ஐடியா - 1
நீங்க பார்த்தீங்கன்னா, ரோட்டோரம் காம்பவுண்டு சுவர் இருக்குற வீட்டுக்காரங்களுக்கு பிரச்சினை, நிறைய பேரு காம்பவுண்டு சுவர்கிட்ட வந்து உச்சா போய்டுவாங்க. அந்த இடமே இலவச டாய்லெட் மாதிரி ஆகும். இதை தடுக்க “இங்கு உச்சா போகாதீர்கள்”னு எழுதிப்போட்டா, அதுமேலயே உச்சா போய்டுறாங்க. என்ன பண்றது ?. ஒரு சின்ன கேமிராவ காம்பவுண்ட் சுவர்ல பதிச்சு வெச்சுடுங்க. உங்க வீட்டுக்கு மேல நிறைய பேர் பார்க்க கூடிய இடத்துல, ஒரு எல்.சி.டி ஸ்கிரீன் வெச்சுடுங்க. உச்சா மேல பட்ட உடனே ஆக்டிவ் ஆகுற மாதிரி ஒரு சென்சார கேமிரால பிக்ஸ் பண்ணிடுங்க. அப்புறம் என்ன ? யாரவது வந்து அசிங்க பண்ணுனா, சுட சுட ??!!! போட்டோ எடுத்து, எல்.சி.டி ஸ்கிரீன்ல போடுங்க. தலைப்பு “இன்றைக்கு உச்சா போனவர்கள்”. ஐடியா நல்ல இருக்குல்ல ? ஒரே நாள்ல நிறைய பேரு வந்துட்டா ? கவலை வேண்டாம் ஸ்லைடு ஷோ மாதிரி போட்டுவிடுங்க.ஐடியா - 2
ஐடியா-1ன படிச்சுட்டு..இங்க பாரேன், இந்த பையனுக்குள்ள இத்தனை திறமையான்னு யோசிக்கிறீங்கன்னு மட்டும் புரியுது. என்னைய பாராட்டுறத்துக்கு முன்னாடி இந்த ஐடியாவ படிச்சுடுங்க.பஸ்ல போற லேடீஸ்க்கு இடி மன்னர்களால தொல்லை. தனிப்பட்ட முறையில வடிவமைக்கப்பட்ட புடவையில, சரிகைமாதிரி இருக்கக் கூடிய சின்ன சின்ன கம்பிகளை வெச்சு, அதுல அதிகம் இல்லை ஜென்டில்மென் ! ஒரு 10 அல்லது 20 வோல்ட் கரெண்ட் பாயுறமாதிரி செட்டப் செஞ்சுட வேண்டியது. இடி மன்னர்கள் பக்கத்துல இருக்குற மாதிரி தெரிஞ்சா, கண்ட்ரோல் பட்டனை ஆன் பண்ணவேண்டியது தான், கரெண்ட் பாய வேண்டியதுதான், இடி மன்னர்கள், திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி கத்த வேண்டியது தான்.
ஐடியா - 3
இது உண்மையாலுமே தமாசு ஐடியா இல்லை. ரொம்ப சீரியஸ். கேர்புல்லாக் கேட்டுக்கோங்க. சிவப்பு விளக்க பார்த்த உடனே நிக்கனும்னு நம்மில் பல பேருக்கு புரியறதில்லை. அப்பதான் ஸ்பீடா சிக்னல தாண்டி போகணும்னு நினைப்போம். இதை தடுக்க, ரோடுல நிற்கன்னு எழுதியிருக்குற கோட்டுல, சின்ன சின்ன கத்தி மாதிரி செஞ்சு வெச்சுடனும். ரெட் சிக்னல் விழுந்தவுடனே, அந்த கத்தி எல்லாம் ரோட்டுல இருந்து மேல வர்ற மாதிரி ஒரு செட்டப். அதை தாண்டி வந்தா டயர் பஞ்சர் ஆகிடும்.*******
இந்த ஐடியாக்கள் எல்லாம் படிச்சுட்டு டென்ஷன் ஆனவங்களோட டென்ஷன குறைக்க என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு..அது என்னன்னா ...............
30 பின்னூட்டங்கள்:
நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்க
முதல் ஐடியா பகீர்....
உங்க ஓட்டையும் போடுங்க, தமிழ் மணத்துல....
பிரபாகர்.
Iam also Thinging The Red Signal Idea & one
நன்றி கதிர், பிரபாகர் (ஓட்டு போட்டாச்சு. நினைவுறுத்தலுக்கு நன்றி). Busy.
