திடீரென உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் மறைந்துவிட்டால், உலகில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும் ?. ஆலன் வைஸ்மேன் என்ற ஆங்கில அறிவியல் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தில், மனிதன் மறைந்து 2 நாட்களில் இருந்து, 500 கோடி வருடங்கள் வரை, உலகம் மாறும் விதங்களைப் பட்டியலிட்டுள்ளார். படிப்பதற்கு பிரம்மிப்பாக இருந்தது.
2 நாட்கள் – நியுயார்க், நிலத்தடி புகை வண்டி நிலையம் முற்றிலும் தண்ணீரால் மூழ்கிவிடும் (கடல் மட்டத்திற்கு கீழே இருப்பதால் தினமும், தண்ணீரை வெளியேற்றுகிறார்கள்)
7 நாட்கள் – உலகில் உள்ள அனைத்து அணு உலைகளும், குளிரூட்டும் சாதன வசதியில்லாததால், எரிந்து அல்லது உருகிவிடும்.
2 – 4 வருடங்கள் – பராமரிப்பு இல்லாததால், சாலைகள் மற்றும் கட்டிடங்களில் புல் மற்றும் சிறு மரங்கள் வளர்ந்து, கட்டிடங்களை சூழ்ந்துவிடும்.
5 வருடங்கள் – காய்ந்து போன மர சருகுகள், மின்னல் தாக்கத்தினால் பற்றி எரிந்து, அனைத்து நகரங்களும் தீயால் கருகிவிடும்.
20 வருடங்கள் – சிறு குளம் மற்றும் ஆறுகள் நகரங்கள் முழுவதும் பெருக்கெடுத்து ஓடும் ( நிறைய ஆறுகள், குளங்கள் மேல் தான் இன்றைய பல நகரங்கள் உருவாகியுள்ளன)
100 வருடங்கள் – அனைத்து கட்டிடங்களும் சீர்குலைந்து, மண்ணுக்குள் புதையுண்டுவிடும்.
300 வருடங்கள் – நியுயார்க் நகரில் உள்ள தொங்கும் பாலங்கள் உடைந்து போகும். ஆனால் ஆர்க் என சொல்லப்படுகிற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்ட பாலங்கள், இன்னும் பல வருடங்கள் இருக்கும் (அந்த காலத்தில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட அணைக்கட்டுகள், இன்னமும் இருப்பதன் ரகசியம் இதுதான் போல)
500 வருடங்கள் - நியுயார்க் நகரம் முழுவதும் காடுகளால் சூழப்பட்டுவிடும் (கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயமும் இப்படித்தான் பல நூற்றாண்டுகளாய் காடுகளால் சூழப்பட்டு, பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, சுமார் 500 வருடங்கள் கழித்து இருந்த நிலையைப் பார்க்கும் போது, நியுயார்க் நகர நிலை சரியாகவே இருக்கும் என நினைக்கிறேன்)
5000 வருடங்கள் – அணுக்கருவிகளை மூடியிருக்கும் உலோகம், துருப்பிடித்து சிதைந்து போவதால், புளுடோனியம் 239, காற்றில் கலக்கும்.
15000 வருடங்கள் – உலகின் பல பகுதி பனிக்கட்டியால் மூடப்பட்டு, புதிய பனிக்காலம் தொடங்கும்.
35000 வருடங்கள் – 20 ஆம் நூற்றாண்டில் இருந்து வாகனங்கள் வெளியிட்ட புகையில் இருந்த காரீயம் (lead) என்ற உலோகப்பொருள், காற்றில் கரைந்துவிடும்.
1 லட்சம் வருடங்கள் – சுற்றுசூழலில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு, மனிதன் தோன்றுவதற்கு முன் இருக்கும் அளவை எட்டிவிடும் (குறைந்து விடும்)
1 கோடி வருடங்கள் – செம்பால் (Bronze) செய்யப்பட்ட அனைத்து சிலைகளும், அப்படியே உருகுலையாமல் இருக்கும் (இதனால் தான் அந்த காலத்தில் கடவுள் சிலைகள் செம்பால் செய்யப்பட்டது போலும்).
100 கோடி+ வருடங்கள் – சூரியனின் ஒளி இன்னமும் பிரகாசமடையும். அதனால் பூமியின் வெட்ப நிலை அதிகரிக்கும்.சில பூச்சிகள் மற்றும் நுண்ணுயிரிகள், இந்த தட்ப வெப்ப நிலை மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு உயிர் வாழும்.
500 கோடி வருடங்கள் – சூரியன் வீங்கி இறக்கும் தருவாயில் அனைத்து கோள்களையும் சூரியன் ஆவியாக்கிவிடும்.
10,000 கோடி வருடங்கள்- சித்தி, அரசி போன்ற டிவி நிகழ்ச்சி ஒலி/ ஒளி அலைகள் அண்டவெளியில் பயணித்துக்கொண்டே இருக்கும்.
நன்றி - scientific american
8 பின்னூட்டங்கள்:
நினைத்து பார்கவே ஆச்சர்யமாக உள்ளது. நல்ல கற்பனை.
//நிறைய ஆறுகள், குளங்கள் மேல் தான் இன்றைய பல நகரங்கள் உருவாகியுள்ளன// True.
//பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி நடக்கும் போது தவறு களைய உதவும்.// Agreed.
Hmmm...
Good one!
-priyamudan
sEral
நல்ல கற்பனை.நல்ல பதிவு.
நல்லா பதிவு. வாழ்த்துக்கள். என்னுடைய இந்தப் பதிவையும் பாருங்கள்.
http://theerkadharisi.blogspot.com/2009/06/blog-post_22.html
அரிய தகவல்கள் - படங்களுடன் கூடிய தகவல்கள் - பகிர்ந்தமைக்கு நன்றி
புத்தகத்தின் பெயர் என்ன?
உண்மயிலேயெ டர்ராக்கும் தகவல்கள்.
நான் சமீபத்தில் நாஸ்ட்ரடாமஸ்(2009) என்னும் படம் பார்த்து விட்டு அல்லில் இருந்தேன்.
நல்ல எழுத்து நடை,எழுதி தமிலிஷில் வெளியிட்டு ஒட்டு பட்டயையும் இனையுங்கள்,படைப்பு நிரைய பேரை சென்று சேரும்.
அருமை நண்பர் பின்னோக்கி,
என் வலைப்பூவில் உங்கள் பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நீங்கள் சொன்ன படங்களில் சிலவற்றை பார்க்கவில்லை
அவற்றை டவுன்லோடு செய்ய ஆரம்பித்துவிட்டென்.
Post a Comment