28 October 2009

வேலை காலி-இல்லை

இது நாள் வரை பேப்பர் மற்றும் டி.விக்களின் வழியே கேள்விப்பட்ட விஷயம் “கணினித்துறையில் ஆட்குறைப்பு”. நம்ம கம்பெனியில அது மாதிரி எதுவும் நடக்காது. நாம வேலை செய்யுறது தொலைதொடர்புத் துறை. அது இந்த பொருளாதார வீழ்ச்சியில பாதிக்கப்படலை” போன்ற எங்களின் நம்பிக்கையை தகர்த்து,  நான் வேலை பார்க்கும், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கம்பெனியில், போன வெள்ளிக்கிழமை, நிறைய பேரை வெளியே அனுப்பிவிட்டார்கள். இந்தியாவில் வேலை செய்ததால் நான் தப்பினேன்.


50 பேர் வேலை செய்த இடத்தில் இப்பொழுது 5 பேர். பலவருடங்களாக ஒன்றாக வேலை பார்த்தவர்கள், சில மணி நேரத்தில் வெளியேறியது ஒரு பெரிய அதிர்ச்சி. 6 மாதத்திற்கு முன்பிருந்ததை விட இப்பொழுது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. அதனால், வேலையிழந்ததில் 50 சதவிகிதத்தினர் உடனடியாக வேறு கம்பெனியில் சேர்ந்துவிட்டார்கள். வேலையிலுள்ளவர்கள், தங்கள் வேலை எப்பொழுது போகுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள்.

அரசாங்க வேலையை விட அதிக சம்பளம், ஆனால் வேலை அவர்களைப் போல 58 வயதுவரை இருக்கும் என்பது நிரந்தரமில்லை.  பெரும்பாலோனோர் ஐ.டி வேலையிலிருப்பவர்கள் மேல் கொண்டுள்ள வெறுப்பை பற்றி இந்த பதிவில் எழுதியிருந்தேன். அரசாங்க வேலையிலிருப்பவர்கள் 58 வயது வரை வேலையிலிருந்து, சம்பாதித்தை வைத்து கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டு, அதன் வருமானத்தில் எஞ்சிய நாட்களை கழிப்பவர்கள். அவர்கள் கேட்ட வாடகையை குடுத்து வசித்தவர்களில் பெரும்பாலோனோர் ஐ.டி துறையில் வேலை பார்த்தவர்கள் தான். இப்பொழுது உள்ள நிலைமையில், வாடகைகள் குறைய கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. பொருளாதாரம் என்பது ஒரு வட்ட வடிவ சங்கிலி. அதில் ஒரு இடம் அறுபடும் போது, சமூகத்திலுள்ள அனைவரும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள். இதை பலர் உணர்வதில்லை.

இந்தியாவில் ஆட்குறைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த கம்பெனியில் வேலை தேடும்போது, அவர்களை திறமைகுறைவினால் வேலையிழந்தவர்களாகவே பார்க்கிறார்கள். கம்பெனியில் ஒரு பிரிவு லாபகரமாக இயங்காவிட்டால் அந்த பிரிவில் உள்ள அனைவரும் வேலை இழக்கிறார்கள். அமெரிக்காவில் ஆட்குறைப்பினால் வேலை இழந்தவர்களை திறமை குறைந்தவர்களாக அங்கு பார்ப்பதில்லை. அதனால் அடுத்த வேலை கிடைப்பது சற்று எளிதாக இருக்கிறது. இந்தியாவிலும் இத்தகைய மனப்பான்மை வரவேண்டும்.

முதல் ரவுண்டில் வேலையை தக்கவைத்துக் கொண்டாகிவிட்டது. அடுத்து என்ன நடக்கும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி...

9 பின்னூட்டங்கள்:

geethappriyan said...

அருமை நண்பரே ,எங்கே போனீர்கள் ஒருவாரம்?
பதிவை மிஸ் செய்தோம்.

இது மிகவும் மனதை பாத்தித்த பதிவு,இன்று கூட என் முன்னாள் சக ஊழிய நண்பருக்கு வேலை போய்விட்டது, இப்போது துபாயில் வேலை கிடைப்பதே அபூர்வமாகிவிட்டது, நானும் போன வருடம் வேலை இழந்து பின்னர் கடவுளின் அருளால் கிடைக்க பெற்றவன் தான்.

