29 September 2009

துப்பறியலாம் வாங்க பதிவர்களின் வெற்றி

எனது ஒவ்வொரு “துப்பறியலாம் வாங்க” பதிவையும், ஆயிரக்கணக்கான மக்கள் படிப்பது, வலையுலகினர் அனைவரும் அறிந்ததே !!.

இந்நிலையில் தமிழக அரசு என்னை, என் சேவைகளை கெளரவிக்கும் வகையில் புதியதாக “தனியார் தடயவியல் பரிசோதனைக் கூடம் (Private Forensic Laboratory)" தமிழகத்தில் தொடங்க அனுமதியளித்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பதிவர்கள் இந்த சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மகத்தானது. இப்பொழுது அரசும், நம் பதிவுகளை படிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்கணத்தில் மூத்த பதிவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.

இத்தொடரை முன்பே படிக்காமல் போனோமே என கவலை கொள்பவர்களின் நலன் கருதி இதோ முன்பு வெளியான 2 பதிவுகள்

ரத்தத்துளிகள் - துப்பறியலாம் வாங்க.

இல்லை,ஆமாம், இல்லை - துப்பறியலாம் வாங்க


ரொம்ப ஓவரா இருக்கா ??? என்னங்க பண்றது. காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையா, நான் “துப்பறியலாம் வாங்க” எழுதற நேரம் பார்த்து , தமிழக அரசு உண்மையாகவே இப்படி ஒரு தனியார் ஆராய்ச்சி கூடத்துக்கு அனுமதி குடுக்க முடிவு செஞ்சு இருக்கு..அத நான் பயன்படுத்திக்கிட்டேன் :-).

வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக்கனும். என்ன நான் சொல்றது ??

8 பின்னூட்டங்கள்:

சென்ஷி said...

:-)

தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே.. உங்கள் இடுகைகள் சுவாரசியமான தகவல்கள் பல அடங்கியிருக்கின்றன. பொதுவாய் மவுனப்பார்வையாளனாக வந்து சென்றுக் கொண்டிருப்பதால் அதிகம் எனது பெயர் மறுமொழி பகுதியில் இல்லாமல் இருக்கலாம். இனி தொடர்கிறேன்.

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

சென்ஷி said...

//என் சேவைகளை கவுரவிக்கும் வகையில் புதியதாக “தடயவியல் பரிசோதனைக் கூடம் (Forensic Laboratory)" தமிழகத்தில் தொடங்க முடிவு செய்துள்ளது //

இதுக்கு முன்னாடி இங்க ஃபாரன்சிக் லேபரட்டரி இருந்தது இல்லையா. முன்பே சென்னையில் ஐஜி அலுவலத்தில் தனியாக ஒரு கட்டிடத்தில் ஃபாரன்சிக் லேப் இருந்ததாக அறிந்திருக்கிறேன்.

பின்னோக்கி said...

சென்ஷி. நீங்கள் சொல்வது சரியென நினைக்கிறேன்.
http://timesofindia.indiatimes.com/news/city/chennai/TNs-first-pvt-forensic-lab-opens-in-city/articleshow/5066381.cms

இது முதல் தனியார் லேப். பதிவினை மாற்றுகிறேன்.

பின்னோக்கி said...

மாற்றிவிட்டேன்

சென்ஷி said...

:-)

நன்றி நண்பரே!!!

சந்தனமுல்லை said...

சுவாரசியமான இடுகைகள்...தகவலுக்கு நன்றி!! :-)

Saamuraai said...

good luck !!
keep going,,,

Eswari said...

ALL THE BEST