09 October 2009

நிலவுக்கு மேலும் இரண்டு வடுக்கள்

சந்திராயன் -1 நிலவில் தண்ணீரை கண்டுபிடித்ததையடுத்து, இன்று (9 அக்டோபர்) மாலை 5.00 அளவில், நாசா இரண்டு விண்கலங்களை, நிலவின் மீது மோத வைக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த மோதலில் கிளம்பும் தூசியை ஆராய்ந்து அதில் தண்ணீர் இருக்கிறதா என்பதை கண்டறிய திட்டம்.


இந்த இரண்டு மோதல்கள், சுமார் 6.6 மீட்டர் விட்டமுள்ள வட்டமான பள்ளங்களை ஏற்படுத்தும். பல வருடங்களுக்கு முன் வியாழன் கிரகத்தின் மேல் ஷீமேக்கர் லெவி என்ற விண்மீன் மோதியதையடுத்து எழுந்த பிரகாசமான ஒளி பூமியிலிருந்து பார்க்க முடிந்தது. அதுபோல இந்த மோதல் அந்த அளவு ஒளியை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த ஆராய்ச்சிகள் இன்னம் 50 வருடம் கழித்து நிலவில் மனிதன் குடியேற உதவும். போகிற போக்கில், பூமியை மனிதன் 50 வருடங்களில் அழித்துவிடுவான். அதனால் இந்த ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெறுகிறது.

உங்களிடம் தொலை நோக்கி அல்லது பைனாக்குலர் இருந்தால், 5 மணிக்கு அதை நிலவின் பக்கம் திருப்புங்கள்.

சுடச்சுட செய்தி (மாலை 5.15 மணி)

சற்று முன், 2 நாசா விண்கலங்கள் நிலவில் மோதியுள்ளன. இதனை ஹப்புள் தொலைநோக்கி பதிவு செய்துள்ளது. விரைவில் நாசா இது குறித்த புகைப்படங்களை வெளியிடும்.

4 பின்னூட்டங்கள்:

தமிழ் அமுதன் said...

//போகிற போக்கில், பூமியை மனிதன் 50 வருடங்களில் அழித்துவிடுவான். அதனால் இந்த ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெறுகிறது.//

;;((

geethappriyan said...

ரொம்ப நல்ல தகவல் சொன்னீங்க நண்பர் பின்னோக்கி
ஓட்டுக்கள் போட்டாச்சு

கலையரசன் said...

நல்ல தகவல்! பூமிய அழிகிறதை சொல்லலை..

Saamuraai said...

nalla thakaval napaa...