அரசு ஊழியர்களுக்கு நிலையான வேலை.
தனியார் ஊழியர்களுக்கு நிலையில்லாத வேலை

பெரும்பாலான அரசு ஊழியர் வாங்கும் சம்பளம்+ கிம்பளமும் தனியார் ஐடி ஊழியர் 12 மணி நேரம் உழைத்து வாங்கும் சம்பளமும் சமமே.

இதில் ஐடி ஊழியருக்கு மன உளைச்சலுக்கு நிறைய வாய்ப்பு உள்ளது.அதை யாரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

சண்டாள ரிசெஷனில் எந்த அரசு ஊழியருக்காவது வேலை போனதா?
இப்போது சொல்லுங்கள் யாரைப்பார்த்து யார் வயிறெரிவது? தனியார் ஊழியர் வேலை செய்யாமல் இருப்பது மிக அபூர்வம்
அரசு ஊழியர் வேலை செய்வது அபூர்வம்.
மிக நல்ல இடுகை.ஓட்டுக்கள் போட்டாச்சு

பின்னோக்கி said...

நன்றி கார்த்தி. அலுவலகத்தில் நடந்த இந்த மாற்றம் மற்றும் சொந்த ஊர் பயணம். அதனால் இந்த இடைவெளி. நிறைய பதிவுகளை படிக்கவேண்டும்.

Anonymous said...

//இந்தியாவில் ஆட்குறைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த கம்பெனியில் வேலை தேடும்போது, அவர்களை திறமைகுறைவினால் வேலையிழந்தவர்களாகவே பார்க்கிறார்கள்.//

ரொம்பச்சரி. ஒரு அலுவலகத்தில் குறிப்பிட்ட துறை மட்டும் மூடப்படும்போது அத்துறையில் வேலை செய்பவர்கள் வேலை இழக்க நேரிடலாம். அதற்காக அவர்களை திறமையற்றவர்கள் என்று கருதுவது இந்தியாவில் மட்டுமே.

ப்ரியமுடன் வசந்த் said...

:(

Anonymous said...

Really a bad news for many who were marching towards IT industry.
Like kids you are all tlking has any govt. employee lost his job?? The jobs are replaced by the so called IT revolution replacing millions and millions of people. Manytimes people dont realise that whenever somethin is reaching peak it will have afall also. And the attitude of the so called IT employed towards others also very much questionable. As if only It people have tension, your so called industry has created so much stress and tension in other industry's people also. Pity is countries like India with lots of natural resources started compromising natural resource based industries to this IT technical field is leadin to its millions and millions towards hunger and man made famine soon. The reason is the so called 'What if, wheneveryone is facing ..." athavathu ellarukkum enna nadukkutho mentality of indian people is leadin to their poverty based disparities and all stress and tesnion.

velji said...

as you said the downfall has its effect on other economic sectors.even in southernparts realestate business get affected.
in peaktimes,as highly paid job holders are so young, they spent heavily and a new culture was born.they didnt bargain anything and were responsible for high rents.

நர்சிம் said...

//இந்தியாவில் ஆட்குறைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த கம்பெனியில் வேலை தேடும்போது, அவர்களை திறமைகுறைவினால் வேலையிழந்தவர்களாகவே பார்க்கிறார்கள்//

ரொம்பத் தவறு பாஸ். வேலை இழந்ததன் காரணங்கள் தெளிவாக தெரிந்தே இருக்கிறது.தனித் திறமைகள் இருக்கும் எவரும் வேலையை வேறு காரணங்களுக்காக இழந்தாலும் உடனடியாக அடுத்த கட்டம் நோக்கி நகரும் விதமே இருக்கிறது.

குறைத்து மதிப்பிட வேண்டாம் இந்திய அதிகாரிகளையும் சந்தையையும் மேலாண்மைத் திறனையும்.

பின்னோக்கி said...

நன்றி சின்ன அம்மிணி, வசந்த்,வேல்ஜி.
நன்றி நர்சிம் - நீங்கள் சொன்னது மாதிரி இருந்தால் வேலை இழந்தவர்களுக்கும், இழக்கப்போகிறவர்களுக்கும் நல்லது :)

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு, பகிர்வு