ராட்டினத்தில் உட்காரப்போகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா ?. ஏற்கனவே அதில் உட்கார்ந்து, சுற்றிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் பயம் கலந்த சந்தோஷத்தைப் பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்டு, தானும் அதுபோல விளையாட வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு.
ராட்டினத்தில் உட்கார்ந்த பிறகு முதல் முறையாக மேல் எழும்போது, உச்சந்தலையில் ஜிவ் என்ற உணர்வு. உயரமான இடத்திற்கு போன உடன் சிறிது நேரம் கூட அங்கு நிற்காமல், உடனே கீழ் நோக்கி பயணம். அப்போது அடிவயிற்றில் ஏற்படும் ஜிவ் என்ற உணர்வு. பல குழந்தைகள், இந்த அனுபவத்தை ரசித்து கைத்தட்டி ரசிக்கும்.
சில குழந்தைகள் பயத்தினால் அழ ஆரம்பித்துவிடும். நடுவிலே கீழே இறங்க தயாராகிவிடும். ராட்டினத்திலிருந்து இறங்கும் இரு விதமான குழந்தைக்கும் சந்தோஷமே மிஞ்சும். சில குழந்தைகள் போதும்டா சாமி என ராட்டினத்தில் ஏறாமலே அந்த இடத்தை விட்டு நகரும். பல குழந்தைகள் உடனே மறுமுறை ஏற ஆர்வம் காட்டும்.
வாழ்க்கையும் அப்படித்தான். வளரும் குழந்தைகளுக்கு வாழ்க்கை ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் புதிர். என்ன இருக்கும் என்ற பரபரப்பு. வாழ்க்கையில் மேல் எழும்போது சந்தோஷம். கீழே வரும் போது வருத்தம். சிலருக்கு இந்த வாழ்க்கையே போதும் என பாதி வழியில் இறங்கி விடுகிறார்கள். பலர், இந்த ஒரு அனுபவம் போதும் என முடிவெடுக்கிறார்கள். ஒரு சிலரே அடுத்த வாழ்க்கைப் பயணத்திற்கு தயாராக இருக்கிறார்கள்.
நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர் ???
2 பின்னூட்டங்கள்:
நல்ல பதிவுங்க,
நான் நாளைகளை நம்பிக்கையோடு எதிர்கொள்பவன்.
இன்பம் துன்பம் சேர்ந்ததுதான் வாழ்க்கை என உணர்ந்தவன்.
பெரிய இராட்டினத்தில் மீண்டும் மீண்டும் சுத்த ஆசை படும் குழந்தை நான்
Post a Comment