அசடு - 1
நான் காலேஜ் படிக்கும் போது, தினமும் 30 கிலோமீட்டர் பஸ்ல போகவேண்டியிருந்தது. பெரும்பாலும் உட்கார சீட் கிடைக்காது. அதனால் டிரைவர் சீட் பக்கத்துல இருக்குற இடத்துல போய் நின்னுக்குவேன்.அந்த இடத்துல நின்னா “முன்னால போ ! அவ்வளவு இடம் இருக்குல்ல ! உன் ஸ்டாப் வர்றப்போ நானே சொல்றேன்”. இந்த மாதிரி கண்டக்டர்கிட்ட திட்டு வாங்காம போகலாம்.ஒரு நாள், காலேஜ்க்கு இன்னமும் 5 கிலோமீட்டர் தான் இருந்துச்சு. தூரத்துல ஒரு சின்ன பையன், ஒரு 10 வயசு இருக்கும், பரிட்சை அட்டைய கையில வெச்சுகிட்டு நின்னான். அந்த இடத்துல பஸ் ஸ்டாப் எதுவும் கிடையாது. நான் டிரைவர் கிட்ட “அண்ணே ! ஒரு சின்ன பையன் அங்க நிக்குறான். பரிட்சைக்கு நேரம் ஆச்சுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் நின்னு அவன ஏத்திக்கிட்டு போகலாம்”. அன்னைக்கு டிரைவர் நல்ல மூட்ல இருந்தனால, அங்க நிறுத்துனார்.
அப்பதான் ஒன்ன கவனிச்சேன். அந்த பையன் ஒரு மரத்துக்கு அடியில நின்னுகிட்டு இருந்தான். அவன் பக்கத்துல கொஞ்சம் மறைவா, ஒரு வயசான அம்மா நின்னுகிட்டு இருந்தது. அது அவன் ஆயான்னு நினைக்கிறேன். பஸ் நின்னோன்ன, அவன், ஆயாவ ஏத்திவிட்டுட்டு..போகலாம் ரைட்..ரைட்ன்னான். அடக் குட்டிச்சாத்தான் !!! அவனுக்கு பாவம் பார்க்க போய், அவன் மாஸ்டர் பிளான் தெரியாமா, நான் மாட்டிகிட்டேனே !. பின்னாடி திரும்பி டிரைவர் என்ன பார்த்த பார்வையிருக்கே..அப்ப என் முகத்துல வழிஞ்சுது பாருங்க..அதுக்கு பேரு தான் அசடு.
அசடு - 2
போத்தீஸ்ல பர்சேஸ் பண்ணமுடியாம தோல்வியடைஞ்ச நான், சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் மாதிரி, RmKv க்குள்ளே நுழைஞ்சேன். போத்தீஸ் அளவுக்கு கூட்டமில்லை. பையனுக்கு பனியன் எடுக்கனும்னு பிளான். செலக்ட் பண்ணிட்டு, எங்க பில் போடனும்னு அந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட கேட்டேன். அப்பத்தான் அந்த பொண்ண பார்த்தேன். ஜீன்ஸ் பேண்ட், ஷர்ட், போட்டுகிட்டு, பார்க்குறத்துக்கு காலேஜ் படிக்குற பொண்ணுமாதிரி இருந்தா. சரி ! இப்ப எல்லாம், இந்த மாதிரி பொண்ணுங்களைத்தானே சேல்ஸ் கேர்ள்ளா போடுறாங்கன்னு நினைச்சுகிட்டே, பில் எங்க போடனும்னு கேட்டேன். ஆனா ! அவ அந்த டைம், இன்னொருத்தங்களுக்கு, துணிய காட்டிக்கிட்டு இருந்தா. நான் 2வது தடவைக் கேட்டதும், that counter sir !! ன்னு சொல்லிட்டு, வேலைய பார்த்தா !. நான் பில்லக் கட்டிட்டு, துணிய கலெக்ட் பண்ண போனா, அந்த சேல்ஸ் கேர்ள், கஸ்டமர் பக்கம் நிக்குறா !. அந்த பக்கம், RmKv uniform போட்டுகிட்டு இன்னொரு பொண்ணு நிக்குது. என்கிட்ட சேல்ஸ் கேர்ள் மாதிரி ஆக்ட் குடுத்த பொண்ணு, அவ பிரண்ட்ஸ்கிட்ட, சும்மா, அப்படி நடிச்சுகிட்டு இருந்துருக்கு. அது தெரியாம, நான் அவ கிட்ட கேட்டுட்டேன். அப்புறம், கடைய விட்டு வெளிய வர்ற வரை (சுமார் 10 நிமிஷம்), அந்த பொண்ணும், அது பிரண்ட்ஸ்சும், சிரிச்சுகிட்டே இருந்துச்சுங்க. அதுங்க சும்ம சிரிச்சாலே என்னய பார்த்து கிண்டல் பண்ணி சிரிச்ச மாதிரியே இருந்தது. பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தானே ?.. நீங்களே சொல்லுங்க ?? !!!
6 பின்னூட்டங்கள்:
சரியான கலாட்டாதான்
குட்டிப்பையன் செம ஸ்மார்ட்!!
//அதுங்க சும்ம சிரிச்சாலே என்னய பார்த்து கிண்டல் பண்ணி சிரிச்ச மாதிரியே இருந்தது. பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தானே ?.. நீங்களே சொல்லுங்க ?? !!!
//
:)))
கலக்கல்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
ரெண்டுமே சூப்பர் வழியல்ஸ்!
//இதெல்லாம் சகஜம் தானே ?.. நீங்களே சொல்லுங்க ?? //
நான் சொல்றேன், இது உங்களுக்கு
சகஜந்தான். அப்ப இன்னும் ஸ்டாக்
இருந்தா எடுத்து உடுங்க!
இதெல்லாம் சகஜம் தான் வாத்யாரே... நான் அசடு வழிந்ததே சொல்லனும்னா நிறைய இருக்கு.
கவலைப்படாதீங்க... கொஞ்சம் அழகும் அறிவும் இருக்கிறவங்களுத்தான் இந்த மாதிரி நடக்கும்.
Post a Comment