04 September 2009

அவர்களுடைய உலகம் – ஒரு விழிப்புணர்வு

இது கதை அல்ல நிஜம் !!காலம் – 1 நாள்

அருண்-சவிதா தம்பதிக்கு பிறந்த குழந்தையை பார்க்க பார்க்க சந்தோஷமாக இருந்தது. சிசேரியன் தான் பண்ணனும் என்ற டாக்டரின் முடிவையும் மீறி, சவிதாவிற்கு தொல்லை கொடுக்காமல், நார்மல் டெலிவரி.

“என்ன மாதிரி கருப்பா இருப்பான்னு நினைச்சேன். ஆன உன் கலர்ல பையன் இருக்கான் சவி”

“அருண் !! ஆரம்பிச்சிட்டீங்களா ? கலர்ல என்ன இருக்கு. பாப்பா ஹைல்த்தியா இருக்கான் இல்ல அது போதும்”

“என்ன பேர் வைக்கலாம் ?. உன் சாய்ஸ் கண்ணன் தானே ? அதுவே வெச்சுடுவோம்”


காலம் – 10 மாதம்

”அம்மா இன்னைக்கு மார்க்கெட் போனப்ப, ஒரு காலேஜ் பொண்ணு என்கிட்ட வந்து, கண்ணனை கொஞ்சிக்கட்டுமான்னு பெர்மிசன் கேட்டா ? தாராளமான்னு சொல்லி அவ கிட்ட கண்ணன கொடுத்தேன். அஞ்சு நிமிஷம் கொஞ்சிட்டுதான் கொடுத்தா” என்றாள் சவிதா.

“ஆமாண்டி சாயங்காலம் திருஷ்டி சுத்தி போடனும். இனிமேல எல்லார்கிட்டயும் குழந்தைய கொடுக்காத. உடம்புக்கு வந்துடப்போகுது”


காலம் – 1 வருடம் 3 மாதம்

”அம்மா ! கண்ணன் இன்னமும் பேச மாட்டேங்குறானே”

“நீயே லேட்டாதாண்டி பேசுன. நம்ம குடும்பத்துல எல்லா குழந்தையும் மெதுவாதான் பேச ஆரம்பிக்கும்”

”இல்லம்மா ! பக்கத்து வீட்டு நிவேதா வுக்கு 1 வயசு தான் ஆகுது. ஆனா இப்பவே என்ன பேச்சு பேசுறா தெரியுமா ?”

“பொண்ணுங்க சீக்கிரம் பேச ஆரம்பிச்சுடும். பசங்க கொஞ்சம் லேட்டாதான் பேசுவாங்க கவலைப்படாத !”


காலம் – 1 வருடம் 9 மாதம்


”அருண் ! கண்ணனுக்கு ஒன்னேமுக்கால் வயசு ஆச்சு. இன்னமும் நடக்க மாட்டேங்குறான்”

“சவி, பிசியோதெரபி டாக்டர் சொன்ன மாதிரி பண்ணுனா சீக்கிரம் நடந்துடுவான். நீ அவனுக்கு நல்ல பயிற்சி குடு. இந்த டாக்டர்ங்களுக்கு வேலை இல்ல, இந்த வயசுல இந்த மைல் ஸ்டோன் அந்த மைல் ஸ்டோன்னு படுத்துறாங்க”காலம் – 2 வருடம்

”என் பையன் டிவில எதாவது விளம்பரம் வந்தா, எந்த ரூம்ல இருந்தாலும் உடனே வந்து பார்ப்பான். விளம்பரம் முடிஞ்சதும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துடுவான். அதே மாதிரி, கண்ணா கண்ணான்னு எப்படி கூப்பிட்டாலும் திரும்பி பார்க்கமாட்டான். ஆனா அருண் பைக் சவுண்டு கேட்ட போதும், கேட்கிட்ட போய்டுவான்.” இப்படி பக்கத்து வீட்டு கமலாவிடம் சவிதா சொன்னாள்.


