20 September 2009

இரவு 11 மணி 14 நிமிடங்கள்


11:14 என்பது ஒரு இங்கிலீஷ் படத்தின் பெயர். பெயரைப் போலவே 1 மணி 20 நிமிடங்களில் படம் முடிந்துவிடுகிறது.

கதை என்ன ?. காரை ஓட்டிவருபவன், ஒருவன் மேல் இடித்துவிடுகிறான். இந்த  சம்பவம் நடக்கும் 15 நிமிடங்களுக்கு முன்னால், காரை ஓட்டுபவனிடம் ஒரு கேமிரா அதே போல கார் இடித்து இறந்தவனிடம், இன்னொரு கேமிரா வைத்து காண்பித்தால் எப்படி இருக்கும் ? .

கொஞ்சம் யோசியுங்கள் ! காரை ஓட்டி வருபவன் ஒரு 10 நொடி தாமதமாக கிளம்பி இருந்தால், அந்த விபத்து நடந்திருக்காது. நம்ம தமிழ் படம் சரோஜா, ஆய்த எழுத்து போன்றவற்றில் இடம் பெற்ற அதே யுக்தி தான்.

படத்தில் 2 விபத்துக்கள், 11:14 நிமிடங்களுக்கு  நடக்கிறது. 5 தனிப்பட்ட சம்பவங்களில் சம்மந்தபட்டவர்கள் தான், அந்த 2 விபத்துக்களிலும் சம்மந்தபட்டிருக்கிறார்கள். இதை எடுத்தவிதத்தில் டைரக்டர், பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு, கொஞ்சம் அசந்தால் சீட்டைவிட்டே விழ வைக்கிறார். திரைக்கதை அமைப்பது எப்படி என்று ஒரு பாடமே நடத்தலாம் இந்த படத்தை வைத்து.

முதல் 5 நிமிடப் படத்தை மட்டும் பார்ப்போம்.


குடிபோதையில், தன் காதலியிடம் செல் போனில் பேசிக்கொண்டு வருபவன், 11:14 நிமிடங்களுக்கு ஒருவன் மேல் மோதி விடுகிறான். ஆள் காலி. காரை விட்டு கீழே இறங்கி பார்க்கும் போது, இன்னொரு கார் வருகிறது. அதைப் பார்த்து, பயந்து, இறந்தவனை, காரின் ட்ரங்கில் மறைக்கிறான். அந்த காரை ஓட்டி வருபவள், காரை நிறுத்தி ”என்ன ஆச்சு, மான் மேல மோதிட்டியா ?” எனக் கேட்கும்போது தான், அது மான்கள் நடமாடும் இடம் என அவனுக்குப் புரிகிறது.

அவன் உதவி எதுவும் தேவையில்லை என்று சொல்லியும் கேட்காமல், அவள், போலீஸ்க்கு சொல்லிவிட்டு, கிளம்புகிறாள். இவன், அந்த இடத்தை விட்டு போய்விடலாம் என நினைத்து காரை எடுக்கும் போது போலீஸ் வந்துவிடுகிறது.

”என்ன குடிச்சுட்டு வண்டி ஓட்டுனியா ?”
“இல்லை”
“பரவாயில்லை. வண்டியை விட்டு கீழே இறங்கு”
அவன் இறங்கியவுடன்
“abcd ரிவர்ஸில் சொல்லு”
“zyx...."

அதற்குள் அவன் டிரைவிங் லைசன்ஸை செக் பண்ணி பார்த்துவிட்டு, அது 3 மாதங்களுக்கு முன்னே வேறோரு குற்றத்திற்காக, நீக்கப்பட்டுவிட்டதை அறிந்து, அவனுக்கு கைவிலங்கிடுகிறார்.

வண்டியின் ட்ரங்கை திறந்து பார்க்கும் போது, ரத்தக் கறையைப் பார்த்து
“மானை அடிச்சதும் இல்லாம தின்றதுக்கு எடுத்துட்டு போறியா ?”
“இல்லை”
அதற்குள் போர்வையை விலக்கி, அது மான் இல்லை, ஆண் எனத்தெரிந்து, தகவல் கொடுக்கிறார்.

போலீஸ் காரில் அவனை உட்காரச் சொல்லும் போது, அங்கே, ஏற்கனவே கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு பேர் இருப்பதைப் பார்க்கிறான்.
அவன், போலீசை விட்டு ஓடப்பார்க்க, போலீஸ் அவனைத் துரத்த, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த இரண்டு பேரும் தப்பித்து போகிறார்கள்.

அந்த இரண்டு பேரும் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் எனப் பிறகு காண்பிக்கிறார்கள்.

திரில்லர் படப்பிரியர்கள் இந்த படத்தை மறக்காமல் பாருங்கள்.

பின்குறிப்பு:

ஆங்கிலப்படங்களை, டிவிடி வாடகைக் கடைகள் அல்லது தெருவோரங்களில் டிவிடி விற்பவர்களிடம் இருந்து வாங்கிப்பார்க்கலாம். <பலரின் எச்சரிக்கையினால் இந்த பகுதி நீக்கப்பட்டது>

4 பின்னூட்டங்கள்:

தமிழ் அமுதன் said...

..

geethappriyan said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க பாஸ்.
இதை உடனே டவுன்லோடு செய்கிறேன்.
இன்னும் இதுபோல தொடருங்கள்.
ஓட்டுக்கள் போட்டாச்சு

geethappriyan said...

தமிலிஷ் மற்றும் தமிழ்10 மற்றும் உலவு திர்ட்டியிலும்
வெளியிடுங்கள்,தமிழ்10 பட்டியை உங்க தளத்தில் நிறுவுங்க்கள்.
நிறைய பேர் பார்த்து பயனடைவர்

பின்னோக்கி said...

கார்த்திக் - நீங்கள் ஆங்கில படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில் தனியிடத்தை பிடித்தவர். நான் எழுதியது விமர்சனமாகாது. இந்த படத்தைப் பற்றிய ஒரு சின்ன முன்னோட்டம் மட்டுமே. உங்களுக்கு இப்படம் பிடிக்கும் என எண்ணுகிறேன்