07 October 2009

முட்டை எதுக்கு எடுக்க ?


கொஞ்சம் நாள் முன்னாடி அரியலூர்ல நிறைய டைனோசர் முட்டை கண்டுபிடிச்சாங்க. நம்ம பய புள்ளைங்க நேத்து என்ன பண்ணிருக்காங்கன்னா, அங்க போய், இவனுங்களும் முட்டைய தோண்டி எடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க.


சரி எதுக்கு இப்படி முட்டைய எடுத்துட்டு போறாங்கன்னு யோசிச்சு சில காரணம் கண்டுபிடிச்சுருக்கேன்.

  • கோழி முட்டையில ஒரு ஆம்ப்லெட் தான் போடலாம். டைனோசர் முட்டையில எக்கச்சக்க ஆம்ப்லெட் போடலாம்.
  • பாடி பில்டப் பண்றவங்க, கோழி முட்டைய குடிக்குறாங்க. அதுக்கு பதிலா டைனோசர் முட்டை குடிச்சா சீக்கிரம் 60 பேக் வந்துடும்னு நினைச்சிருக்கலாம்.
  •  கோழி முட்டைய எடுக்க போனா, கோழி நம்மள கொத்த வரும். ஆனா, டைனோசர் கடிக்க வராதுன்ற தைரியம் தான்.
  • சத்துணவுல போடுறத்துக்கு இந்த முட்டைய யூஸ் பண்ணிட்டு, பொய் கணக்கு எழுதிடலாம்.
  • குழந்தைங்க கோழி குஞ்சு வளர்க்க ஆசைப்படற மாதிரி டைனோசர் குட்டி வளர்க்க ஆசைப்பட்டிருக்கலாம்.
வேற எதாச்சும் காரணம் தெரிஞ்சா பின்னூட்டத்துல போடுங்க..

9 பின்னூட்டங்கள்:

RAGUNATHAN said...

//கோழி முட்டையில ஒரு ஆம்ப்லெட் தான் போடலாம். டைனோசர் முட்டையில எக்கச்சக்க ஆம்ப்லெட் போடலாம்.//
நல்ல நகைச்சுவை....நல்ல இருக்கு. தொடருங்க... :)

நாமக்கல் சிபி said...

:)

கலையரசன் said...

முக்கியமா ஓசியில கிடைச்சா நாங்க கோழி முட்டையில்லை.. டைனோசர் முட்டையையே குடிப்போமுல்ல..!!

பின்னோக்கி said...

ரகுநாதன் - நகைச்சுவை திலகத்திடமிருந்து பாராட்டு. நன்றி

அகஆழ் said...

அருமை நண்பர் ‘பின்னோக்கி’ அவர்களே.
என் சார்பா ஒண்ணு
”கணக்குல என்ன மதிப்பெண்னு அப்பா கேட்டா “பெரிய முட்டை” னு சிம்பாலிக்க சொல்ல தான்.

பின்னோக்கி said...

அகஆழ் - நல்ல ஐடியாங்க..சொல்ல முடியாது..பயபுள்ளைங்க உண்மையாலுமே அதுக்கு எடுத்துகிட்டு போயிருக்கலாம்.
நன்றி ஜீவன்

ப்ரியமுடன் வசந்த் said...

செம்மயா இருக்கு....நகைச்சுவை கலந்து கட்டி கலக்குங்க வாழ்த்துக்கள்

//சத்துணவுல போடுறத்துக்கு இந்த முட்டைய யூஸ் பண்ணிட்டு, பொய் கணக்கு எழுதிடலாம். //

சின்ன சமுதாய சாடலும் நல்லாருக்கு

geethappriyan said...

முக்கியமா ஓசியில கிடைச்சா நாங்க கோழி முட்டையில்லை.. டைனோசர் முட்டையையே குடிப்போமுல்ல..!!

கலை வந்துட்டியா?
இனி கெட்ட கலாய்தான்.

நண்பர் பின்னோக்கி நல்ல லொல்லுங்க.
ஓட்டு போட்டாச்சு

Anonymous said...

கோழி முட்டைய எடுக்க போனா, கோழி நம்மள கொத்த வரும். ஆனா, டைனோசர் கடிக்க வராதுன்ற தைரியம் தான்.
ம்ம் ந்ல்லா எழுதற பின்னோக்கி