நீங்க எப்பவுமே இப்படி தானா..?
எம்புட்டு அறிவு...
இதெல்லாம் ஒரு கல்வெட்டுல பதிச்சு...
ரசித்தேன் நண்பரே...
அடுத்த முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்ல போட்டி போடுங்க பின்னோக்கி கட்டாயம் வெற்றி பெறுவீங்க.........
நல்ல ideaகள்
ரசித்தேன் ..:)
நன்றி முனைவர்.இரா.குணசீலன் - கல்வெட்டுல பதிச்சுட்டு அப்படியே பக்கத்துல உட்கார சொல்லலை :)
நன்றி Bavan. அந்த அளவுக்கு இல்லைன்னாலும் ஒரு இந்தியா பிரதமர் பதவி மாதிரி சின்னதா குடுத்தாகூட ஏத்துக்கு தயாராயிருக்கேன்.
//இந்த ஐடியாவ படிச்சுட்டு டென்ஷன் ஆனவங்களோட டென்ஷன குறைக்க என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு..அது என்னன்னா ............... //
இதே மாதிரி நீங்களும் ஒரு பதிவு போடுங்கன்னு சொல்லுவீங்களோ :-)
கொலைவெறியோடத்தான் கிளம்பீருப்பிங்க போலயே!
மூணாவது ஐடியா நிறைய ஆங்கிலப் படம் பார்ப்பதால் வந்ததா நண்பா...? நல்ல வேலை ரெண்டாவது ஐடியா-வையே முதல் குற்றத்துக்கும் பண்ண சொல்லலை...தப்புச்சாய்ங்க....:-))))
நம்ம ஆளுங்க கேமரா-ல துணிய கட்டிப்புட்டு அடிபாய்ங்க....உஷரானவய்ங்க...
அப்புடியே கேமராவ கிளப்பிகிட்டு போகாம இருக்க ஒரு ஐடியா, பலான படம் காட்டுறான்னு போலீஸ் வருவான்ல, அவன சமாளிக்க ஒரு ஐடியா எல்லாம் யோசிங்க சாமிகளா. :))
:)
முதல் இரண்டை படித்து விட்டு வீடு முழுக்க சப்தமாக சிரித்தோம். கற்பனையில் நினைத்துப்பார்த்தோம். ஆனால் மூன்றாவது அவஸ்யம் திருப்பூருக்கு தேவை குமார்.
ரொம்ப உங்களை மிஸ் பண்ணிட்டேன்.
அது என்னன்னா ...
நல்லா கிளம்பிட்டாங்கய்யா........
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ ?
இங்க பாரேன், இந்த பையனுக்குள்ள இத்தனை திறமையான்னு யோசிக்கிறீங்கன்னு மட்டும் புரியுது.///
ஹாஹாஹா,
ஒரே சிரிப்பு தான் இங்கு.
முதல் போட்டோவில் கத்தரிக்கோலை பார்த்து பயந்துவிட்டேன். நல்ல வேளை.
அட..!
ரோஸ்விக் - ஆங்கிலப்படத்திலிருந்து சுட்ட ஐடியாதான்.
வானம்பாடி - தெரியாத இடத்துல கேமிரா வைக்கணும்.
நன்றி ஜோதிஜி,அத்திரி,செய்திகள்,கார்த்தி,சஞ்சய்காந்தி,மனா,வித்யா,வால்பையன்
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
:) Nallaa irukku Pinnokki
ரெட் சிக்னல்,கத்தி நல்ல ஐடியா
என்னோட காத்து உங்க பக்கமும் அடிக்குதா?
Mudiyala saami...
பிரியமுடன் வசந்த்: உங்களை மிஞ்ச முடியுமா. நீங்க தான் பர்ஸ்ட் (http://priyamudanvasanth.blogspot.com/2009/10/blog-post_28.html)
சிவாஜி சங்கர் - :)
அருமை.ஐடியா 1 டாப்.
ஏன் இந்த வெறி
ஐடியா 3 சிலநாடுகளில் செக் பாயிண்டுகளில் உபயோகத்தில் உள்ளது.
kalakkal ideas...
:-))
காப்புரிமை பதிவு பன்ன முயற்ச்சி பன்னலாம் :)
தமிழில் என்னுடைய முதல் பின்னூட்டம். தப்பு இருந்தா மன்னிக்கவும்!
Hello, ippo thaan unga blog padikrua santharpam kidachathu...ithu la irukura 3rd idea naanum already yosichu vecha idea thaan :) nama nattula appadi onnu venum..iruntha niraya accident thavirkalam...
Post a Comment