18 September 2009

ஆத்தாடி !! இது காத்தாடி !!


(விஜய டி. ராஜேந்தர் என்கிற டி.ராஜேந்தர், நடித்த சில பாடல்களை சமீபத்தில் பார்த்ததின் விளைவு, இந்த தலைப்பு)

விடுமுறைக்கு, கரூரில் இருந்த என் தாத்தா வீட்டுக்கு எல்லா பேரப்பிள்ளைகளும் (மொத்தம் 16 தேறும்) வந்துடுவோம். ஒவ்வொரு வயசு ரேஞ்சுலயும் ஒரு 3 பேர் இருப்பாங்க.பட்டம் செய்யிறத்துக்குன்னு அங்க ஒரு பெரிய இன்ஜினியர் குரூப்பே இருந்தது. இருக்குறதுலயே சிறியவர்கள் குரூப்ல நான். என் 3 வது அண்ணன் ஒரு குரூப்ல இருந்தான். என் 2 அண்ணன் இன்னொரு குரூப். இதுல எங்க குரூப்பின் முக்கிய வேலை, பேப்பர், கோந்து, விளக்குமாற்றுக் குச்சி சேகரிக்கறது. அடுத்த 2 குரூப்பும், கொஞ்சம் பெரிய மற்றும் ஆபத்தான, கஷ்டமான வேலைகளான, கத்திரிக்கோலால் பேப்பர் கட் பண்றது, ஒட்றது பார்த்துக்குவாங்க. சிறுவர்களை, அந்த மாதிரி ஆபத்தான (??!!) வேலைகளுக்கு அலவ் பண்ண மாட்டாங்க. பட்டம் தயார் செய்யறத்துக்கு மொட்டை மாடியில வேலை நடக்கும். எங்க குரூப், மாடிஅடிக்கடி ஏறி, இறங்கி, அவங்க கேட்குற பேப்பர், கோந்து, குடிக்க தண்ணி கொண்டு வரணும். இவ்வளவு வேலையும் ஒரு மிலிட்டரி கட்டுபாட்டோட நடக்கும்.

பேப்பர்ல தமிழ் பேப்பர் வேலைக்கு ஆகாது, ஏன்னா அது சாணித்தாள் எனப்படுகிற மட்டமான பேப்பர்ல பிரிண்ட் ஆகியிருக்கும். பட்டம் சரியா பறக்காது. அதனால, பக்கத்து வீட்டுல இருந்த வக்கீல் அங்கிள்கிட்ட போய் இங்கிலீஷ் பேப்பர் வாங்கி, பெரியவர்கள் கூட்டத்துல கொடுத்துட்டு, அவங்க பண்றத ”ஆ” ன்னு வேடிக்கை பார்த்துகிட்டு இருப்போம்.

பேப்பர சதுரமா கட் பண்ணி, ஒரு ஈர்குச்சிய நேரா, இன்னொரு குச்சிய வில்லு மாதிரி வளைச்சு, பிளாஸ்திரி சைஸ்ல கட் பண்ண பேப்பர வெச்சு நல்லா ஒட்டணும். பட்டத்தோட வால் ரெடி பண்ணி அதோட ஒட்டிட்டு, ஒரு 2 மணி நேரம் மொட்டை மாடியில காய வெச்சு எடுத்தா பட்டம் தயார். அதுக்கு சூஸ்திரம் போடணும், அதுக்கு எங்க தாத்தா தான் சரியான ஆளு. அவ்வளவு சூப்பரா தயார்பண்ணி கொடுப்பார்.

சாயந்திரம் ஒரு 5 மணிவாக்குல பட்டம் பறக்க விட ஆரம்பிப்போம். பட்டத்தோட வால தூக்கிக்கிட்டு வர்றது எங்க குரூப். பெரியவன் ஒருத்தன் கையில நூல் இருக்கும், அந்த குரூப்ப சோந்த இன்னொருத்தன் பட்டத்த தூக்கி உயரத்துல போடுவான். அந்த டைம் கரெக்ட்டா காத்து அடிச்சா, பட்டம் சல்லுன்னு மேல பறக்க ஆரம்பிச்சுடும். அப்புறம் சுண்டி, சுண்டி விட்டு, பட்டத்த மேல் காத்துல சேர்க்கறது வரை ஆண்டவன வேண்டிக்குவோம். அப்புறம் நூல்கண்டு தீர்ற வரை நூலை விட வேண்டியது தான்.

நல்ல உயரத்துக்கு போய் பட்டம் ஸ்டடி ஆன பின்னாடி, ஒரு தந்தி தயார் பண்ணுவோம். தந்தின்றது ஒரு சின்ன சதுரமான, நடுவுல ஓட்டைப் போட்ட பேப்பர். அதுல எங்க பேர் எல்லாம் எழுதி, நூல்ல கனெக்ட் பண்ணிவிட்டு, சுண்டி விட்டா, தந்தி மெதுவா பட்டம் நோக்கி போகும். சந்திரனுக்கு ராக்கெட் விடுறதுல கடைசிக் கட்டம் மாதிரி, இந்த தந்தி விடுறது. தந்தி பட்டத்து பக்கம் போனா மிஷன் வெற்றி. எங்க குரூப் ஆளுங்க கைத்தட்டணும். பெரியவர்கள் குரூப் விசில் அடிக்கும்.