காலம் – 2 வருடம் 3 மாதம்

”அம்மா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. கண்ணன் இன்னம் என்ன அம்மான்னு கூட கூப்பிட மாட்டேன்கிறான். அவன் பேர் சொல்லி கூப்பிட்டா கூட திரும்ப மாட்டேன்கிறான்.. ப்ளே ஸ்கூல்ல சேர்க்கனும். இவன் இப்படி இருந்தான்னா எப்படிம்மா?. ஒரே முன்னேற்றம்னா இப்ப நடக்க ஆரம்பிட்ச்சுட்டான்”

“அழாத சவி, எதுக்கும் காது நல்லா கேட்குதான்னு டாக்டர்கிட்ட போய் செக் பண்ணிக்கலாம்”

”டாக்டர், இவனுக்கு காது சரியா கேட்குதான்னு தெரியலை”

“ஏன் அப்படி நினைக்கிறீங்க ?”

“அவன் பேர் சொல்லி கூப்பிட்டா திரும்ப கூட மாட்டேன்கிறான். சரியா பேச்சு வரலை. காது கேட்கலைன்ன, பேச்சு வராதுன்னு சொன்னாங்க. அது தான் உங்க்கிட்ட கன்சல்ட் பண்ணலாம்னு”

“இவன் நார்மல் டெலிவரியா. பிறந்த உடனே அழுதானா?”

“நார்மல் டெலிவரி டாக்டர். பிறந்த உடனே அழுதான். ரொம்ப ஹெல்த்தியான குழந்தைன்னு சொன்னாங்க”

“இவன் வயித்துல இருக்கும் போது உங்களுக்கு பிராப்ளம் எதாவது இருந்ததா ?”


அடுத்து டாக்டர் சொன்னது
“இங்க பாருங்க ! உங்க பையன் நார்மல் கிடையாது. இவனுக்கு உள்ள பிராப்ளம் பேரு – ஆட்டிசம் (Autism) . கவனக்குறைபாடுடன் கூடிய அதிகப்படியான செயல்பாடு (Attention Deficiency with Hyper Active Disorder). இப்படியே நீங்க விட்ட, இன்னம் சில வருஷம் கழிச்சு, நீங்கதான் அம்மா அப்பான்னு கூட இவனுக்கு தெரியாது. இது ஒரு மூளை செயல்படும் விதத்தில் உள்ள குறைபாடு. இத சரி பண்ண மருந்து மாத்திரை கிடையாது. நூத்துல 3 குழந்தைக்கு இந்த குறைபாடு வரும். இந்த பிராப்ளம் உள்ள குழந்தைங்க 2 வயசு வரை ரொம்ப நார்மலாத்தான் தெரிவாங்க. ஆன இவங்களுக்கு பேச்சு, நடக்கிறது இந்த மாதிரி விஷயங்கள் லேட்டாதான் வரும். இவங்க, தங்களோட தனி உலகத்துல இருப்பாங்க.. தனக்குள்ளயே பேசிக்குவாங்க. சராசரியா மற்றவர்களிடம் இவங்களால பேச முடியாது. சமூகத்துல இயல்பா மூவ் பண்ண முடியாது. நார்மல் ஸ்கூல்ல படிக்க வைக்க முடியாது. இதுக்குன்னு ஸ்பெஷல் ஸ்கூல் இருக்கு. ஆன இவன் நிலைமையில எந்த அளவு முன்னேற்றம் வரும்னு சொல்ல முடியாது”

இதைக் கேட்ட உடன், அருண் கதறி அழ ஆரம்பித்தான். சவிதா அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவர்களின் கண்ணனைப் பற்றிய 2 வருட கனவு தகர்ந்தது. கண்ணனின் முகத்தை பார்க்க, அங்கு நடப்பதை எதுவும் அறியாமல், ஒரு பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் கழித்து அருண் அதிர்ச்சியில் இருந்து மீண்டவனாய், சவிதாவைப் பார்த்தான். அவள் அழவில்லை. இவனுக்கு ஆச்சர்யமாக இருந்த்து. எதுக்கு எடுத்தாலும், அழுகின்றவள் அமைதியாக இருக்கிறாளே ?.

