரல் கொடுக்க யாருமில்லை அவர்களும் கோர்ட்டு கேசுன்னு நாய்அலைச்சல்களுக்கும் பணபிடுங்களுக்கும் பயந்து புகார் கொடுக்க முன்வருதில்லை என்பது தான் உண்மை...//

சரியான நிலைப்பாடு.
உங்களுக்கு நல்ல காலம் சீக்கிரமே பிறக்கட்டும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், நல்ல படிவுங்க நண்பர் பின்னூக்கி

பீர் | Peer said...

பெண்ணியம் பற்றிய சரியான புரிதல் பெண்களிடம் இல்லாததால்.. ஆண்கள், ஆணியம் பேச வேண்டிய காலம்.

aanand blogspot said...

my wife and her father with his lawyer friend help get rs.6,00,000 from my father by saying false promises.we by beleive the relation gave the amount without getting any legal documents like cheque,bond,etc. after getting the money my inlaws fight with us with false statements that i cruel my wife. whenever i ask about the money my father in law who is rtd pa(g) to collector threaten that they file a false dowry case and give trochure to my parents. my parents afraid about the unnecessary police enquiries, some time women police get bribe and toruchure the innnocent.
but women who really affect by dowry are not get 100% help from this law.this law looks good but lot of problems with this law.

RAGUNATHAN said...

@தமிழ். சரவணன்
//கற்புக்கரசி" மனைவி கொடுத்த பொய்புகார்... இதில் அதிகம் பாதிக்கபடுவது என் 15மாதக்குழந்தை.. இவரை நான் பிறந்த பொழுது பாத்தது...

மற்றும் நான் பெற்ற குழந்தையை பார்க சென்றார் நீதிமன்றத்தில் அனுமதிவாங்க வேண்டும் அதுவும் வாரத்திற்கு அல்லது மாத்திற்கு ஒரு மணிநேரம் (டிவி சிரியல் மாதிரி) தான் அனுமதிகிடைக்கும்... அதுமட்டுமல்லாம்ல மேலும் குழந்தையை கடத்தவந்தான் என்றும் பொய்வழக்கு போடாலாம்... ( நம் நாட்டில் என்னவேண்டுமானல் செய்யலாம் பணமும் அரசியல் பலமும் இருந்தால்)

மற்றும் இதுமட்டுமல்லாமல் இச்சட்டத்தினால் எனது தாயர் தம்பி கைது செய்யபட்டு புழல் சிறையில் ஒரு மாத காலத்திற்கு மேல் அடைக்கப்பட்டனர்//

அப்பட்டமான உண்மை...என்னுடன் பணி புரியும் ஒருவர் தங்கமானவர் ...உண்மையாதாங்க...ஆனால் அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்தால் அவர் படும் பாடு சொல்லி மாளாது...

@பின்னோக்கி

அந்த சோகக் கதை மாதிரி நிறைய என் காதுகளில் வந்த விழுந்தது...அது பற்றியும் எழுதலாம்...

பின்னோக்கி said...

aanand, ரகுநாதன் - நீங்கள் சொன்னது போல இது அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைப் பற்றி நிறைய எழுதவேண்டும்.

மனைவி அமைவதெல்லாம்....

RAGUNATHAN said...

நம்மக்கு இன்னும் கலியாணம் ஆகலீங்க :) :) :)