08 September 2009

ராகிங் – நடந்தது என்ன ? – ஒரு அப்பாவியின் அனுபவம்


ராகிங் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். ஆன எனக்கு இதுல வித்யாசமான அனுபவம். நான் இஞ்சினியரிங் காலேஜ்ல முதல் வருடம். என் மூன்றாவது அண்ணன், அதே காலேஜ்ல கடைசி வருஷம். அதுனால எனக்கு ராகிங்னு ஒன்னு நடந்து இருக்காதுன்னு நீங்க தப்பு கணக்கு போடக்கூடாது.


நான் டேஸ்காலர். பஸ் புடிச்சு 30 கிலோமீட்டர் தெனமும் போகணும். சீனியர் எல்லாம் கிளாஸ்க்கு கூட கரெக்ட்டா போகமாட்டாங்க, ஆனா பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்குற பொட்டி கடைல கரெக்ட்டா 4 மணிக்கு உட்கார்ந்திருப்பாங்க. வருஷம் முழுசா பார்த்தீங்கன்னா, கிளாஸ் அட்டணென்ஸ் கம்மியா இருக்கும் ஆனா பொட்டிக் கடை பெஞ்சு அட்டணென்ஸ் அதிகமா இருக்கும்.

பஸ் ஸ்டாப்ல பாவமேன்னு காத்திருப்போம். அப்பக் கொத்தா அள்ளிக்கிட்டு பொட்டிக் கடைக்குள்ள போடுவாங்க. 3 சீனியருக்கு 2 ஜுனியர்ன்னு பங்கு பிரிச்சுப்பாங்க.


மாட்டுனது – 1

“உன் பேரு என்னடா ?”

“பின்னோக்கி (ஹு..ஹீ...உங்களுக்கு என்னை இப்படித்தானே தெரியும். அதுனால இப்படியே தொடருவோம்)”

“ஏன்டா.. உன்ன மஞ்ச கலர் பை தானே எடுத்துகிட்டு வரச்சொன்னேன் ?”

“சார்.. மஞ்ச கலர் பை கிடைக்கல சார். நாளைக்குத்தான் துணிக்கடைக்கு போவேன். அப்ப கண்டிப்பா வாங்கிட்டு வர்றேன் சார்”

அதுக்குள்ள இன்னொருத்தன் நம்ம பாடி பார்ட்ஸ் அனலைஸ் பண்ணிமுடிச்சுட்டு “மச்சான் ..இவனுக்கு என்ன கொழுப்பு பார்டா மீசை வைச்சுக்கிட்டு இருக்கான்”

“டேய் !! நீ பெரிய ..... டா ? மீசை எடுக்க மாட்டியோ ?”

“இல்ல சார், அன்னைக்கு இன்னொருத்தர் எல்லாரையும் செக் பண்ணிட்டு... நீ மீசை வெச்சுருந்தா தான் கேவலமா இருக்க..அதுனால நீ மீசை எடுக்க வேண்டாம்னு சொன்னார். அதுனால தான் சார் எடுக்கலை.”

“ஓ..அவன் சொல்றத தான் செய்வியா ? நான் சொன்னா செய்ய மாட்டியா ?”

இப்படி, நான் என்ன பதில் சொன்னாலும் மாட்டிப்பேன். அதுனால இந்த அனுபவத்துக்கு பிறகு..வாயை மூடிக்கிட்டு அவங்க சொல்றத மட்டும் செய்ய பழகிக்கிட்டேன். அப்புறம் என்ன !! அடுத்த நாள் மீசை இல்லாம போனதால உட்டாய்ங்க..மறந்துட்டேனே மஞ்சப்பைய..அதுவும் தான் எடுத்துக்கிட்டு போனேன் (என்னப்பா இஞ்சினியரிங் படிக்குற இந்த மாதிரி மஞ்ச பையெல்லாம் எடுத்துகிட்டு போறியே.. நல்லா இல்லப்பா – இது என் சித்தி கமெண்ட்..)”



