30 September 2009

தோசை 25000 ரூபாய்


வழக்கம் போல, எங்கள் காபி குடிப்போர் சங்கத்தை, ஆபீஸ் கேண்டீனில் கூட்டினோம். ஒருத்தர் “வி.ஜி.பி ல ஒரு போட்டி வெச்சுருக்காங்க. 1000 ரூபாய் கட்டிட்டு, 8 அடி தோசைய ஒருத்தர் சாப்பிடனும். பந்தயப் பணம் 25000 ரூபாய்” -ன்னு சொன்னார். சொன்னவரை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவரு, நான் ஆபீஸ்ல சேர்ந்த புதுசுல, ஒரு பஃபே பார்ட்டியில 8 தடவை பிளேட்டு முழுசா ஐட்டங்களை நிறைச்சு வெச்சு சாப்பிட்டத (என்னால 2 பிளேட்டுக்கு மேல சாப்டமுடியலை) பார்த்துருக்கேன். கபாப் பேக்டரிக்கு போனார்ன ஒரு 25 பன்னீர் டிக்கா சாப்டுவாரு. அதுவும், ஆர்டர் பண்றதுக்கு வெட்கப்பட்டு நிறுத்துவாரு. இல்லைன்னா எவ்வளவு சாப்டுவாருன்னு சொல்ல முடியாது.


அவரு தொடர்ந்தாரு “ஏன்டா ! 8 அடி தோசைன்னா இவ்வளவு பெரிசு இருக்குமா ?”
ன்னு தரையில போட்டிருந்த டைல்ஸ் அளவ வெச்சு கேட்டார். அதுக்கு நான், ஒரு 20 நார்மல் சைஸ் தோசை அளவுக்கு இருக்கும்னேன். அவ்வளவு தானா ? நான் நிறைய தடவை 25 தோசை சாப்பிட்டிருக்கேன். இது பெரிய மேட்டர் இல்லைன்னாரு. என்ன 2 வாளி சாம்பார் குடுத்து அது முழுசா குடிக்கனும்னு தோசை சாப்பிடும் போது சொல்ல மாட்டாங்கள்ள ? ன்னு கேட்டு பீதிய கிளப்புனாரு.

அப்புறம் அவர் தன்னோட சாப்பாட்டு பராக்கிரமங்களை சொல்ல ஆரம்பிச்சாரு. நீங்களே படிச்சு பாருங்க.

  • நான் காலேஜ்ல படிக்கும் போது, கொஞ்சம் லேட்டா மெஸ்க்கு போனேன். அப்ப இருந்த  பிரியாணி எல்லாத்தயும், என் தட்டுல போட்டுட்டு சாப்பிட ரெடியா இருந்தேன். அங்க வந்த பிரண்டு  என் தட்ட பார்த்துட்டு அதுல தான் பிரியாணி வைச்சுருக்காங்க, எடுத்துப் போட்டு சாப்பிடனும்னு நினைச்சு “மச்சி, அந்த பிரியாணி தட்ட என்கிட்ட தள்ளு..நான் கொஞ்சம் போட்டுக்குறேன்னான்”. அதுக்கு நான், “டேய்..இது என் தட்டுடா..நான் சாப்டுறதுக்கு வெச்சுருக்கேன்னு” சொன்னேன். அப்ப அவன் முகத்த பார்க்கனுமே..என்ன ஒரு அதிர்ச்சி ? !!
  • கொஞ்சம் வருசம் முன்னே சென்னையில, பாட்டம் லெஸ் கோக்ன்னு ஒரு கான்செப்ட் பீட்ஸா கார்னர்ல இருந்துச்சு. 25ரூபாய் கொடுத்து வாங்கிட்டா, டம்ளர் காலியாக ஆக, கோக் ஊத்திகிட்டே இருப்பாங்க. நார்மலா நான் ஒரு 12 டம்ளர் குடிப்பேன். அடிக்கடி அந்த கடைக்கு போறதால, என்னைப் பத்தி அங்க இருக்குறவங்களுக்கு தெரியும். ஒரு தடவை போய் கேட்கும் போது, சார் ! கோக் விலையேத்திட்டோம். இப்ப 40 ரூபாய்”.அதுக்கு நான் “ஒரு டீல் போட்டுக்குவோம். எனக்கு பழைய விலையான 25 ரூபாய்க்கு குடு, நான் ஒரு 4 டம்ளரோட நிறுத்திக்கிறேன்”. “இல்ல சார், கம்பெனி ரூல் அதுக்கு ஒத்துக்காது. 40 ரூபாய்க்கே வாங்குங்க”. நான் சரின்னு சொல்லிட்டு ஆர்டர் பண்ணி ஒரு 18 கிளாஸ் குடிச்சேன். எனக்கு சர்வ் பண்றவன். “சார்..இந்த மாதிரி எல்லாம் இருந்தா எங்களுக்கு கட்டுபிடியாகாது”. அதுக்கு நான் “ஆரம்பத்துலயே உங்ககிட்ட சொன்னேன்..நீங்க கேட்கலை. நான் என்ன பண்றது ?” கொஞ்சம் நாள் கழிச்சு அந்த பாட்டம்லஸ் கோக் நிறுத்திட்டானுங்க.
  • சங்கீதா ரெஸ்டாரண்ட் பக்கத்துல இருந்த தோசா கார்னர்ல அன்லிமிடெட் தோசை 125 ரூபாய்ன்னாங்க. வழக்கம் போல போய் ஒரு 18 தோசை தின்னேன். மேனேஜர், எனக்கு சர்வ் பண்றவங்களை கூப்பிட்டு “அவரு..தோசைய சாப்பிடுறாரா ? இல்ல வேஸ்ட் பண்றாரான்னு பாருங்கன்னாரு”. அதுக்கு சர்வர் “சார் !இவரு வேஸ்ட் எல்லாம் பண்றது இல்லை. முழுசா சாப்பிடுறார்ரு”ன்னு நொந்துபோய் சொன்னான.
  • இதே மாதிரி சென்னையில ரொம்ப நாள் முன்னாடி அன்லிமிடட் பீஸான்னு சொல்லியிருந்தானுங்க. நானும் என் பிரண்ட்ஸ்சும் போனோம்.ஆரம்பிக்கறத்துக்கு முன்னாடி, சர்வர் கோக் வெச்சுட்டு “சார் ! முதல்லயே கோக் குடிச்சுடாதிங்க, வயிறு நிரம்பிடும், பீட்ஸா சாப்பிட முடியாது”. “நாங்க அத பாத்துக்குறோம், நீ பீட்ஸா கொண்டுவாங்க”. சொன்னா நம்ப மாட்ட, 12.30 க்கு ஆரம்பிச்சோம், 2.45 சுமாருக்கு வந்து “சார் ! கிச்சன் மூட போறோம். நீங்க கடைசியா எதாவது ஆர்டர் பண்ணனும்னா பண்ணுங்க” “3 லார்ஜ் பீஸா”ன்னு சொன்னதும், அவன் தலையில அடிச்சுக்கிட்டு போய் கொண்டுவந்தான்.
இதனால் அறியப்படுவது, நீங்கள், வி.ஜி.பி தீம் பார்க் போகும் போது யாராவது ஒருவர் 25000 ரூபாய் தோசை போட்டியில வின் பண்ணியிருந்தா, அது இவராத்தான் இருக்கும் :).

