எதோ சினிமாவ பத்தின்னு நினைச்சு இங்க வந்தவங்க வசமா மாட்டுனீங்க.
இது சினிமாக் கதை இல்லை என் சொந்தக் கதை. 4 வது படிச்சுகிட்டு இருந்த போது நடந்த சம்பவம். நான் 1ஆவதுல இருந்து 10 வது வரை முதல் ரேங்க் தான் எடுத்தேன்.(+1, +2 என்னாச்சுன்னு கேட்குறவங்க, உங்க மெயில் ஐடிய எனக்கு குடுங்க. பத்தாவதுக்கு அப்புறம் நான் படிச்சதெல்லாம் பெரிய சோகக் கதை. அதை இந்த பதிவுல எழுதி அவமானப் பட முடியாது. தனியா உங்களுக்கு மட்டும் மெயில் பண்றேன். என்னது..? மெயில் ஐடி குடுக்க மாட்டீங்க, ஆனா இங்கயே சொல்லனுமா ?. சரி ரொம்ப சுருக்கமா சொல்லிடுறேன். 10 வது கணக்குல நான் 100க்கு 100 எடுத்தேன். அதே 100 மார்க் தான் நான் +2வுலயும் எடுத்தேன். இப்ப திருப்திதானே ?).
முதல் ரேங்க் மேல அப்படி ஒரு வெறி எனக்கு. எந்த காரணம் கொண்டும் அதை விட்டு கொடுக்க மாட்டேன். ஆன என் நண்பர்கள் 2 பேர், அவங்க பாஸ் ஆகனும்கறத்துக்காக, என்ன பரீட்சையில காண்பிக்க சொன்னாங்க. உட்கார்ந்து யோசிச்ச போது, நண்பர்கள் முக்கியம்னு பட்டுச்சு, ஆனா அதே சமயத்துல ஈயடிச்சான் காப்பி மாதிரி என்ன பார்த்து அப்படியே எல்லாத்தையும் எழுதிட்டானுங்கன்ன, என் 1வது ரேங்க்குக்கு பிரச்சினை வந்துடுமே ? என்ன பண்றது ?.
இங்க உங்களுக்கு ஒரு டவுட் வந்துருக்கும். என்னடா இவன், பாஸ் ஆகிற வழி தெரியாம கேட்குற பசங்க, எப்படி இவன் 1வது ரேங்க்குக்கு பிரச்சினையாக முடியும்னு. குட் டவுட்தான். எங்க மாத பரீட்சையில, மொத்தமே 10 கோடிட்ட இடங்களை நிரப்புங்கறது தான் கொஸ்டியன் பேப்பரே. நான் காண்பிக்கும் போது சில புத்திசாலிங்க 10க்கும் விடைய எழுதிட்டா, அவன்களும் 100, நானும் 100. அது சரிவராது.
ரொம்ப நேர யோசிப்புக்கு அப்புறம், ஒரு ஒப்பந்தத்துக்கு அவனுங்களை ஒத்துக்க வெச்சேன். ஒப்பந்தம் என்னென்னா, அவனுங்க 8 கொஸ்டியனுக்கு கரெக்ட்டா ஆன்சர் எழுதிடலாம். ஆனா கடைசி ரெண்டு கொஸ்டியனுக்கு அவங்க தப்பாத்தான் ஆன்சர் எழுதனும். ஆனா இதுலயும் ஒரு பிரச்சினையிருக்கு. அவனுங்க தப்பான பதில்னு நினைச்சு, சரியான பதில தெரியாத்தனமா எழுதிட்டானுங்கன்னா நான் அம்பேல். அதுனால, ஒப்பந்தத்துல ஒரு சின்ன கண்டிஷன் சேர்த்தேன். அதாவது, அவங்களேட பேப்பர நான் பார்த்து ஒ.கே சொல்லனும்.