மாட்டுனது – 2

இன்னொரு நாள் ....

“உன் பேரு என்னடா ?”

”.....”

பேர் சொன்னதும், விவரமான சீனியர் ஒருத்தன் “டேய் !! இவன்...அவனோட தம்பிடா”

அவ்வளவுதான், என்னை மட்டும் இருக்க சொல்லிட்டு மத்தவனுங்கள போக சொல்லிடுவாங்க

(அடுத்த நாள்ல இருந்து என் கிளாஸ் மேட் எல்லாம் என் கூட வர போட்டி போட்டது..தனி எபிசோட்)

(என் மூணாவது அண்ணனுக்கு பென் பிரண்ட்ஸ் அதிகம்..சாரி...பெண் பிரண்ட்ஸ் அதிகம். இதுனால, அவன் மேல பலருக்கு காண்டு...இந்த மேட்டர் எல்லாம் இந்த அப்பாவிக்கு எப்படித் தெரியும் சொல்லுங்க ?)

“டேய்...உன் அண்ணன் பெரிய இவனாடா ?”

“அப்படியெல்லாம் இல்ல சார்”

“ஆனா அவன் பெரிய இவன் மாதிரிதான்டா நடந்துக்குறான்..இது எல்லாம் நல்லா இல்ல..அவன்கிட்ட சொல்லி வைய்”

“சரி சார்”

“என்னடா சொல்லுவ உன் அண்ணன்கிட்ட ?”

“நீ பெரிய இவன் மாதிரி நடந்துக்குறியாம்..அதுமாதிரி நடக்க கூடாதுன்னு அருண் சார் (ஒவ்வொரு வார்த்தைக்கு முன்னாடி சார் போடலைன்னா அதுக்கு தனியா திட்டு விழும்) சொல்ல சொன்னாருன்னு சொல்றேன் சார்”

அதுக்குள்ள இன்னெருத்தன் “மச்சான்..இவன் பெரிய கில்லாடிடா.. நாம சொல்றத அப்படியே போய் அவன்கிட்ட சொல்லிடுவான் போல இருக்குடா”

“சரிடா..உனக்கு உன் வருங்கால அண்ணி பேரு தெரியுமாடா”

“தெரியாது சார்.”

“மகனே !! நாளைக்கு வரும்போது உன் அண்ணன்கிட்ட கேட்டு வந்து என்கிட்ட சொல்லனும்..சரியா ?”

அந்த நேரம்..என் அண்ணன் மேல என்ன கடுப்பு வரும்னு பாருங்க. அவன் பாட்டுக்கு ஒழுங்கா அவன் உண்டு படிப்பு உண்டுன்னு போய் இருந்தா..எனக்கு இந்த நிலைமை இருக்குமா ?

என் அண்ணன் கிட்ட எல்லா மேட்டரும் சொல்லுவேன் (அந்த அண்ணி மேட்டர கட் பண்ணிட்டு).

அதுக்கு அவன்

“இங்க பாரு..காலேஜ் கேம்பஸ்குள்ள நீ என்கிட்ட எதுவும் பேசாத..புரியுதா ?.. நான் வந்து எதாவது கேட்டா.இன்னம் அதிகமா ராகிங் பண்ணுவானுங்க”

இப்படி சொன்ன பிறகு நான் என்னத்த சொல்ல ??



மாட்டுனது – 3

சில சீனியர் பொண்ணுங்க காண்டீன்ல இருந்தாங்க.

