07 October 2009

நெசமாத்தான் சொல்றீங்களா ?

இங்கே இருப்பது , இயேசுவை சிலுவையில் அறைய, அழைத்துச் செல்லும் போது, ஒரு பெண்மணி, துணியால், அவரது முகத்தை துடைத்தாள். அப்பொழுது அவரது முகம் துணியில் பதிவானது. இது பல காலங்களாக இயேசுவின் முகம் என நினைத்திருந்தனர்.
1988-ல் கார்பன் டேட்டிங் முறைப்படி இந்த துணியை ஆராய்ச்சி செய்தபோது, சுமார் 1260-1390 வருடம் தான் இந்த துணி நெய்யப்பட்டது, அதனால் இது இயேசுவின் உருவம் கிடையாது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

தற்போது, இத்தாலியில் உள்ள ஓவியர், 12 ஆம் நூற்றாண்டில் கிடைத்திருக்க கூடிய பொருட்களை வைத்து, அதே மாதிரி ஓவியத்தை படைத்திருக்கிறார். இதன் மூலம் 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டில் தான் இயேசு உருவத்தை வரைந்திருக்கிறார்கள் என உறுதி செய்துள்ளனர்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு டம்ளர் பால் குடித்தால், நம் உடலில் 0.02 சதவிகிதம் ஆல்கஹால் ரத்தத்தில் ஏறிவிடுமாம். அமெரிக்காவில் சில மாநிலங்களில், இந்த அளவு ஆல்கஹால், 21 வயதுக்கு குறைவான வண்டியோட்டியிடம் காணப்பட்டால், அவர்களில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுமாம்.

இதன் மூலம் அறியப்படுவது என்னவென்றால், அமெரிக்காவில், பனை மரத்துக்கு கீழே உட்கார்ந்து பால் குடிச்சாலும், அது ”கள்” தான். நம்ம பெரியவங்க இதெல்லாம் ஆராய்ச்சி செய்து தான் சொல்லிருக்காங்க போல.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி-டைம்ஸ் ஆஃப் இந்தியா

12 பின்னூட்டங்கள்:

Anonymous said...

பிள்ளையார் பால் குடிச்ச மாதிரித்தான்

பின்னோக்கி said...

சின்ன அம்மிணி-எங்க வீட்டு பக்கத்துல இருந்த பிள்ளையார் பால் குடிச்சாருங்க...பார்த்த நியாபகம் இருக்கு...இத சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க:)

யாசவி said...

informatic

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

geethappriyan said...

ரொம்ப நல்ல ஆராய்ச்சிங்க,
சோ பாலும் போதை தான் போல.
ஒட்டு போட்டாச்சு.
நான் எப்போவும் என் கீதப்ப்ரியன்
என்னும் ப்ளாக்ல தான் அதிகம் எழுதுவேன்.
கார்த்திகேயன் ஸ்வாமி க்ளாசிக் டெம்ப்லேட் என்பதால்
எந்த கவ்ன்டரும் ஒட்டு பட்டையோ வைக்க முடியலை,
இப்போ ஒரு கார் டிக்கி குரங்கு வீடியொ போடிருக்கேன் பாருங்க பாஸ்.

பின்னோக்கி said...

கார்த்திக் - நன்றி. உங்களிடம் கேட்க வேண்டுமென நினைத்திருந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
யாசவி, துபாய் ராஜா - நன்றிகள் பல

ISR Selvakumar said...

“இயேசு நாதர் துணி” பற்றி இன்னும் விளக்கமாக தமிழில் படிக்க விரும்புகிறேன். மேலும் விளக்கமாக எழுதுவீர்களா?

Anonymous said...

Check this site for subsequent studies and research on this, there are lot more available

www.shroudforum.com

RAGUNATHAN said...

பாலு மேட்டரு சூப்பரு தல... :)

RAGUNATHAN said...

ஓட்டும் போட்டாச்சு :)

Anonymous said...

பாலிலும் ஆல்கஹால் இருக்கா?

பின்னோக்கி said...

பேப்பர்ல போட்டுருந்துச்சு. திருமதி ஜெயசீலன். எனக்கும் நம்ப முடியலை.