இங்க உங்களுக்கு ஒரு டவுட் வந்துருக்கும். நான் எப்படி அவங்களோட பேப்பர பார்க்க முடியும் ? டீச்சர் அதுவரை சும்மா இருப்பாங்களா ?. இந்த டவுட் வந்தவங்களுக்காக என்னோட கிளாஸ் ரூம் பத்தி சொல்லனும். 10 க்கு 10 சைஸ்ல சிமெண்ட் தரை, எங்க கிளாஸ்க்கும் அடுத்த கிளாஸ்க்கும் நடுவுல ஒரு சின்ன தடுப்பு. இந்த ரூம்ல 40 பேர் உட்கார்ந்து படிக்கனும். என் பரீட்சை அட்டைய கொஞ்சம் நீட்டினா, அது அடுத்தவன் வயித்த குத்தும். அப்படின்னா, எந்த அளவுக்கு ஒவ்வொருத்தன் நடுவிலயும் இடம் இருக்கும்னு பார்த்துக்கோங்க.
கிளைமேக்ஸ்: நான் சொன்ன மாதிரியே பசங்க என்னைப் பார்த்து எழுதிட்டானுங்க. கடைசி கொஸ்டியன்: அக்பரின் மகனின் பெயர் என்ன ?. நான் ஒருத்தனுக்கு பாபர், இன்னொருத்தனுக்கு அவ்ரங்கசீப்னு சொல்லி (அந்த ரெண்டு பேரும் ஒரே மாதிரி தப்பான விடை எழுதுனா, டீச்சர் கண்டுபிடிச்சுடுவாங்க இல்லை. அந்த சின்ன வயசுலயே, என்ன ஒரு உலக அறிவு பாருங்க எனக்கு), அவனுங்க அத எழுதிட்டானுங்களான்னு செக் பண்ணி பார்த்துட்டு, கொடுத்தேன்.
இப்படியெல்லாம் பண்ணி 1வது ரேங்க் வாங்கனுமான்னு நீங்க கேட்கப்பிடாது. 1வது ரேங்க் வாங்கிறது ஒரு விதமான போதை. அனுபவிச்சவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும். இந்த 1வது ரேங்க் வாங்கும் படலம், நான் 8வது படிக்கிற வரை தங்குதடையில்லாம நிறைவெறுச்சு. 8வதுல வந்தான் ஒரு பெரிய வில்லன். அவன் பெயர் ராஜ்குமார். காலாண்டு பரீட்சையில, ரொம்ப ஈஸுயா அவன் என்ன முந்திட்டான். பின்னாடி ரொம்ப கடுமையா உழைச்சு ??? !!! அரையாண்டு பரீட்சையில 1வது ரேங்க் எடுத்தேன்.
5 பின்னூட்டங்கள்:
நல்ல வேளை நானெல்லாம் முதல் ரேங்க் எடுக்கலை..! ;)
/(அந்த ரெண்டு பேரும் ஒரே மாதிரி தப்பான விடை எழுதுனா, டீச்சர் கண்டுபிடிச்சுடுவாங்க இல்லை. அந்த சின்ன வயசுலயே, என்ன ஒரு உலக அறிவு பாருங்க எனக்கு),/
:)))
//அந்த சின்ன வயசுலயே, என்ன ஒரு உலக அறிவு பாருங்க எனக்கு//
:-)
நல்லா அனுபவங்களை பகிர்ந்தீங்க நண்பரே.
எந்த தயக்கமுமில்லாத ஃப்லோ.போரே அடிக்கலை.
எனக்கு எல்லாம் ராங்க் எடுப்பதே எட்டாக்கனி,இதுல போய் ஃபஸ்டு ராங்க் வேறயா?மூச்.
நான் நல்லா படிக்கற பசங்களை துன்புருத்தியிருக்கேன்.
அவனுங்களை வைத்தே கொட்ட விடுவார் வாத்தி.
க்லாஸ் விட்டதும் இரு மடங்கு கொடுத்தால் தான் தீரும் ஆத்திரம்.
கொசுவத்தி சுத்துவதில் தான் எத்தனை சுகம்?
1வது ரேங்க் வாங்கிறது ஒரு விதமான போதை.
you are correct. even now in my class we will write the marks and calculate totals before teachers do so.
Post a Comment