வெளியில இருக்குற சீனியர் பசங்க

“ஏய்...பின்னோக்கி..இங்க வா (சீனியர்கள் கிட்ட ரொம்ப பேமஸ் ஆன பிறகு, random மா பிக் பண்ணாம, நேராவே என்ன புடிக்க ஆரம்பிச்சுட்டாங்க)”

“அந்த காண்டீன்ல உட்கார்ந்துகிட்டு இருக்குற பொண்ணுங்கள்ள யாருடா ரொம்ப அழகு ? .. நீ யாரயாவது சொல்லலைன்னா நீ போக முடியாது”

அடக்கடவுளே !!! மாட்டுனம்டா இன்னைக்குன்னு நினைச்சுக்கிட்டே “சார்..அந்த ரெட் கலர் சுடிதார் போட்ருக்கவங்க”

“அப்படியா ? சரி..அப்ப நீயே அந்த பொண்ணுகிட்ட போய் சொல்லிட்டு வா”

இது ஒப்பந்தத்துல இல்ல..இருந்தாலும் என்ன பண்றது ...

“ரெட் கலர் சுடிதார் போட்டுருக்குற அக்கா... நீங்க ரொம்ப அழகா இருக்குறீங்கன்னு, சார் சொல்ல சொன்னாரு”

“ஏன் நான் அழகா இல்லயா ?” – இது இன்னொரு அக்கா

“நீ போய் ஏன் இந்த வைலட் கலர் சுடிதார் போட்டுருக்கவங்க அழகா இல்லயான்னு கேட்டுட்டு வா”

அடப்பதருங்களா !!! எல்லாரும் ஒரு குரூப்பாத்தான் வேலை பார்த்துருக்காங்கன்னு அப்ப தான் தெரிஞ்சது


சில ராகிங் கேள்விகள்


”செக்கஸ்லோவாக்கியா...ஸ்பெல்லிங் சொல்லு”
(என் பேரயே எனக்கு இங்கிலீஷ்ல தப்பு இல்லாம எழுததெரியாது)

“முதலாம் பானிபட் போர் எந்த வருஷம் நடந்தது ?”
(பானிபட் போர்னா ?)

“தரையில படுத்து நீச்சல் அடி”

“உன் அப்பா பேர் என்ன ?”
“....”
“ஏன்டா..உங்க அப்பா பேர் சொல்லும் போது Mr. ன்னு சொல்ல மாட்டியா ?”

“உன் தாத்தா பேர் என்ன ?”

”Mr…..”

“ஏன்டா..உங்க அப்பாவுக்கே ஒரு Mr. ன்னா, உங்க தாத்தாவுக்கு 2 Mr போட்டு சொல்ல மாட்டியா ?”

“ ????”

----------------------------------------------------------------------------

“ நாயகன் பட காமிரா மேன் பேரு என்ன”

“P.C. Sriram”

“உன் அப்பா பேர் என்ன ?”
“....”
“ஏன்டா.. காமிரா மேன் பேர இனிஷியலோட சொல்லுவ..ஆன பெத்த அப்பா பேர இனிஷியல் இல்லாம சொல்லுவியா?”

-----------------------------------------------------------------------------
போதும்..போதும்..இத்தோட இந்த பதிவ முடிச்சுக்குறேன்...

6 பின்னூட்டங்கள்:

Jerry Eshananda said...

இப்ப உங்க கிட்ட மாட்டுனது நானும் தான்.

Eswari said...

'அண்ணி பேரும்', 'மஞ்சள் பையும்' நல்ல ராக்கிங்.

cheena (சீனா) said...

நானுன் பொறியியல் கல்லூரியில் ராகிங் செய்யப்பப்ட்டு / செய்து மகிழ்ந்தவன் தான் - அக்காலம் பொற்காலம் - திரும்ப வராத காலம்

Anonymous said...

hyyo annea kalakkitinga ungala waltharathukku yennidam varthayea illa ungal varthaila nadantha nigalva apdiyea kan munnadi niruthitinga .. miga inimai .. padichiktea irukkalam pola irukku ana neena mudichitingalae.. by plalamai virumbi

பின்னோக்கி said...

நன்றி பழமை விரும்பி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

Unknown said...

ஐயோ... ஐயோ.... எப்படிதான் யோசிப்பாய்ங்களோ!!
இதுக்குன்னே காலேஜ் வருவாய்ங்க போல!