11 பின்னூட்டங்கள்:

சென்ஷி said...

:-)

மிகப்பிரமாதமானவராக இருக்கிறார் உங்கள் நண்பர்!

ஜெட்லி... said...

ச்சே... இந்த மாதிரி நமக்கு எதுவும்
தெரியாம போச்சே...
உங்க நண்பர்கிட்ட இந்த மாதிரி
வேற எங்கையும் அன்லிமிடெட்
இருந்த கேட்டு சொல்லுங்க பாஸ்...

பின்னோக்கி said...

ஜெட்லி இப்போதைக்கு வி.ஜி.பி தான். கேட்குறத பார்த்த, நீங்களும் அங்க இருப்பீங்க போல :)

உங்கள் தோழி கிருத்திகா said...

antha technikka enakku kettu sollungalen boss :)

ISR Selvakumar said...

அந்த நண்பர் நீங்கள்தானா?

பின்னோக்கி said...

r.selvakumar - நெசமாத்தான் சொல்றேன். அது நான் இல்லை :)

Eswari said...

உங்கள் நண்பர் weight என்ன?

பின்னோக்கி said...

ஏங்க அவரு தினமும் இந்த மாதிரி சாப்பிடமாட்டாரு :) அதனால அவரு நார்மல் வெயிட்தான்

geethappriyan said...

கலக்கல்ங்க நண்பர் பின்னூக்கி,
காட்சி மனக்கண்ணில் வந்து போனது, நல்ல நகைச்சுவையான விவரிப்பு.
:)))))))))))))))))))))))))))))

Anonymous said...

mjm thaane!!! haa haa!!

ஷங்கி said...

இதை மாதிரி கொஞ்சம் பேரு இருக்கிறாங்க. எனக்குத் தெரிந்த ஒரு விஷயம் சொல்றேன். சில வருஷங்களுக்கு முன்னாலே எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்துல ஒரு குஜராத்காரர் ஒரு சாப்பாட்டு கடை ஆரம்பித்தார். சின்ன இடம்தான். ஏழு டாலர், அன்லிமிட்டெட் மீல்ஸ். நாலைஞ்சு வித கூட்டு, பொறியல், சப்பாத்தி, சாம்பார், ரசம், மோர், சாதம், அப்பளம். எல்லாமே அன்லிமிட்டெட், கேட்க கேட்க கொடுப்பார்கள். சப்பாத்தி நாலு அல்லது ஐந்து சாப்பிட்டுட்டு கொஞ்சம் சாதம், சாப்பிடுவோம். திருப்தியாயிருக்கும். ஆகா பக்கத்திலேயே நல்ல மெஸ் மாதிரி குறைஞ்ச விலையில சாப்பாடுன்னு அடிக்கடி போனோம். ஒரு மாசத்துக்கபுறம் போனா, விலை அதேதான். அன்லிமிட்டெட் அப்பிடீன்னு எழுதிப் போட்டிருந்ததை எடுத்துட்டாங்க. என்னன்னு விசாரிச்சப்ப, கட்டுப்படியாகலை அப்பிடீன்னாங்க. அப்புறம் இன்னொரு நண்பர்ட விசாரிச்சப்ப அவர் சொன்னாரு, “ஓ உனக்குக் கதையே தெரியாதா?! இதுக்குக் காரணமே நம்ம ஆளுதான்!” அப்பிடீன்னு சொல்லி எங்க அலுவலகத்துல வேலை பார்க்கிற ஒருத்தரைச் சொன்னாரு. அப்பிடி என்னதான்யா பண்ணாருன்னா கேட்டா, “ஆமாம், அப்புறம் டெய்லி போய் நாப்பது சப்பாத்தி சாப்பிட்டா அந்த ஆளு என்ன பாவம் பண்ணுவான் சொல்லு!” என்றார்.