ஆடம் ஆஸ்போர்ன் (Adam Osborne) - இவரின் கம்பெனி ஆஸ்போர்ன் கம்பியூட்டர் கார்ப்பரேஷன், 1981 வருடம், ஒரு மாதத்துக்கு, சுமார் 10,000 கம்பியூட்டர் விற்றது. இதே வேகத்தில் இவர் கம்பெனி நடத்தியிருந்தால், இன்று பில் கேட்ஸ் விட பெரிய பணக்காரராக இருந்திருப்பார். இவருடைய கம்பெனி IBM யை விட மிகப் பெரியதாக இருந்திருக்கும்.
ஆனால், 1983 வருடம், ஒரு பார்ட்டியில், இவர் சொன்ன ஒரு தகவலால், சில மாதங்கள் கழித்து கம்பெனி திவால் ஆகிவிட்டது.
அந்த பார்ட்டியில் இவர், இன்னம் சில மாதங்களில், தன் கம்பெனி வெளியிடப்போகும் அடுத்த மாடல் கம்பியூட்டர் பற்றி புகழ்ந்து பேசினார். விளைவு, அப்போது மார்க்கெட்டில் இருந்த “Osborne 1”னை யாரும் வாங்கவில்லை. எல்லோரும், “Osborne 2”க்காக, காத்திருக்க ஆரம்பித்தார்கள். இதனால், ஏற்கனவே தயாரித்துவைத்தது விற்காமல், கம்பெனி மூடப்பட்டது.
அன்று இருந்த கம்பியூட்டர் மார்க்கெட் நிலவரப்படி, இந்த மாதிரி தகவல்களை அவர் சொல்லியிருக்க கூடாது. இப்பொழுது உள்ள நிலை வேறு. பெரிய நிறுவனங்கள், இன்னம் 1 வருடத்திற்கு பிறகு வரும் மாடல் பற்றி தற்போதே சொல்லுகின்றன.
இவர், அதற்கு பிறகு பெரிய அளவில் வர்த்தகத்தில் முன்னேற முடியவில்லை. 2003 ஆம் ஆண்டு, கொடைக்கானலில் மரணம் அடைந்தார்.
திருவள்ளுவர் சொன்ன “நா காக்க” எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.
1 பின்னூட்டங்கள்:
அருமை நண்பரே
இது வரை யாரும் சொல்லாத அறிந்திராத தகவல்.
நீங்க சொன்ன ஸ்பானிஷ் ப்ரிஸனரும் இதையே சொல்லும்.யாரிடமும் நம்பி கம்பெனி ரகசியத்தை வெளியிடக்கூடாது என்று.
ஆமாம் அவர் ஏன் கொடைகானல் வந்து சாகனும்?
சீப் டூர் வந்திருப்பார் போல...
பாவம்ங்க.
ஓட்டுக்கள் போட்டாச்சு.
Post a Comment