அவனுக்கு தெரியவில்லை. அன்றில் இருந்து அவளது, தன் மகனுக்கான போராட்டம் தொடங்கியது.
பின்குறிப்பு

- இது ஒரு விழிப்புணர்வு பதிவு. சில மருந்துவ ரீதியிலான தவறான தகவல் நான் இதில் குறிப்பிட்டிருக்கலாம். அதனால் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள படி எதாவது ஒரு குறை பாடு குழந்தைக்கு இருந்தால், அதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், உடனடியாக டாக்டரிடம் காண்பிக்க சொல்லவும். Autism and Attention Deficiency Hyper Active Disorder (ADHD) இப்பொழுது அதிகம் குழந்தைகளுக்கு வர ஆரம்பித்திருக்கிறது. இதனை சீக்கிரம் கண்டுபிடித்தால், அந்த குழந்தை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக வாய்ப்பு இருக்கிறது.

- இந்த குறைபாடு எதனால் வருகிறது என கண்டறியப்படவில்லை. ஆனால் கீழே கூறியுள்ள எதாவது ஒரு காரணத்தால் வர வாய்ப்பு இருக்கிறது.

o நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தல்.
o சூழ்நிலையில் உள்ள இரசாயன பொருட்களால்
o கருவுற்றிருக்கும்போது வரும் பிரச்சினைகளால்
o ஜீன் குறைபாடுகளால்
o குழந்தைக்கு போடும் சில தடுப்பு ஊசிகளால்

6 பின்னூட்டங்கள்:

சந்தனமுல்லை said...

நல்லதொரு விழிப்புணர்வு இடுகை பின்னோக்கி! பெற்றோரின் பொறுமையும், என்கரேஜ்மெண்ட்டும், புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பு இருந்தால் போதும்...

நிகழ்காலத்தில்... said...

முக்கியமானது கருப்பையை விளையாட்டு மைதானமாக நினைத்து சிலமுறை கருகலைப்பு, அல்லது அதற்கான மாத்திரை சாப்பிடுதல்

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

விழிப்புணர்வுமிக்க இடுகைக்கு என் வாழ்த்துக்கள்

Eswari said...

இதே கதை என் அத்தை பொண்ணுக்கும் நடந்திருக்கு. 10 வருஷம் கழித்து பிறந்த பையன் 10 வயது ஆகியும் இன்னும் உட்கார கூட முடியாமல், பேச தெரியாமல்..... அவர்கள் சொன்ன காரணம் 'ஆங்கிலம் ஆயுர்வேத மருந்துகளின் கலவையால் இப்படி நடந்துவிட்டது' என்று. இன்னொரு சவிதா என் அத்தை பொண்ணு லதா.

பின்னோக்கி said...

இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களின் ஓரே கேள்வி - “நான் என்ன பாவம் பண்ணுனேன் ?, என் பிள்ளை என்ன பாவம் செய்தது ?” இதற்கு நம்மிடம் பதில் இல்லை.
நம் பரிதாபம் இவர்களுக்கு தேவையில்லை. மேலை நாடுகள் சமூகம் இந்த பிள்ளைகளுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து நார்மலாக நடத்துகிறது. ஆனால் இங்கு நிலைமை வேறு. அஞ்சலி படத்தில் காண்பிப்பதைப் போல, நார்மல் குழந்தையின் பெற்றோர்கள், தன் பிள்ளை, இந்த மாதிரி பிராப்ளம் உள்ள குழந்தைகளுடன் படிப்பதை விரும்புவதில்லை.

cheena (சீனா) said...

அன்பின் பின்னோக்கி

அறியாமை - தாமதமான கண்டு பிடிப்பு - வாழ் நாள் முழுவதும் துயரம் - ஆண்டவா - காப்பாற்று இக்குழந்தைகளை

நல்ல நடையில் எழுதப்பட்ட இடுகை - நன்கு சென்று கொண்டிருந்த செயல்கள் சடாரென எதிர் பாராத வகையில் திருப்பத்தினைச் சந்தித்தால் ....... அப்பெற்றோர்களின் நிலையினை நினைக்கும் போது ..... வலிக்கிறது

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

மிக மிக பிடித்து இருந்தது இந்த கருத்துக்கள். பாருங்கள் எங்கள் நிகழ்காலம் எத்தனை நிதர்சனமான கருத்தை பதிய வைத்து இருக்கிறார்?