02 September 2009

இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !!



கையுறை – 1

தென் சென்னை துப்புரவு பணியில் நீல் மெட்டல் என்ற நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.
இன்று காலை, இரண்டு துப்புரவு பணியாளர்கள், குப்பைத்தொட்டியில் இருந்த குப்பையை எடுத்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கைகளை கவனித்த போது, கையுறை இல்லாமல், வெறும் கைகளை உபயோகித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

நீல் மெட்டல் நிறுவனம் அவர்களுக்கு கையுறைகள் கொடுக்கவில்லையா ? அல்லது அந்த பணியாளர்கள் அதை அணியவில்லையா ? என தெரியவில்லை.

பன்றிக்காய்சல், சென்னையைக் கலக்கிக் கொண்டிருக்கும் போது, அவர்கள், இந்த மாதிரி வேலை செய்து கொண்டிருந்தது, கவலை அளித்தது.

கையுறை – 2

சிறிது நாட்களுக்கு முன், சுட்டி டிவியில், ப்ரெட் செய்யும் முறை பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். அதற்காக ஒரு ப்ரெட் செய்யும் தொழிற்சாலையில், எப்படி அதை உருவாக்குகிறார்கள் என்று காண்பித்தார்கள். பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. பின்னே, மாவு பிசைகிறார்கள், அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறார்கள், பிறகு சூடு படுத்தும் கருவியில் போடுகிறார்கள், நன்றாக வெந்ததை எடுத்து வெட்டும் கருவியில் வெட்டி அதை பேக் செய்தார்கள். இவ்வளவு வேலையையும் அவர்கள் கையுறை போடாமல் வெறும் கைகளால் செய்தார்கள். அதை பார்த்த பிறகு ப்ரெட் சாப்பிடும் ஆசையே போய் விட்டது.

வீடியோவில் படம் எடுத்து, டிவியில் போட போகிறார்கள் என தெரிந்தும், அவர்கள் கையுறை அணிய வேண்டும் என கவலைப்பட்டதாக தெரியவில்லை. ISO தர சான்றிதழைப் பெற்ற நிறுவனம் அது என நினைக்கிறேன்.

ஒவ்வொரு அரிசியிலும் அதை சாப்பிட போகிறவனின், பெயர் எழுதியிருக்கும் என சொல்லுவார்கள். அது போல ஒவ்வொரு ப்ரெட்டிலும் அந்த ப்ரெட் தயாரிப்பவரின் கைரேகை அதில் இருக்கும்.

ஒரு வேளை, அந்த ப்ரெட்கள் எல்லாம் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்காக தயாரிக்கப்பட்டிருக்கலாம் J. இதுக்கு பேர் தான் designer bread-அ??

7 பின்னூட்டங்கள்:

Eswari said...

//நீல் மெட்டல் நிறுவனம் அவர்களுக்கு கையுறைகள் கொடுக்கவில்லையா ? அல்லது அந்த பணியாளர்கள் அதை அணியவில்லையா ? என தெரியவில்லை.//

இதை ஏன் நீங்க அவர்களிடம் நேரிடையாக கேட்கவில்லை?

பின்னோக்கி said...

நான் காரில் போய்க்கொண்டிருந்தேன். அவர்கள் லாரி வழி மறித்துக்கொண்டிருந்ததால், நான் அங்கு நிற்கவேண்டியதாயிட்று.

Eswari said...

//பன்றிக்காய்சல், சென்னையைக் கலக்கிக் கொண்டிருக்கும் போது, அவர்கள், இந்த மாதிரி வேலை செய்து கொண்டிருந்தது, கவலை அளித்தது.//

கவலையோடு பொறுப்பும் இருந்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது அல்லவா? நான் சொல்வது தப்பா இருந்தா மன்னிக்கவும்.

பின்னோக்கி said...

காரை நிறுத்தி விட்டு அவர்களோடு பேச இயலவில்லை. அடுத்த முறை பார்த்தால் கண்டிப்பாக கேட்கிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் பின்னோக்கி

கையுறை கலாச்சாரம் நம் நாட்டில் மெதுவாக வந்து கொண்டு தான் இருக்கிறது, இங்கு உனவகங்களில் பரிமாறும் போது - திருமண வீடுகளீல் விருந்தில் பரிமாறும் போது பலரும் கையுறைகள் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். நிறுவனம் கொடுத்தால் கூட பயன் படுத்தும் விருப்பம் வளர வேண்டும் - அவர்களைப் பழக்க வேண்டும். காலம் மாறும் - கவலை வேண்டாம்

geethappriyan said...

துப்புரவுத் தொழிலாளர்கள் கண்டிப்பாக கையுறை அணியவேண்டும்
அந்த ப்ரெட் கம்பெனி மேல கேசே போடலாம்.
மாவு பிசைவதற்கு கால்களை உபயோகிக்காமல் போனார்களே.
(பொரி அப்படித்தான் அரிசியை ஊற வைத்து மிதிப்பார்கள் என கேட்டிருக்கிறேன்)

பின்னோக்கி said...

கார்த்திக் அந்த பொரி மேட்டர்.. நெஜமாத்தான் சொல்றீங்களா ?
என்னது காலா - நீங்களே சொல்லிக் குடுப்பீங்க போல இருக்கு :-)