அடுத்தது, பட்டத்த செய்கூலி சேதாரம் இல்லாம இறக்கணும். பட்டம் கீழே வந்த பின்னாடி, வால சுருட்டி (பட்டத்து வாலுங்க...எங்க வால இல்ல), பத்திரப்படுத்திட்டு, மாடிய விட்டு கீழே இறங்கிடணும். பெரியவர்கள் கூட்டம், தாத்தா கிட்ட போய், மிஷன் எவ்வளவு தூரம் வெற்றி, தந்தி ஒழுங்கா போச்சா ? இல்லையா ?, சூஸ்திரம் ஒழுங்கா வொர்க் ஆச்சா ?, இல்ல என்ன என்ன மாற்றங்கள் பண்ணணும்னு சொல்லுவாங்க.

கொஞ்சம் நாள் கழிச்சு, எதிர்த்த வீட்டு பசங்க பட்டம் விட ஆரம்பிக்க, எங்களுக்கும், அவங்களுக்கும், இந்தியா, பாகிஸ்தான் போர் ரேஞ்சுக்கு போட்டி நடந்தது. யார் பட்டம் ரொம்ப தூரம் போகுதுன்னு போட்டி. டீல் விடுறது அதாவது, அவங்க பட்டத்த, நூல்ல மாஞ்சா தடவி, நடுவானத்துல அட்டாக் பண்ணி, கட் பண்றதுன்ற அளவுக்கு எல்லாம் போட்டி போகலை. எங்க போறது ?, நிறைய நாள், ஒரு பத்து அடி பட்டம் பறந்தாலே பெரிய விஷயம் தான்.


நான் 6வ்து, என் 3 வது அண்ணன் 8 வது படிக்கும் போது, திருச்செந்தூர்ல இருந்தோம். அங்க பட்டம் எல்லாம் வேற ரேஞ்சுல பண்ணுவாங்க. சின்ன சின்ன மூங்கில் பட்டைய வெச்சு, கலர் காகிதத்துல, கோயில் கோபுரம் ஷேப்ல எல்லாம் பண்ணுவாங்க. நூலுக்கு பதிலா, மீன் வலை பின்றதுக்கு யூஸ் பண்ற நைலான் நூல், பட்டத்தோட வாலுக்கு பதிலா, கிணத்துல வாளி கட்டி தண்ணி எடுக்க யூஸ் பண்ற கயிறு, அதோட முனையில வெயிட்டுக்காக, சின்ன செடிகள் எல்லாத்தயும் வெச்சு பட்டம் வேற மாதிரி இருக்கும். கடற்கரை இருக்குறதால காத்துக்கு பஞ்சமே இல்லை. ஊருக்கு ஒதுக்குப்புறத்துல போய் பட்டம் விடுவோம். மேல் காத்துல ஏத்திவிட்டுட்டா, சாயங்காலம் வரை பட்டம் ஜம்முன்னு வானத்துல அப்படியே நிக்கும். நாங்க பெரிய கம்பத்துல நூல கட்டிவிட்டுட்டு, வீட்டுக்கு வந்து எங்க அப்பா, அம்மாகிட்ட பறக்குற பட்டத்த காண்பிப்போம். பட்டத்த சாயங்காலம் இறக்குறது ரொம்ப கஷ்டம், ஏல .. ஏலோ ஐலசான்னு மூச்ச தம் கட்டி நூல இழுத்து பட்டத்த இறக்குவோம்.

அதுக்கு அப்புறம் சமீபத்துல மெரீனா பீச்சுல காசு கொடுத்து பட்டம் வாங்கி அங்கயே கொஞ்சம் நேரம் விட்டதோட சரி.

7 பின்னூட்டங்கள்:

geethappriyan said...

அருமை நண்பர் பின்னோக்கி,
நல்ல அனுபவப் பகிர்வுங்க,
காத்தாடி விடுரது ஒன்னும் சுலபமில்லைன்னு புரியுது.
தமிலிஷ் ஒட்டுபட்டையை உங்க தளத்தில் வையுங்க பாஸ்,அப்போ தான் ஓட்டு போட தோதாயிருக்கும்.
இடுகை பாப்புலர் ஆகும்.
அப்போதான் நிறைய பேருக்கு தெரியும்.
ஓட்டுக்கள் போட்டாச்சு.
இன்னும் கலக்குங்க பாஸ்

geethappriyan said...

எப்போதும் தமிழ்மனத்தில் நீங்க ஒரு முதல் ஓட்டு போட்டுக்கோங்க,அப்போ தான் அங்கே தொடர்ந்து காட்டும்.

பின்னோக்கி said...

நன்றி கார்த்திக். நீங்கள் சொன்ன மாதிரி, தமிழ்மனம், தமிலிஷ் ஓட்டுப்பட்டையை சேர்த்துவிடுகிறேன்.

vasu balaji said...

நல்ல நனவு இடுகை. தொடருங்கள் கலக்கலாக

vethalan said...

Maanja podurathukku pakkathu veetu tube light -a udaichi veetula ammi kallula araichi udhai vanguna nianaippellam thirumba vanthittuthu....Athu oru porkaalam.

2 thadavai deel (deal) -la kathadi galiyana kaduppule blade-a katti vittu galatta pannurathum undu.

half sheet bana kathadi with gora --- romba famous.
Bombay kathadi romba thongum.

Keep it up karthi.

vethalan said...

2/3 sosthiram (soothiram) romba famous and reliable.
Peral (revolve) romba arumaiya vela seyyum with 2/3.

பின்னோக்கி said...

vethalan - உங்க அளவுக்கு பட்டம் பற்றி எனக்கு தெரியாது. அப்பாடி..பல தகவல்கள்..நன்றி